எங்கள் மகள் பிரித்தானியா செல்வார் எங்கள் வறுமை மாறும் என நினைத்தோம்- கொள்கலனிற்குள் சிக்கினார் என கருதப்படும் யுவதியின்தந்தை

Published By: Rajeeban

26 Oct, 2019 | 03:18 PM
image

நாங்கள் பணம் வழங்கிய ஆள்கடத்தல்காரர்கள் எங்கள்  மகளை எப்படி பிரிட்டனிற்கு கொண்டு போய் சேர்க்கப்போகின்றோம் என்பதை தங்களிற்கு தெரியப்படுத்தவில்லை என  பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட கொள்கலனிற்குள் சிக்கி இறந்திருக்கலாம் என கருதப்படும் வியட்நாம் யுவதியின் தந்தை தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் சிஎன்என் மேலும் தெரிவித்துள்ளதாவாது.

 வியட்நாமின் ஹாடின் பிராந்தியத்தில்  சிறிய வீடொன்றில் அவர்கள் வசிக்கின்றனர் அவர்கள் பொருளாதார வசதியற்றவர்கள்,மாதாந்தம் 400 அமெரிக்க டொலர்கள்வரையே சம்பாதிக்கின்றனர்.

ஆனாலும் நாங்கள் எங்கள் மகள் பம் தி டிரா மையை பிரிட்டனிற்கு அனுப்புவதற்கு அவசியமான பணத்தை சிரமப்பட்டு சேகரித்தனர் என குறிப்பிடுகின்றனர்.

அவர் பிரிட்டன் செல்வார் எங்களது வாழ்க்கை மாறும் என நினைத்தோம் என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆனால் அந்த பயணம் துயரத்தில் முடிவடைந்துள்ளது போதோன்றுகின்றது.  உடல்களுடன் மீட்கப்பட்ட கொள்கலனிற்குள் அவர்களது மகளும் இருந்திருக்கலாம் என்ற அச்சம் வெளியாகியுள்ளது.

வியாழக்கிழமை இரவு அவர்களின் மகள் குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளார், குறிப்பிட்ட கொள்கலன் பிரிட்டனிற்குள் காணப்பட்ட நேரத்திலேயே அவர் அதனை அனுப்பியுள்ளார்.

பாம் தனது தாய்க்கு குறுஞ்செய்திகளை அனுப்பினார்,இறுதியாக அனுப்பிய குறுஞ்செய்தியில் தன்னால் சுவாசிக்கமுடியாமல் உள்ளது என தெரிவித்தார்

அம்மாவும் அப்பாவும் என்னை மன்னிக்கவேண்டும்,நான் வெளிநாட்டு செல்ல முயன்றவிதம் வெற்றியளிக்கவில்லை நான் உங்களை நேசிக்கின்றேன்,என்னால் சுவாசிக்க முடியாததால் நான் மரணித்துக்கொண்டிருக்கின்றேன் என அவர் தனது குறுஞ்செய்தியில் தெரிவித்துள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர்களில் அவரும் இருக்கின்றாரா என்பது உறுதியாகவில்லை ஆனால் மோசமான விடயம் இடம்பெற்றிருக்கலாம் என அவரது குடும்பத்தினர் அஞ்சுகின்றனர்.

வியட்நாமிய அதிகாரிகளுடன் இணைந்து உடல்களை அடையாளம் காணும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பிரிட்டன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கொள்கலனிற்குள் மீட்கப்பட்டவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பதையோ அவர்களது பெயர் விபரங்களையோ அதிகாரிகள் இன்னமும் உறுதி செய்யவில்லை.

வியட்நாமிலிருந்த சிஎன்என்னிற்கு கருத்து தெரிவித்துள்ள யுவதியின் தந்தை குறிப்பிட்ட குறுஞ்செய்தி கிடைத்ததும் தாங்கள் கடும் துயரத்தில் சிக்குண்டோம் என தெரிவித்துள்ளார்.

எனது மகளிற்கு அவர் இறக்கப்போகின்றார் என்பது தெரிந்திருக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் எனது பாசத்துக்குரிய மகளையும் பணத்தையும் இழந்துவிட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

தாங்கள் பணம் வழங்கிய ஆள்கடத்தல்காரர்கள் தங்கள் மகளை எப்படி பிரிட்டனிற்கு கொண்டு போய் சேர்க்கப்போகின்றோம் என்பதை தங்களிற்கு தெரியப்படுத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களின் மகன் வியட்நாமிலிருந்து சீனா வழியாக பிரான்ஸ் சென்றுள்ளார்,ஆனால் அதன் பின்னர் அவருடனான தொடர்புதுண்டிக்கப்பட்டது என தந்தை தெரிவிக்கின்றார்.

அதன் பின்னர் தனது மகள் காணாமல்போயுள்ளதாக முறைப்பாடு செய்ததாக அவர் குறிப்பிடுகின்றார்.

ஆள்கடத்தல்காரர்கள் இது பாதுகாப்பான பாதை என  தெரிவித்தார்கள் விமானம் மூலமும் கார் மூலமும்  ஆட்கள் பயணிப்பார்கள் என தெரிவித்தார்கள் என்கிறார் அவர். 

இது தெரிந்திருந்தால் நான் எனது மகளை அனுமதித்திருக்கமாட்டேன் எனவும்  தந்தை தெரிவிக்கின்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52