கடற்படை முகாமுக்கு காணி அபகரிப்பு முயற்சி : பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது

Published By: Jayanthy

28 Oct, 2019 | 02:54 PM
image

(எம்.நியூட்டன்)

வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பொன்னாலை மாதகல் - வீதியில் தனியார் காணிகளை கடற்படை முகாமுக்கு அபகரிப்பதற்காக அளவீடு செய்ய வருகை தந்த அதிகாரிகள் மக்களின் எதிர்ப்பால் திரும்பிச் சென்றனர்.

சுழிபுரம் திருவடி நிலைப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான 4 ஏக்கர் காணி கடற்படை முகாமுக்கு சுவீகரிப்பதற்காக அளவீடு செய்யப்படவுள்ளதாக அறிந்த பிரதேச மக்கள் இன்று காலை 8 மணியளவில் அந்தப் பகுதியில் திரண்டனர்.

வலி.மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் நடனேந்திரன், கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் அங்கு வருகை தந்தனர்.

இந்த நிலையில் காணிகளை அளவீடு செய்வதற்காக நில அளவைகள் திணைக்கள அதிகாரிகள் இன்று முற்பகல் 9.30 மணியளவில் அங்கு வருகை தந்தனர்.

அவர்கள் அளவீட்டுப் பணிகளை முன்னெடுக்க மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர். அதனால் மக்களிடமிருந்து எழுத்துமூல மனுவைப் பெற்றுக்கொண்டு அதிகாரிகள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர் . அதிகாரிகள் மீள வரலாம் என எதிர்பார்க்கும் மக்கள் அந்த இடத்தில் திரண்டுள்ளனர் எனினும் அதிகாரிகள் வராத நிலையில் மக்கள் தமது இருப்பிடங்களுக்கு கலைந்து சென்றனர்.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டு பிரச்சார நடவடிக்கைகள் அதிகரித்துள்ள நிலையில் இத்தகைய நடவடிக்கையானது மக்கள் மத்தியில் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08