முதலாளித்துவ முறையின் கீழ் பிரச்சினைகளை தீர்க்க முடியாது - பானி விஜயசிறிவர்த்தன செவ்வி

Published By: Priyatharshan

27 Oct, 2019 | 08:09 PM
image

மக்கள் விடுதலை முன்னணி எந்தவகையிலும் இடதுசாரிக்கட்சியல்ல. கடந்த ஆட்சி மாற்றத்திற்கு உதவிய சில கல்விமான்கள், பிரஜைகள் அமைப்பு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் ஜே.வி.பி.யை சூழ்ந்து முதலாளித்துவ முறையின் கீழ் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்ற மாயையை விதைக்கின்றனர் என்று சோஷலிச சமத்துவக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் பானி விஜயசிறிவர்த்தன வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியில் குற்றம் சாட்டியுள்ளார். 

அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,

கேள்வி: ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தீர்மானத்தை எடுத்தமைக்கான காரணம் என்ன?

பதில்: உழைக்கும் மக்கள் எதிர்கொண்டுள்ள இரு பிரச்சினைகளுக்கு அனைத்துலக சோஷலிச வேலைத் திட்டத்தை முன்வைத்து, தொழிலால் ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் இளைஞர்களை அணிதிரட்டுவதற்கே நாங்கள் போராடுகின்றோம்.

ஊலக நாடுகளைப் போலவே இலங்கையிலும் தொழிலால் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக, ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களில் இருந்து விடுபடுவது எப்படி என்பது முதலாவது பிரச்சினை. இதைப் பற்றி வேறு வேட்பாளர்கள் பேசுவதேயில்லை. முதலாளித்துவ முறைமையே முன்னெப்போதும் இல்லாதவாறு எதிர்கொண்டுள்ள வரலாற்று நெருக்கடிதான் இவ்வாறான பிரச்சினைகளின் தோற்றுவாய், என்பதை சோஷலிச சமத்துவக் கட்சி தெளிவுபடுத்துகின்றது.

சுகாதாரம், கல்வி உட்பட நலன்புரி செலவுகளை வெட்டித் தள்ளி, உலகில் எல்லா ஆளும் வர்க்கங்களும் இந்த நெருக்கடியின் சுமைகளை தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மீது சுமத்துவதோடு, அதற்கெதிராக கிளர்ந்தெழுகின்ற ஒடுக்கப்படும் மக்களின் ஜனாநயக உரிமைகள் நசுக்குகின்றன.

முதலாளித்துவம் வீழ்ச்சியை நோக்கி நகர்வதன் விளைவாக, ஏகாதிபத்திய சக்திகளுக்கிடையில் மோதல்கள் தீவிரமடைந்துள்ளன. அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்குமிடையிலும், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலும் மோதல்கள் தீவிரமடைந்துள்ளன. இதனால் அரசியல் நெருக்கடி உக்கிரமடைந்து, மூன்றாம் உலக அணுவாயுத யுத்த அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதற்கான தீர்வுகளையே நாங்கள் முன்வைக்கின்றோம். இதற்கான தீர்வு, முதலாளித்துவத்துக்குள் அல்லது தேசிய வரம்புக்குள் கிடையாது.

கேள்வி: பிரதான கட்சிகளின் செல்வாக்குக்கு அப்பால் இடதுசாரித்துவ சிந்தனையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியும் களத்தில் இறங்கியுள்ள நிலையில் உங்களுக்கு பெரும் சவால் இருப்பதை உணர்கின்றீர்களா?

பதில்: ஜே.வி.பி. எந்தவகையிலும் இடதுசாரிக் கட்சி அல்ல. 1960 களின் பிற்பகுதியில் அதன் ஆரம்பத்திலிருந்தே அது ஒரு குட்டி முதலாளித்துவ தேசியவாத தீவிர இயக்கமாகவே இருந்துவந்துள்ளது. சோஷலிச வாய்ச்சவடால் விடுத்தாலும் அதற்கும் மாக்ஷிசத்துக்கும் எந்த தொடர்புமில்லை. சோஷலிசத்தை ஸ்தாபிப்பதற்காக வரலாற்று ரீதியில் புரட்சிகர சக்தி தொழிலாள வர்க்கம் மட்டுமே என்பதை ஜே.வி.பி.யினர் நிராகரிப்பதோடு விவசாயிகளையே புரட்சிகர சக்தி என கூறினார்கள்.

