ஏழு மாவட்­டங்­க­ளுக்கு எச்­ச­ரிக்கை நீடிக்­கி­ற­து.!

Published By: Robert

24 May, 2016 | 02:16 PM
image

நாட்டில் நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக கேகாலை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை மற்றும் தாழ் நில வெள்ள எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

கண்டி , இரத்தினப்புரி , குருநாகல் , நுவரெலியா , மாத்தளை , களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்தும் மழை வீழ்ச்சி பதிவாகின்றமையினால் பொது மக்களுக்கு மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தங்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சப்ரகமுவ மாகாணத்தில் மாத்திரம் 52 பாடசாலைகள் கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளது. அத்துடன் கேகாலை மாவட்டத்தில் தெரனியகலை , தெஹியோவிட , ருவண்வெல்ல , யட்டியந்தொட்டை , புலத்கொஹ{ப்பிட்டடிய ,அரநாயக்க , கேகாலை , வறக்காப்பொல , ரம்புக்கனை , மானெல்லை மற்றும் கலிகமுவ ஆகிய பகுகளுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் விடுக்கப்பட்டடிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் கேகாலை மாவட்டத்தில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்கின்றமையினால் இயற்கை அனர்த்தங்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு வளிமண்டலவியல் தினைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வளிமண்டலத்தில் நிலவிய தாழமுக்கம் தற்போது கடுமையான நிலையில் இருந்து விலகியுள்ள நிலையில் , தென்மேல் பருவப்பெயரச்சி தொடர்கின்ற நிலையில் நாட்டில் சில பகுதிகளில் காற்றுடன் மழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தில் மாத்திரம் இது வரையில் 21 ஆயிரத்து 134 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 57 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 109 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. அரநாயக்க மற்றும் புலத்கொஹ{ப்பிட்டிய ஆகிய பகுதிகளிலேயே கூடுதலான உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது.

(லியோ நிரோஷ தர்ஷன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22