திகில் திரைப்­ப­டத்தை ஒத்த பாக்தாதி மீதான தாக்குதல் சம்பவம் ; நடந்தது என்ன?

Published By: Vishnu

29 Oct, 2019 | 11:37 AM
image

வடமேற்கு சிரி­யாவில் அமெ­ரிக்க இரா­ணு­வத்தால் மேற்­கொள்­ளப்பட்ட தாக்­குதல் நட­வ­டிக்­கையின் போது  ஐ.எஸ். தீவி­ர­வாதக் குழுவின் தலைவர் தற்­கொலை செய்து கொண்­டுள்­ள­தாக அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் தெரி­வித்தார்.

ஐ.எஸ். தீவி­ர­வாத குழுத் தலைவர் அமெ­ரிக்க இரா­ணுவ மோப்ப நாயால் துரத்­தப்­பட்ட நிலையில்  சுரங்கப் பாதை­யொன்­றுக்குள் பிர­வே­சித்து தான் அணிந்­தி­ருந்த குண்­டுகள் பொருத்­தப்­பட்ட தற்கொலை மேலங்­கியை வெடிக்க வைத்து உயி­ரி­ழந்­துள்­ள­தாக டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளி­கை­யி­லி­ருந்து ஆற்­றிய உரையில் குறிப்­பிட்­டுள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப் பக்­தா­தியை இலக்­கு­வைத்துத் தாக்­குதல் நடத்தப்ப­டு­வ­தையும் அவர்   தனது 3 பிள்­ளை­க­ளையும் இழுத்துக் கொண்டு  சுரங்கப் பாதையில் பிர­வே­சித்து குண்டை வெடிக்க வைப்ப­தையும் வெளிப்­ப­டுத்தும் நேரடி ஒளிப­ரப்புக் காட்­சியை தொலைக்­காட்சி இணைப்பின் மூலம் ஒரு திகில் திரைப்­ப­டத்தை பார்ப்­பது போன்று கண்­டு­க­ளித்­துள்ளார்.  

மேற்­படி தாக்­குதல் நட­வ­டிக்கை தொடர்­பான  நேரடி  ஒளிப­ரப்பை அவ­தா­னிக்கும் முக­மாக  டொனால்ட் ட்ரம்ப்  அமெ­ரிக்க இரா­ணுவ ஜென­ரல்கள் மற்றும்  உப ஜனா­தி­பதி மைக் பென்ஸ் உள்­ள­டங்­க­லான அதி­கா­ரி­க­ளுடன் அமெ­ரிக்க நேரப்­படி கடந்த சனிக்­கி­ழமை மாலை 5.00 மணிக்கு வெள்ளை மாளி­கை­யி­லுள்ள  பிரத்­தி­யேக அறைக்குள் பிர­வே­சித்­துள்ளார். அதன்பின் அவர் ஏனை­ய­வர்­க­ளுடன் இணைந்து  நேரடி  தொலைக்­காட்சி  இணைப்பின் மூலம் சிரி­யா­வி­லான நிலை­மை­களை பார்­வை­யிட்­டுள்ளார்.

இந்­நி­லையில் அமெ­ரிக்க  இரா­ணு­வத்தின் விசேட படை­ யினர்  8 உலங்­கு­வா­னூர்­தி கள் மூலம்  ஈராக்­கி­லுள்ள விமானப் படைத்தளமொன்­றி­லி­ருந்து  ஒரு மணித்­தி­யாலம் 10 நிமிட அதி  அபாய­க­ர­மான பய­ணத்தை மேற்­கொண்டு சிரிய நேரப்­படி  நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை  நள்­ளி­ரவு தாண்டி சிறிது நேரத்­திற்குப் பின்னர் பக்­தாதி  மறைந்­துள்­ள­தாக  புல­னாய்வுத் தகவல் மூலம் அறியப்­பட்ட பின்­தங்­கிய பிராந்­தி­ய­மான பறி­ஷாவை வந்­த­டைந்­தனர்.

