13 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது தேர்தல் பிரசார நடவடிக்கை!

Published By: Vishnu

28 Oct, 2019 | 09:56 AM
image

எட்டாவது ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான தேர்தலுக்கான பிரசாரங்கள் அடுத்த மாதம் 13 ஆம் திகதி நள்ளிரவு முடிவடையவிருக்கின்றன. 

இந்த ஜனாதிபதித் தேர்தலில் கடமைகளில் ஈடுபடவிருக்கும் அதிகாரிகளை இனங்காணும் நடவடிக்கையும், பயிற்சிகளைவழங்கும் பணியும் தற்போது இடம்பெறுவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தலுக்காக அதிகளவானோரின் பங்களிப்பு ஆணைக்குழுவிற்குத் தேவைப்படுகிறது. உதவித் தேர்தல் ஆணையாளர்களுக்கும், தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும் தேவையான வாகனங்கள் உட்பட ஏனையவசதிகளை வழங்குவது பற்றி ஆணைக்குழு கவனம் செலுத்தியிருக்கிறது. இவர்களுக்குத் தேவையானவாகனங்களை தனியார் துறையின் ஒத்துழைப்போடு வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. வாக்குப்பெட்டிகளும் புதிதாக கொள்வனவு செய்யப்பட உள்ளன.

ஜனாதிபதித் தேர்தலுக்காக 10 ஆயிரம் வாக்குப் பெட்டிகள் அவசியமாகும். கண்காணிப்புப் பணிகளுக்கென வெளிநாட்டுக் குழுக்களுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 2 ஆம் திகதி இந்தக் குழுக்கள் இலங்கைக்கு வரவிருக்கின்றன.

பொதுநலவாய அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியம் என்பனவற்றின் கண்காணிப்புக் குழுக்கள் ஏற்கெனவே இலங்கை வந்திருக்கின்றன.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக கட்சிச் செயலாளர்களுக்கும், தேர்தல் ஆணைக்குழுவிற்கும் இடையிலான கலந்துரையாடல் விரைவில் இடம்பெறவிருக்கிறது. உதவித் தேர்தல் ஆணையாளர்கள், தெரிவத்தாட்சிஅதிகாரிகள் ஆகியோரை கொழும்புக்கு அழைக்காது, அவர்களுக்கு தொழில்நுட்ப உதவியுடன் வழிகாட்டல்களையும், வழிநடத்தல்களையும் வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக தேர்தல்ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54