உத்தியோகபூர்வ இல்லத்தை பெற்றுக்கொள்ள முயற்சிக்கும் ஜனாதிபதிக்கு சொந்தமாக வீடில்லையா? - பிமல் ரத்­னா­யக்க

Published By: Daya

25 Oct, 2019 | 10:46 AM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம் )

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தமது பத­விக்­காலம் முடி­வ­டைந்­ததும் தான்  வசிப்­ப­தற்­காக உத்­தி­யோ­க­பூர்வ இல்­ல­மொன்றை அமைச்­ச­ர­வையின் ஊடாகப் பெற்­றுக்­கொள்ள முயற்­சிக்­கின்றார். அவ­ருக்கு சொந்­த­மாக ஒரு வீடில்­லையா? அந்­த­ள­வுக்கு அவர் பிச்­சைக்­கா­ர­ரா­வென ஜே.வி.பி.யின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பிமல் ரத்­னா­யக்க சபையில் கேள்வி எழுப்­பினார்.

 பாரா­ளு­மன்­றத்தில் புதன்­கி­ழமை இடம்­பெற்ற 2020ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்­க­ளுக்­கான இடைக்­கால கணக்கு வாக்­­கெ­டுப்பு விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே  அவர் இவ்­வாறு கூறினார். அவர் மேலும் கூறு­கையில், இடைக்­கால கணக்கு வாக்­கெ­டுப்பை சமர்ப்­பிக்க அர­சாங்கம் எடுத்­துள்ள நட­வ­டிக்கை  தவ­றா­ன­தாகும். கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி பயங்­க­ர­வாதத் தாக்­குதல், ஆட்­சிக்­க­விழ்ப்பு என பாரிய பொரு­ளா­தார நெருக்­க­டிக்குள் சிக்­கி­யுள்ள இந்த  தரு­ணத்தில் இடைக்­கால கணக்­குகள் மூலம் நாட்டு மக்­க­ளுக்கு சலு­கை­களைப் பெற்­றுக்­கொ­டுக்க முடி­யாது, அதேபோல் பொரு­ளா­தா­ரத்­தையும் வளர்ச்­சிப்­பா­தைக்குக் கொண்­டு­செல்ல முடி­யாது.  தேர்­தலை மையப்­ப­டுத்தி இவர்கள் செய்­து­வரும் சமுர்த்தி மற்றும் ஏனைய விட­யங்­க­ளுக்கே இந்த நிதி பயன்­ப­டுத்­தப்­படும்.

அதே­வேளை, எவர் ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்­யப்­பட்­டாலும் எதிர்­வரும் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் திகதி  பாரா­ளு­மன்­றத்தை கலைப்­பார்கள். அவ்­வாறு பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்டால் மே மாதம் முதல் வார­ம­ள­வில்தான் புதிய பாரா­ளு­மன்றம் அமையும். அவ்­வா­றெனின் 2020ஆம் ஆண்டு முழு­வதும் இடைக்­கால கணக்­குகள் மூலம்தான் பொரு­ளா­தா­ரத்தை கொண்­டு­செல்ல முடியும். அப்­படிச் சென்றால் பாரிய பொரு­ளா­தார வீழ்ச்­சி­க­ளுக்கு நாம் முகங்­கொ­டுக்க நேரிடும்.

மேலும் தற்­போது  வரவு – செலவுத் திட்­டத்தை சமர்ப்­பிப்­ப­தற்கு எவ்­வித தடை­களும் இல்லை. இந்த அர­சுக்கு இன்­னமும் காலம் உள்­ளது. இடைக்­கால கணக்கு வாக்­கெ­டுப்பில் ஜனா­தி­ப­திக்கு மூல­ன­தனச் செல­வுக்­காக 2405 மில்­லியன்  ரூபா ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. ஒரு நாளுக்கு 2 கோடி ரூபா செலவு செய்யும் வகையில் இவ்­வாறு நிதி­யொ­துக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. நாட்டில் 300 ரூபா அடிப்­படைச் சம்­ப­ளத்தை பெற்­றுக்­கொள்ள முடி­யாத இலட்­சக்­க­ணக்­கான மக்கள் வாழும் நாட்டில் ஜனா­தி­பதி ஒரு­வரின் செல­வுக்கு ஒரு­நா­ளுக்கு 2 கோடி ரூபா  ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. இது மக்கள் பணத்தை நாச­மாக்கும் வேலை­யாகும். இதே­வேளை, அமைச்­ச­ர­வையின் அனு­ம­தி­யுடன் தற்­போ­தைய ஜனா­தி­பதி வாழ்நாள் முழு­வதும் வசிப்­ப­தற்கு உத்­தி­யோ­க­பூர்வ இல்­ல­மொன்று பல கோடி ரூபா செலவில் ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. முன்னாள் ஜனா­தி­ப­திகள் மற்றும் பிர­த­மர்­க­ளுக்கு சில சலு­கைகள் கொடுக்க வேண்டும். அதற்கு நாம் எதிர்ப்­பில்லை.

ஆனால், நாட்டு மக்கள் 300 ரூபா சம்­ப­ளத்­தைக்­கூட பெற்­றுக்­கொள்ள முடி­யாத சூழலில் வாழும்­போது இவர்­க­ளுக்கு வாழ்நாள் முழு­வதும் வாழ்­வ­தற்கு மக்கள் பணத்தில் வீடுகள் தேவையா?  அந்­த­ள­வுக்கு தற்­போ­தைய ஜனா­தி­பதி பிச்­சைக்­கா­ரனா? இவர்­க­ளுக்கு சொந்­த­மாக வீடொன்று இல்­லையா? இது பிச்­சை­யெ­டுக்கும் வேலை. இந்த ஜனா­தி­ப­திக்கு வெட்­க­மில்­லையா? இவர்­க­ளது வாழ்நாள் முழு­வதும் வசிக்க நாம் கப்பம் செலுத்த வேண்­டி­யுள்­ளது. இந்த விட­யங்கள் கோப் குழு­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்டு உரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட வேண்டும் என்றார்.

இந்­நி­லையில் பிமல் ரத்­னா­யக்­கவின் குற்­றச்­சாட்­டு­களை நிரா­க­ரித்த  நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீர, ஜனா­தி­பதி அப்­படி எந்த கோரிக்­கை­யையும் விட­வில்லை. நாங்கள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு குத்­தகை அடிப்­ப­டையில் வீட்டை கொடுக்­க­வில்லை. அர­சி­ய­ல­மைப்பு ரீதியாக முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு வழங்கப்படும் சலுகைகளை மாத்திரமே மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கியுள்ளோம். முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா மற்றும் மஹிந்த ராஜபக் ஷவுக்கு வழங்கியுள்ள சலுகைகளையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு விசேட அதிரடிப்படையின் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமையே புதிய   விடயம்  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55