1988-89 இல் பாசிச இயக்கத்துக்குள் இறங்கிய ஜே.வி.பி.யினர், தாம் அழைப்புவிடுத்த வேலைநிறுத்தங்களிலும் பிரசாரங்களிலும் பங்குபற்றுமாறு தொழிலாளர்களை துப்பாக்கி முனையில் இழுத்துச் சென்றனர். இதன்போது சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சி கம்யூனிஸ்ட் கழகத்தின் மூன்று தோழர்களைக் கொன்றனர். அத்தோடு தொழிலாளர் தலைவர்களையும் தொழிற்சங்கத் தலைவர்களையும் கொன்றனர்.

1980 களில் உற்பத்தி பூகோளமயமாக்கப்பட்ட போது ஏனைய நாடுகளிலான தேசியவாத இயக்கங்களைப் போலவே ஜே.வி.பி.யும் நேரடியாக ஏகாதிபத்திய கைக்கூலியாக மாறியது. 2015இல் அமெரிக்க யுத்த மூலோபாயத்துக்குள் இலங்கையை இருத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு அது உதவியது. ஜே.வி.பி. 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே முழு முதலாளித்துவ கட்சியாகிவிட்டது.

ஜே.வி.பி. அதன் தேர்தல் விஞ்ஞானபத்தை வெளியிடும் போது, பெரும் வர்த்தகர்களுக்கு அழைப்புவிட்டிருந்தது. ஹரி ஜயவர்தன போன்ற செல்வந்தர்கள் சேர்த்துவைக்கும் சொத்துக்களை அரசாங்கம் வரி தொகையாக ஈர்த்துக்கொள்வதாகவும் ஜே.வி.பி. ஆட்சிக்கு வந்தால் அதை நிறுத்தி, பெரும் வர்த்தகர்களுக்கு வரிச் சலுகை கொடுக்குமென்றும் அதன் வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க கூறுகின்றார்.

கடந்த ஆட்சி மாற்றத்திற்கு உதவிய சில கல்விமான்கள், பிரஜைகள் அமைப்பு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இப்போது ஜே.வி.பி.யை சூழ அணிதிரண்டுரூபவ் முதலாளித்துவ முறையின் கீழ் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்ற மாயையை விதைக்கின்றனர். இந்த சவாலை எதிர்கொண்டு,  நாங்கள் எங்களுடைய வேலைத் திட்டத்திற்காக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை வெற்றிகொள்ளப் போராடுகின்றோம்.

கேள்வி:- பல்லின இலங்கையில் இனப்பாகுபாடுகள் தொடர்கின்ற நிலையில் சமத்துவ சிந்தனை சாத்தியமாகுமா?

பதில்:- இலங்கை முதாலாளித்துவம் இனவாதத்தைப் பரப்புவதிலேயே தங்கியிருக்கின்றது. எனினும் தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சம்பளம், தொழில் நிலைமைகள், வேலை வாய்ப்பு, வீட்டு வசதி போன்ற இன்னும் பல புறநிலை தேவைகள் இருக்கின்றன. இவற்றின் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்களை எதிர்த்துப் போராட வேண்டிய புறநிலை அவசியம் உண்டு.

உதாரணமாக அண்மையில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களும் இன பாகுபாடுகளைக் கடந்து தங்கள் தேவைக்காக ஐக்கியப்பட்டுப் போராடினர். அந்தப் புறநிலை தேவையுடன் எமது வேலைத் திட்டம் பொருந்துவதால் அது சாத்தியமே. உலகம் முழுதும் இத்தகைய போராட்டங்களை ஒன்றிணைக்கவே நாம் உலகக் கட்சியாக இருந்து போராடுகின்றோம்.

