மன்னாரில் 85 குடும்பங்கள் இடம் பெயர்வு- தற்காலிக முகாம்களில் தங்கவைப்பு

Published By: Daya

25 Oct, 2019 | 02:36 PM
image

மன்னார் மாவட்டதில் கடந்த ஒரு வார  காலமாக பெய்து வரும் கடும் மழை காரணமாக இது வரை 85 குடும்பங்களை சேர்ந்த 320 பேர் தற்காலிகமாக இடம் பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்படுள்ளனர்.


மன்னார் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மழை நீர்வடிந்து செல்ல முடியாத நிலையில் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் புகுந்துள்ளது .


குறிப்பாக ஜீவபுரம், ஜிம்றோன் நகர் ,சாந்திபுரம் ,எமில் நகர் சாவற்கட்டு, எழுத்தூர் போன்ற பகுதிகளில் மழை நீர்  முழுவதுமாக நிரம்பியுள்ளதன் காரணமாக மக்கள் தங்கள் வதிவிடங்களை விட்டு வெளியேறிய நிலையில் மன்னார் பிரதேச செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 


இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உணவு குடிநீர் என்பன மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பிரதேச செயலகத்தின் ஊடாக ஒழுங்கு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது.


அதே நேரத்தில் இடம் பெயர்ந்த குடும்பங்களில் அதிகளவானவர்கள் சிறுபிள்ளை களை கொண்ட குடும்பத்தினர் என்பதுடன் தொடர்சியாக மழை பெய்யும் பட்சத்தில் தாழ் நில கிராமங்களில் வசிக்கு எனைய மக்களும் இடம் பெயர வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்பது குறிப்பிடதக்கது .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19