வெள்ளை வேன்கள் வேண்­டுமா? தீர்மானம் மக்கள் கைகளில் ரணில்

Published By: Daya

25 Oct, 2019 | 10:21 AM
image

(நா.தனுஜா)

புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­சவின் வெற்றி என்­பது ஐக்­கிய தேசியக் கட்­சியின் வெற்றி மாத்­தி­ர­மல்ல, மாறாக முழு நாட்­டி­னதும் வெற்­றி­யாகும். ஆனால் கோத்­த­பாய ராஜ­பக் ஷ வெற்­றி­பெற்றால் அது அவ­ரு­டை­யதும், மஹிந்த ராஜ­பக் ஷ, பசில் ராஜ­பக் ஷ மற்றும் நாமல் ராஜ­பக் ஷ உள்­ள­டங்­கிய தனி­யொரு குடும்­பத்தின் வெற்­றி­யாக மாத்­தி­ரமே அமையும் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க  தெரி­வித்தார்.  

வட­கொ­ழும்பைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் வகையில் பாலத்­துறை பிர­தே­சத்தில் புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் காரி­யா­ல­யத்தைத் திறந்­து­வைக்கும் நிகழ்வு நேற்று வியா­ழக்­கி­ழமை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் நடை­பெற்­றது. அலு­வ­ல­கத்தைத் திறந்­து­வைத்து உரை­யாற்­று­கை­யி­லேயே பிர­தமர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறி­ய­தா­வது:

இம்­முறை ஜனா­தி­பதித் தேர்­தலில் சஜித் பிரே­ம­தாஸ ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஊடாகக் கள­மி­றங்­க­வில்லை. மாறாக புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் ஊடா­கவே கள­மி­றங்­கி­யி­ருக்­கின்றார். எனவே இத்­தேர்தல் எமக்கு மாத்­தி­ர­மன்றி ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் தொடர்­பு­ப­டா­தோ­ருக்கும் மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகும். கடந்த 2015 ஆம் ஆண்டில் நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு ஆத­ர­வ­ளித்து மஹிந்த ராஜ­ப­க்ஷ­வையும், அவ­ரு­டைய குடும்­பத்­தையும் புறக்­க­ணித்­த­வர்கள் அனை­வரும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆத­ர­வா­ளர்கள் அல்ல. அதில் பல்­வேறு கட்­சி­களின் ஆத­ர­வா­ளர்கள் உள்­ள­டங்­கி­யி­ருந்­தார்கள்.

2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்­றி­ய­டைந்த போதிலும் எம்மால் சிறு­பான்மை தேசிய அர­சாங்கம் ஒன்­றையே அமைத்­துக்­கொள்ள முடிந்­தது. அந்த அர­சாங்கம் உடைந்து அழிந்து போகும் என்றும், மீண்டும் மஹிந்­தவின் கைக­ளுக்கே ஆட்சி போய்­விடும் என்றும் பலர் கூறி­னார்கள். ஆனால் அந்த அர­சாங்­கத்தில் காணப்­பட்ட பல்­வேறு சவால்­க­ளுக்கு மத்­தி­யிலும் நாம் நாட்டை முன்­நி­றுத்­திப பல்­வேறு செயற்­திட்­டங்­களை முன்­னெ­டுத்தோம்.

அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்­தத்தின் ஊடாக நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்­களைக் குறைத்தோம். நீதி­மன்­றத்தின் சுயா­தீ­னத்­தன்­மையை உறு­திப்­ப­டுத்­தினோம். தகவல் அறியும் உரி­மையை சட்­ட­மாக்­கினோம். உள்­ளு­ராட்­சி­மன்­றங்­களில் 25 சத­வீத பெண் பிரி­தி­நி­தித்­து­வத்தைக் கட்­டா­ய­மாக்­கினோம். சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­களை நிறு­வினோம். அத­னூ­டாக பொலிஸார் அர­சி­யல்­வா­தி­களின் கட்­ட­ளை­களின் பிர­கா­ர­மன்றி, சட்­டத்தின் பிர­காரம் செயற்­ப­டக்­கூ­டிய நிலை­யேற்­பட்­டி­ருக்­கி­றது. அதே­போன்று தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­வினர் சில நிய­ம­னங்­களை தேர்தல் முடி­வ­டைந்த பின்னர் வழங்­கு­மாறு எம்­மிடம் கூறு­ம­ள­விற்கு அவர்­களின் சுதந்­தி­ரத்தை வலுப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறோம். இத்­த­கைய ஜன­நா­ய­கமும், சுயா­தீ­னத்­து­வமும், சுதந்­தி­ரமும் கடந்த காலத்தில் இருந்­ததா என்று சிந்­தித்துப் பார்க்க வேண்டும்.