ஐ.எஸ். தீவி­ர­வா­திகள்  பலம் பெற்று விளங்­கிய அந்தப் பிராந்­தியத்தின்  மீது இரா­ணுவ உலங்­கு­வா­னூர்­திகள் வட்­டமிடு­வது புதிதான ஒன்­றல்ல என்­பதால் பிர­தே­ச­வா­சி­க­ளுக்கு  அந்த உலங்­கு­வானூர்­தி­களின் ஒலி வியப்­பெ­த­னையும் ஏற்­ப­டுத்­த­வில்லை. ஆனால் அவ்­வாறு உலங்­கு­வா­னூர்­திகள் வட்­ட­மிட்­டதைத் தொடர்ந்து  அந்தப் பகு­தியில்  உயி­ரி­ழப்­பு­களை ஏற்­ப­டுத்தக்கூடிய தாக்­கு­தல்கள் நடத்­தப்­ப­டு­வது வழ­மை­யா­க­வுள்­ளதால்  தமது உயிரைப் பாது­காத்துக்கொள்ள வேண்டும் என்ற  பீதியே பிர­தே­ச­வா­சி­க­ளுக்கு ஏற்­பட்­ட­தாக கூறப்படு­கி­றது.

அவர்­க­ளது அச்­சத்தை உறு­திப்­ப­டுத்தும் வகையில்  ஒரு சில நிமி­டங்களில் அந்தப் பிராந்­தி­யத்தில் சர­மா­ரி­யாக துப்­பாக்கி வேட்­டுக்கள் தீர்க்­கப்­பட்­டன.

மேற்­படி தாக்­குதல் நட­வ­டிக்­கையின்  போது அமெ­ரிக்க உலங்­கு­வா­னூர்­திகள்  சிரி­யாவில் ரஷ்­யாவின் கட்­டுப்­பாட்­டி­லுள்ள வான் பரப்பின் மீதாக பறந்­த­தாக  ஜனா­தி­பதி ட்ரம்ப் தெரி­வித்தார். இந்தத் தாக்­குதல் நட­வ­டிக்­கைக்­காக அமெ­ரிக்­கா­வுக்கு மேற்­படி வான் பரப்பை திறந்து விட்ட ரஷ்­யா­வுக்கும் வெற்­றி­க­ர­மாக தாக்­குதல் நட­வ­டிக்­கையை முன்­னெ­டுத்த அமெ­ரிக்க விசேட படை­யி­ன­ருக்கும்  அவர் பாராட்டைத் தெரி­வித்தார்.

இதன்­போது அமெ­ரிக்கப் படை­யினர்   இட்லிப் மாகா­ணத்தில் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுக்கு ஆத­ர­வான ஹாயத் தஹ்­ரீர அல் ஷாம் தீவி­ர­வா­தி­களின் கட்­டுப்­பாட்டின் கீழுள்ள  பின்­தங்­கிய பாறிஷ் கிரா­மத்தில் பக்­தாதி மறைந்­துள்­ள­தாக  நம்­பப்­பட்ட வீட்டின் மீது  உக்­கி­ர­மாக சூட்டுத் தாக்­கு­தலை நடத்­தினர்.

தொடர்ந்து உலங்­கு­வா­னூர்­தி­க­ளி­லி­ருந்து மோப்ப நாய் சகிதம்  கயிற்றின் மூலம் தரை­யி­றங்­கிய  அமெ­ரிக்க விசேட படை­யினர் துப்பாக்கிச் சூட்டை நடத்­திய வண்ணம் பக்­தாதி மறைந்­துள்­ள­தாக அறி­யப்­பட்ட வீட்டை நோக்கி விரைந்­தனர்.

இதன்­போது ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் பலர் சுட்டுக் கொல்­லப்­பட்­ட­துடன் சிலர்  தாமாக முன்­வந்து அமெ­ரிக்கப் படை­யி­ன­ரிடம் சர­ண­டைந்­தனர். இந்­நி­லையில்  அமெ­ரிக்கப் படை­யி­னரால் குறிப்­பிட்ட  வீட்­டி­லி­ருந்து  11 சிறு­வர்கள் எது­வித காய­மு­மின்றி பாது­காப்­பாக மீட்கப்­பட்­ட­தாக டொனால்ட் ட்ரம்ப் கூறினார்.

இந்தத் தாக்­குதல் நட­வ­டிக்­கையில் உயிர் தப்­பி­ய­வர்­களைவிடவும் இறந்­த­வர்­களே அதிகம் என  அவர் தெரி­வித்தார்.

இறந்­த­வர்­களில் பக்­தா­தியின் இரு மனை­வி­யரும் உள்­ள­டங்­கு­கின்­றனர். அவர்கள் குண்­டுகள் பொருத்­தப்­பட்ட தற்­கொலை மேலங்­கி­களை அணிந்­தி­ருந்த போதும் அந்த மேலங்­கிகள் வெடிக்­காத நிலையில் காணப்­பட்­ட­தாக அமெ­ரிக்க இரா­ணுவம் கூறு­கி­றது.

