முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி காலமானார்

Published By: Priyatharshan

27 Oct, 2019 | 09:58 AM
image

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வி கதிராமன் தங்கேஸ்வரி தனது 67வது வயதில் காலமானார்.

நோய்வாய்ப்பட்டிருந்த அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயம் கடந்த சனிக்கிழமை 26.10.2019 அவரது உயிர் பிரிந்தது.

தங்கேஸ்வரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு 2004–2010 வரை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவத்தைப் படுத்தினார். 

அதற்கு முன்னர் அவர் மாவட்டக் கலாசார உத்தியோகத்தராகப் பணியாற்றினார்.

2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் வேட்பாளராகத் தெரிவு செய்யப்படாததால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

அதன்பின்னர் ஈபிடிபி கட்சியின் அமைச்சராகவிருந்த டக்ளஸ் தேவானந்தாவின் பாரம்பரிய கைத்தொழில்கள் சிறு கைத்தொழில்கள் அபிவிருத்தி அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளராக இவர் 5 வருடங்கள் கடமையாற்றினார்.

களனிப் பல்கலைக்கழகத்தில் தொல்லியலில் சிறப்புப் பட்டம் பெற்ற தங்கேஸ்வரி, இலங்கையின் தொல்பொருளியல் வரலாற்று ஆய்வுகளிலும் ஈடுபட்டு சமய நூல்களையும் எழுதியிருந்தார்.

அதேவேளை 1992 – 1995 வரை கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைப் பகுதியில் பகுதிநேர விரிவுரையாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

எழுத்தாளரான இவரின் முதலாவது ஆக்கம் 1972 ஆம் ஆண்டில் ‘தீபாவளி’ எனும் தலைப்பில் ‘வீரகேசரி’ பத்திரிகையில் பிரசுரமானது. 

இவர் தொடர்ந்தும் ஆய்வுக் கட்டுரைகள், கலாசாரக் கட்டுரைகள், பாமர மக்களின் பரம்பரைக் கதைகள் போன்றவற்றை ஒப்சேவர், தினகரன், வீரகேசரி, தினக்குரல் போன்ற தேசியப் பத்திரிகைகளிலும், இலங்கையிலிருந்து வெளிவரும் சஞ்சிகைகள், நினைவிதழ்களிலும் எழுதிவந்தார்.

இறுதிக் கிரியைகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44