கேள்வி:- நீதி, பொறுப்புக்கூறல் விடயங்கள் நீடிக்கின்ற நிலையில் இனங்களுக்கிடையிலான சமத்துவ சித்தாந்தம் பற்றிய கலந்துரையாடலை எவ்வாறு முன்னெடுப்பது?

பதில்:- உலகம் பூராகவும் உழைக்கும் மக்கள் சமூக ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர். அவர்கள் அனைவரும் ஒரே படகில் இருப்பதாக உணர்கின்றனர். உலக சனத்தொகையில் அரைவாசிப் பேரின் மொத்த வருமானத்தை விட அதிகளவான சொத்துக்களை 26 பெரும் பணக்காரர்கள் வைத்துக்கொண்டுள்ளனர்.

சிலரிடம் சொத்துக்கள் குவியும் அதேவேளை பெரும்பான்மையினர் வறுமைக்குள் தள்ளப்படுகின்றனர். உலகம் இரு துருவங்களாகப் பிரிந்துள்ளது. இவற்றில் இருந்து மீள்வதற்கு உலகத் தொழிலாளர் வர்க்கம் இன பாகுபாடின்றி வழி தேடிக்கொண்டிருக்கின்றது. இதுவே இன்று சமத்துவ சிந்தாந்தம் பற்றிய கலந்துரையாடல்களைத் திறந்துவிட்டுள்ளது.

கேள்வி:- உலக ஒழுங்கில் சோஷலிச கோட்பாடுகள் பின்நோக்கி நகரும் நிலையில், இலங்கை போன்ற வளர்முக நாடுகள் பொருளாதாரரூபவ் வர்த்தக மூலோபாயத்தினை கையாள முற்படுகையில் உங்களுடைய கொள்கைகளுடன் முரண்பாடான சூழலொன்று அல்லவா ஏற்படுகின்றது?

பதில்:- மாக்ஸிசம் தெளிவுபடுத்துவது போல், முதலாளித்துவத்தின் கீழ் சமூக சமத்துவமின்மை வளரும், தேசிய அரசுகளுக்கு இடையிலான மோதல் ஏகாதிபத்திய யுகத்தில் உலக யுத்தமாக உருவெடுக்கும்ரூபவ் முதலாளித்துவம் மேலதிக உழைப்புப் படையை வெளியேற்றி தொழிலாளர் வர்க்கத்தை குறைந்த கூலிக்கு சுரண்டுவதை உக்கிரமாக்கும்.

இன்று வளர்ச்சியடைந்துள்ள இந்த நிலைமை மாக்ஷிசத்தை மேலும் மேலும் வரலாற்று பொருத்தமுடையதாக்கியுள்ளது. உதாரணமாக சோஷலிசம் என்ற சொல் தடைசெய்யப்பட்டதாக கருதப்பட்ட அமெரிக்காவில் அரைவாசிக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இன்று சோஷலிசத்தை விரும்புகின்றனர்.

கேள்வி:- இதற்கு மேலதிகமாக, இலங்கையை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்வதற்கும், இனங்களுக்கிடையிலான புரிதலை ஏற்படுத்துவதற்கும் தங்களிடத்தில் இருக்கும் செயற் திட்டங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்?

பதில்:- இலங்கையை தனித்து முன்னேற்றுவது என்பது பொய். அது உலக உற்பத்தியை மனிதர்களின் தேவைக்கானதாக மாற்றுவதோடு பிணைந்துள்ளது. அதன் மூலம் மட்டுமே மனித வாழ்க்கையை மேம்படுத்த முடியும். ஆகவே தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் தொழிலாளர்கள் மட்டுமன்றி, உலகத் தொழிலாள வர்க்கமே இன மத பேதங்களைக் கடந்து ஒரு வர்க்கமாக ஐக்கியப்பட வேண்டியது அவசியமாகும்.

நேர்காணல் ஆர்.ராம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13