உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் பாரம்பரிய காதல் நினைவுச் சின்னமான தாஜ்மஹால் தற்போது பூச்சிகளின் தாக்குதலால் நிறம் மாறிவருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பளிங்கு போன்று காட்சியளித்த இந்த தாஹ்மஹாலின் நிறம் தற்போது பச்சை நிறமாக மாறி வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கிக்கின்றது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளதோடு தாஜ்மஹாலின் “இயற்கை அழகு” பாதுகாக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

உத்தர பிரதேச பொதுப்பணித் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தொல்பொருள் துறை ஆகியவற்றை சேர்ந்த மூத்த அதிகாரிகளுக்கு தாஜ் மஹாலை ஆய்வு செய்து, நிற மாற்றத்திற்கான உண்மையான காரணத்தை கண்டுபிடித்து அதற்கு விரைவான தீர்வு வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.