இந்தத் தாக்­கு­தலின் போது  அமெ­ரிக்கப் படை­யினர் அந்த வீட்டின் பிர­தான  வாயி­லி­னூ­டாக உள்ளே பிர­வே­சிப்­பதைத் தவிர்த்­துள்­ளனர். ஏனெனில்  அந்த வாயில் பகு­தியில்   தம்மை சிக்க வைக்க ஏதா­வது செயற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கலாம் என அவர்கள் சந்தேகம் கொண்­டி­ருந்­தனர். 

இதன் கார­ண­மாக  அவர்கள்  அந்த வீட்டின்  மதில் சுவ­ரொன்றின் ஒரு பகு­தியை வெடி வைத்துத் தகர்த்து உள்ளே பிர­வே­சித்­துள்­ளனர். அத்துடன் அவர்கள்  முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக தாம் வீட்டிற்குள் பிர­வே­சிப்­ப­தற்கு முன்னர் தம்­முடன் கொண்டு சென்ற ரோபோ­வொன்றை அந்த வீட்­டிற்குள் அனுப்பும் நட­வ­டிக்­கை யில் ஈடு­பட்­டனர்.

இந்­நி­லையில் அந்த வீட்டில் மறைந்­தி­ருந்த பக்­தாதி தனது 3 பிள்­ளைகள் சகிதம் தப்­பிச் செல்லும் முயற்­சியில் ஈடு­பட்­டுள்ளார். இதன்போது அவரை இரா­ணுவ மோப்ப நாய் சகிதம் அமெ­ரிக்க  விசேட படை­யினர்  துரத்திச் செல்­லவும்  அவர் சுரங்­க­மொன்­றுக்குள் பிள்­ளை­க­ளுடன் பிர­வே­சித்து தான் அணிந்­தி­ருந்த குண்­டுகள் பொருத்தப்­பட்­டி­ருந்த  தற்­கொலை மேலங்­கியை வெடிக்க வைத்து மர­ணத்தைத் தழு­வி­ய­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இந்த சம்­ப­வத்தில் அவ­ருடன் சென்ற அவ­ரது 3 பிள்­ளை­களும் மர­ண­ம­டைந்­துள்­ளனர். அத்­துடன் அவரை துரத்திச் சென்ற மோப்ப நாய் காய­ம­டைந்­துள்­ளது.

இந்த சம்­ப­வத்­திற்கு சிறிது நேரத்தில்  சுரங்­கத்திலிருந்த சட­லங்­களில் மேற்­கொள்­ளப்­பட்ட மர­பணு பரி­சோ­த­னையில்  பக்­தாதி உயிரிழந்துள்­ளமை உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக  தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

புல­னாய்வுத் தக­வல்­களின் பிர­காரம்  பக்­தாதி தொடர்ந்து இரு வாரங்க­ளாக  அமெ­ரிக்க விசேட படை­யி­னரின் கண்­கா­ணிப்பின் கீழ் இருந்­துள்ளார். அவரை இலக்கு வைத்து  இதற்கு முன்னர் மேற்கொள்ளப்­ப­ட­வி­ருந்த சுமார் 3 தாக்­குதல் நட­வ­டிக்­கைகள் அவர்  இடத்தை மாற்றிக் கொண்­டதால்  கைவி­டப்­பட்­டி­ருந்­தன.

இது­வரை காலமும் பக்­தாதி சிரிய– ஈராக்­கிய எல்­லை­யி­லேயே மறைந்­தி­ருப்­ப­தாக நம்­பப்­பட்­டது. ஆனால் அவர் தற்­போது கொல்லப்­பட்­டுள்ள இடம் அந்தப் பிராந்­தி­யத்­தி­லி­ருந்து வெகு தொலைவில் துருக்­கிய எல்­லைக்கு அண்­மையில் அமைந்­துள்­ளது.  பக்­தாதி பதுங்­கி­யி­ருந்த  வீடு இரு வாரங்­க­ளாக கண்­கா­ணிப்­பி­லி­ருந்­த­தா­கவும் அதனைத்  தாக்­கு­வ­தற்கு  அமெ­ரிக்க  விசேட படை­யினர் இரு மணி நேரத்தை எடுத்துக்கொண்­ட­தாக கூறப்­ப­டு­கி­றது.