 கடந்த அர­சாங்­கத்தின் ஆட்­சியில் வீடு­க­ளுக்கு வெள்ளை வான் வந்­தது. ஆரோக்­கி­ய­மாக இருப்­ப­வர்­களை அதிலே ஏற்­றிச்­சென்று உயிரைப் பறிக்கும் நிலை­யி­ருந்­தது. ஆனால் தற்­போது எமது ஆட்­சியில் 'சுவ­ச­ரிய' என்ற வெள்ளை வான் வரு­கின்ற போதிலும், அது ஆரோக்­கி­ய­மற்­ற­வர்­களை ஏற்­றிச்­சென்று உயிரைப் பாது­காக்கும் பணியைச் செய்­கின்­றது. எனவே உயிரைப் பறிக்கும் வான் வேண்­டுமா அல்­லது உயிரைப் பாது­காக்கும் வான் வேண்­டுமா என்ற தீர்­மானம் மக்­கள்­வ­சமே உள்­ளது.

அதை­விட வேறெந்த அர­சாங்­கத்தை விடவும் சுகா­தா­ரத்­து­றையைப் பொறுத்­த­வரை எமது அர­சாங்­கமே பல்­வேறு புதிய செயற்­திட்­டங்­களை அறி­மு­கப்­ப­டுத்­தி­ய­துடன், உயர் வச­தி­க­ளையும் ஏற்­ப­டுத்­திக்­கொ­டுத்­தது. அதே­போன்று கல்­வித்­து­றையைப் பொறுத்­த­வரை 'அண்­மையில் உள்ள பாட­சாலை சிறந்த பாட­சாலை', சுரக்ஷா காப்­பு­றுதித் திட்டம் போன்­ற­வற்றின் ஊடாக மாண­வர்­க­ளுக்கு பல்­வேறு வச­தி­களை வழங்­கி­யது. 'கம்­பெ­ர­லிய' ஊடாக கிராம அபி­வி­ருத்தி, வீதி­களின் நிர்­மாணம் போன்ற அபி­வி­ருத்தித் திட்­டங்­களும் எமது அர­சாங்­கத்­தி­னா­லேயே மேற்­கொள்­ளப்­பட்­டன. எம்­மி­டமும் குறைகள் காணப்­பட்­டன. ஆனால் கடந்த அர­சாங்­கத்தை விட நாம் முன்­னேற்­ற­க­ர­மான அபி­வி­ருத்தித் திட்­டங்­களை முன்­னெ­டுத்­தி­ருக்கும் அதே­வேளை, நாட்­டு­மக்­களின் சுதந்­தி­ரத்­தையும் ஜன­நா­ய­கத்­தையும் வலுப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறோம்.

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றதைத் தொடர்ந்து, விரைந்து செயற்­பட்டு சில வார­கா­லத்­திற்குள் குற்­ற­வா­ளிகள் அனை­வ­ரையும் கைது செய்தோம். எனினும் முன்­கூட்­டியே புல­னாய்­வுத்­த­க­வல்கள் கிடைத்­தி­ருந்தும் ஏன் அதற்­கு­ரிய பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை என்ற கேள்வி எழுந்­தது? நாங்கள் நினைத்­தி­ருந்தால் அதனை மறைத்­தி­ருக்­கலாம்.

ஆனால் அவ்­வாறு செய்­ய­வில்லை. மாறாக ஏற்­க­னவே தகவல் கிடைத்­தி­ருந்தும் உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டாமை தொடர்பில் விசா­ரணை செய்­வ­தற்குப் பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவை அமைத்தோம். அந்தத் தெரி­வுக்­கு­ழுவின் அறிக்கை நேற்று முன்தினம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. எனவே நாம் அனைத்து செயற்பாடுகளிலும் உண்மையையும், வெளிப்படைத்தன்மையையும் பேணினோம். இந்நிலையில் கடந்தகாலத்தில் எம்மிடம் காணப்பட்ட குறைகளைக் களைந்து முன்நோக்கிப் பயணிக்கும் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கியிருக்கின்றோம். அவருடைய வெற்றி என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றி மாத்திரமல்ல, மாறாக முழு நாட்டினதும் வெற்றியாகும். ஆனால் கோதபாய ராஜபக்ஷ வெற்றிபெற்றால் அது அவருடையதும், மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோரினதும் வெற்றியாக மாத்திரமே அமையும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:17:29
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29