அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா  அறி­விப்பு ! யாருக்கும் ஆத­ரவோ எதிர்ப்போ இல்லை

Published By: Daya

25 Oct, 2019 | 10:54 AM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல்  உலமா  எந்­த­வொரு  அரசியல் கட்­சிக்கும் ஆத­ர­வா­கவோ எதி­ரா­கவோ செயற்­ப­டு­வ­தில்லை. அதனால் ஜம்­இய்­யத்துல் உல­மாவின் பெயரைப் பயன்­ப­டுத்தி யாரும் அர­சியல் பிர­சா­ரங்­களில் ஈடு­பட வேண்டாம் என அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா தெரி­வித்­துள்­ளது.

எதிர்­வரும் நவம்பர் 16ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதி தேர்தல் தொடர்­பான அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் வழி­காட்டல் எனும் தலைப்பில் அதன்  பிர­தித்­த­லைவர் அஷ்-ஷைக் ஏ.ஸீ. அகார் முஹம்­மதின் கையெ­ழுத்தில் விடுக்­கப்­ப­டுள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

நாட்டில் கடந்த 90 வரு­டங்­க­ளுக்கும் மேலாக அர­சி­ய­லுக்கு அப்பால் நின்று சமூக, சமய, சன்­மார்க்கப் பணி­களை மேற்­கொண்டு வரும் ஒரு சிவில் அமைப்பே அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா என்­பதை சக­லரும் அறிவர். அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா எந்­த­வொரு வேட்­பா­ள­ருக்கும் எந்­தவோர் அர­சியல் கட்­சிக்கும் ஆத­ர­வா­கவோ எதி­ரா­கவோ செயற்­ப­டு­வ­தில்லை. எனவே ஜம்­இய்­யதுல் உல­மாவின் பெயரைப் பயன்­ப­டுத்தி அர­சியல் பிர­சா­ரங்­களில் யாரும் ஈடு­பட வேண்டாம்.

பிர­பஞ்­சத்தின் அத்­தனை விட­யங்­களும் அல்­லாஹ்வின் நாட்­டப்­ப­டியும் திட்­டப்­ப­டி­யுமே நடந்­தே­று­கின்­றன என்­பதில் அசைக்க முடி­யாத நம்­பிக்கை வைத்­துள்ள நாம், தேர்­தலில் யார் வென்­றாலும் அது இறை­வனின் முடிவு என்­பதை உளப்­பூர்­வ­மாக ஏற்றுக் கொள்­வது எமது கட­மை­யாகும். ஈரு­லக வாழ்வின் வெற்­றியும் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்­களைப் பின்­பற்றி வாழ்­வ­தி­லேயே தங்­கி­யி­ருக்­கி­றது என்­பதை புரிந்து வைத்­துள்ள நாம்,தேர்தல் காலத்­திலும் நபி­வழி நின்றே செயற்­பட வேண்டும்.

மேலும முஸ்­லிம்­களின் மிகப் பெரும் ஆயுதம் பிரார்த்­த­னை­யாகும். இந்த சந்­தர்ப்­பத்தில் எமது தாய் நாட்டின் ஒளி­ம­ய­மான எதிர்­கா­லத்­திற்­கா­கவும் குடி­மக்­க­ளது நல்­வாழ்­வுக்­கா­கவும் அதிகம் பிரா­ரத்­திப்போம். இறை­யு­த­வியைப் பெற்றுத் தரும் நற்­க­ரு­மங்­களில் எம்மை ஈடு­ப­டுத்திக் கொள்வோம்.

ஜன­நா­யக நாடொன்றில் எவரும் எந்தக் கட்­சியும் தேர்­தலில் போட்­டி­யி­டலாம். தான் விரும்பும் வேட்­பா­ளரை ஆத­ரிப்­பது அவ­ரவர் உரி­மை­யாகும். இந்த தேசத்தின் குடி­மக்­க­ளா­கிய முஸ்­லிம்கள் தமது வாக்­கு­ரி­மையை பய­னுள்ள விதத்தில் பயன்­ப­டுத்திக் கொள்ள வேண்டும். ஒரு­போதும் வாக்­க­ளிப்­பதில் அசி­ரத்­தை­யுடன் நடந்து கொள்­ள­லா­காது.

எமது வாக்­கு­களைப் பெறு­ப­வர்கள் நாட்டை நேசிக்­கின்ற, குடி­மக்­களின் நல­னுக்­காக உழைக்­கின்ற, நாட்டைக் கட்­டி­யெ­ழுப்பும் உணர்வும் வல்­ல­மையும் மிக்­க­வர்­க­ளாக இருப்­பதை உறு­திப்­ப­டுத்திக் கொள்­ளவும் வேண்டும். பொது­வா­கவும் தேர்தல் காலங்­களில் குறிப்­பா­கவும் முஸ்­லிம்கள் வார்த்­தை­ய­ள­விலோ செய­ல­ள­விலோ எந்­த­வொரு குற்றச் செயல்­க­ளிலும் ஈடு­படக் கூடாது. வதந்­தி­களைப் பரப்­புதல்,வீண் விதண்­டா­வதாம், சண்டை- சச்­ச­ர­வுகள் வன்­செ­யல்­களில் ஈடு­ப­டு­வது ஈமானைப் பாதிக்கும் அம்­சங்கள் என்­பதைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

ஆலிம்கள் வெள்­ளிக்­கி­ழமை மிம்பர் மேடை­களில் எந்­த­வொரு வேட்­பா­ள­ருக்கும் அர­சியல் கட்­சிக்கும் சார்­பா­கவோ எதி­ரா­கவோ பேசு­வதை முற்­றாக தவிர்த்துக் கொள்­வ­துடன் மேற்­கு­றிப்­பிட்ட வழி­காட்­டல்­களை கடை­பி­டித்­தொ­ழு­கு­மாறு பொது மக்­க­ளுக்கு வழி­காட்ட வேண்டும். மேலும் பள்­ளி­வா­சல்­களை தேர்தல் பிர­சா­ரங்­க­ளுக்கோ அத­னுடன் தொடர்­பு­பட்ட வேறு விட­யங்­க­ளுக்கோ பயன்­ப­டுத்தக் கூடாது.

தேர்தல் முடி­வ­டைந்த பின்னர் நிதா­ன­மாக நடந்து கொள்­வது கட­மை­யாகும். முஸ்லிம் சமூகம் எப்­போதும் ஒற்றுமையையும் சகவாழ்வையும் பேணும் வகையில் முன்மாதிரியாக நடந்து கொள்ளவேண்டும். ஆலிம்கள் மஸ்ஜித் நிர்வாகிகள் புத்திஜீவிகள் பொதுவாகவும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் மாவட்ட மற்றும் பிரதேச கிளை அங்கத்தவர்கள் குறிப்பாகவும் மேற்சொன்ன அறிவுறுத்தல்களுக்கமைய பொது மக்களை வழிநடத்த வேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள் விடுக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33