சர்வதேச அழுத்தங்களுக்கு அடிப்பணிந்து கேள்விக்குறியாக்கப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு 

Published By: Vishnu

27 Oct, 2019 | 07:26 PM
image

(செ.தேன்மொழி)

அரசாங்கம் நாட்டின் பாதுகாப்பை கடுகளவும் கவனத்தில் கொள்ளாது சர்வதேச அழுத்தங்களுக்கு அடிப்பணிந்து தேசிய பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். 

மாத்தளையில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறுனார்.

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியது உங்களுக்கு நினைவிலிருக்கும். மீண்டும் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதவாறு தேசிய பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தோம். பயங்கரவாதம் எந்த வகையிலும் நாட்டில் தலைத்தூக்காதவாறு தேசிய பாதுகாப்பு கட்டமைப்பை ஏற்படுத்தியிருந்தோம். ஆனால் தற்போதைய அரசாங்கம் அனைத்தையும் சீரழித்து விட்டது. .

மறுப்புறம் அரசசார்பற்ற சர்வதேச நிறுவனங்களின் பங்குதாரர்களாக செயற்படும் இந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் இராணுவத்தின் கௌரவத்தை சீரழித்து விட்டனர். புலனாய்வு துறையினர் மீது போலி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சிறையிலிட்டனர். புலனாய்வு துறை , பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு உள்ளிட்ட துறைகளை தேசிய பாதுகாப்பை மையப்படுத்திய செயற்படுத்தினோம். 

ஆனால் தற்போதைய அரசாங்கம் அரசியல் பழிவாங்கல்களை முன்னெடுக்கவே இந்த துறைகளை பயன்படுத்துகின்றது. எனவே தான் தேசிய பாதுகாப்பு கேள்விக்குறியானது. ஆகவே இவை எமது ஆட்சியில் சீர்செய்யப்படும் நாட்டினதும் நாட்டு மக்களினதும் பாதுகாப்பை முன்னினலைப்படுத்தியே எமது செயற்பாடுகள் அமையும் என்றும் இதன்போது கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31