அல்பக்தாதியை இலக்கு வைத்து டெல்டா போர்ஸ் விசேட படையணி மேற்கொண்ட நடவடிக்கை

Published By: Rajeeban

27 Oct, 2019 | 10:08 PM
image

தமிழில் ரஜீபன்  

ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி ஒக்டோபர் 27 ம் திகதி சிரியாவின் இட்லிப்பிராந்தியத்தில், அமெரிக்காவின் விசேட படையணியான டெல்டா போர்சின் விசேட அணியினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டார்.

அல்பக்தாதி மறைந்திருக்ககூடிய இடத்தை சிஐஏயின் முகவர்கள் உறுதி செய்த பின்னரே இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.கூட்டு விசேட நடவடிக்கைகள் கட்டளைப்பீடத்துடன் இணைந்து இவர்கள் இந்த தாக்குதலை முன்னெடுத்துள்ளனர். இது அல்பக்தாதி கொல்லப்படுவதில் முடிவடைந்துள்ளது.

டெல்டா போர்சுடன் இணைந்து 160 வது விசேட நடவடிக்கைகளிற்கான வான்படையணியும் இந்த தாக்குதலை முன்னெடுத்துள்ளது.இந்த படையணி நைட்ஸ்டோக்கர்ஸ் என அழைக்கப்படுகின்றது.

இதனை தவிர சிஐஏயின் விசேட நடவடிக்கைகள் பிரிவும் இந்த நடவடிக்கைக்கு பங்களிப்பு வழங்கியுள்ளது.

இந்த நடவடிக்கை 2014 இல் ஆரம்பமான பக்தாதியைதேடும் ஐந்து வருட நடவடிக்கைகளை வெற்றிகரமாக முடித்துவைத்துள்ளது.

சிரியாவின் வடமேற்கு நகரமான இட்லிப்பிற்கு  அமெரிக்க ஹெலிக்கொப்டர்கள் சென்றுள்ளன. இந்த நகரத்திலேயே சிஐயின் முகவர்கள் அல்பக்தாதி இருக்கும் இடத்தை கண்டுபிடித்துள்ளனர்.

சிரிய அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ச்சிக்குழுவின் பிடியிலுள்ள இறுதி நகரமான இட்லிப்பிலேயே அல் பக்தாதியை இலக்கு வைத்த இறுதி நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

சிறிய மோதலிற்கு பின்னர் இட்லிப்பின் பரிசா கிராமத்திலுள்ள அந்த வீடு அமைந்துள்ள பகுதிக்குள் டெல்டா படையணியினர் நுழைந்துள்ளனர்.

அந்த பகுதியிலேயே பக்தாதி தனது தற்கொலை அங்கியை வெடிக்கவைத்து மரணித்துள்ளார்.

இந்த தாக்குதலை முடித்துக்கொண்டு டெல்டா படையணியினர் வெளியேறிய பின்னர் அந்த வீடு முற்றாக அழிக்கப்பட்டுள்ளது.

ஐஎஸ் தலைவரிற்கான நினைவிடமாக அந்த வீடு  எதிர்காலத்தில் மாறலாம் என்பதை கருத்தில்கொண்டே அதனை தகர்த்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04