2014 ஆம் ஆண்டில்  சிரிய மற்றும் ஈராக்­கிய  பிராந்­தி­யத்தில்  இஸ்­லாமிய தேச­மொன்று உரு­வாக்­கப்­ப­டு­வ­தாக  சுய பிர­க­டனம் செய்­த­தை­ய­டுத்து உல­க­ளா­விய ரீதியில் பெரும் பர­ப­ரப்பை பக்­தாதி ஏற்படுத்­தி­யி­ருந்தார்.

2011ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம்  தீவி­ர­வா­தி­யொ­ரு­வ­ராக  அமெரிக்­காவால் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக இனங்­கா­ணப்­பட்ட பக்தாதியை கைது­செய்ய அல்­லது கொல்­வ­தற்கு வழி­வ­குக்கும் தகவலை வழங்­கு­ப­வர்­க­ளுக்கு 10 மில்­லியன் டொலர் சன்­மா­னத்தை வழங்­கு­வ­தாக அமெ­ரிக்கா அறி­வித்­தி­ருந்­தது. 

தொடர்ந்து  2017 ஆம் ஆண்டு இத்­தொகை 25 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ராக  அதி­க­ரிக்­கப்­பட்­டது. இத­னை­ய­டுத்து அவரால் உரு­வாக்­கப்­பட்ட ஐ.எஸ். தீவி­ர­வாத குழுவின் உறுப்­பி­னர்­க­ளாலும்  அவர்­க­ளது ஆத­ர­வா­ளர்­க­ளாலும்  சிரியா மற்றும் ஈராக்கில் மட்­டு­மல்­லாது உல­க­ளா­விய ரீதியில் மேற்­கொள்­ளப்­பட்ட  ஒரு­தொகைத் தாக்­கு­தல்­களில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கானோர் கொல்­லப்­பட்­டுள்­ளனர்.

சிரி­யா­வி­லி­ருந்து  அமெ­ரிக்கப் படை­யி­னரை வாபஸ் பெறும் வரையில் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ரான போராட்டத் தில் அமெ­ரிக்­கா­வுக்கு உதவி வந்த  குர் திஷ் தலை­மை­யி­லான  சிரிய ஜன­நா­யகப் படை­யினர் தெரி­விக்­கை­யில்,  ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களும் பக்­தா­தியும் அதி­க­ளவில் நட­மாடும் இடங்கள் குறித்து விப­ரங்­களை அமெ­ரிக்­கா­வுடன் தாம் பகிர்ந்து  கொண்­டி­ருந்­த­தாக கூறு­கின்­றனர்.

பக்­தா­தியின் மரணம் குறித்து டொனா ல்ட் ட்ரம்ப் தெரி­விக்­கையில், அவர் ஒரு நாயைப் போலவும் கோழை­யொ­ரு­வரைப் போலவும் மர­ணத்தைத் தழு­வி­யுள்­ள­தாக குறிப்­பிட்­டுள்ளார்.

2011ஆம் ஆண்டு அமெ­ரிக்க விசேட படை­யி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல் நட­வ­டிக்­கை­யொன்றின்போது கொல்­லப்­பட்ட அல் கொய்தா தீவிரவாத குழுவின் முன்னாள் தலைவர் ஒஸாமா பின்லேடனின் சடலம் கடலில் புதைக்கப்பட்டது போன்று பக்தாதியின் சடலமும் கையாளப்படவுள்ளதாக  அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரொபேர்ட் ஓ பிறையன் தெரிவித்தார்.

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான எமது போராட்டத்தில் பக்தாதியின் மரணம் முக்கியத்துவமிக்க தருணமொன்றாகவுள்ளதாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்ஸன் டுவிட்டர் இணையத் தளத்தில் தன்னால் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்

வட சிரிய நகரான ஜராபுலஸிற்கு அருகில் அமெரிக்க இராணுவத்தால்  முன்னெடுக்கப்பட்ட பிறிதொரு தாக்குதல் நட வடிக்கையில்  பக்தாதியின் வலது கரமாக விமர்சிக்கப்படும்  ஐ.எஸ். பேச்சாளரான அபூ அல் ஹஸன் அல் முஹாஜிர்  கொல்லப்பட்டுள்ளதாக  ஐ.எஸ். சிரிய ஜனநாய கப் படையினர் தெரிவிக்கின்றனர். 

இந் நிலையில் ஐ.எஸ். தீவிரவாத குழுவின் புதிய தலைவராக மறைந்த முன்னாள் ஈராக்கிய ஜனாதிபதி  சதாம்  ஹுஸைனின்  இராணுவ அதிகாரியான அப்துல்லாஹ் கர்டாஷ் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48