கோத்­தாவின் தேர்தல் விஞ்­ஞாபனம் இன்று  

Published By: Vishnu

25 Oct, 2019 | 09:36 AM
image

(இரா­ஜ­துரை ஹஷான்)

அர­சி­யல்­வா­தி­களின் தலை­யீ­டுகள் ஏதும் இல்­லாமல்   துறைசார் நிபு­ணர்­க­ளினால் தயா­ரிக்­கப்­பட்­டுள்ள பொது­ஜன பெர­மு­னவின் தேர்தல் விஞ்­ஞா­பனம் இன்று காலை தாமரைத் தடாக  அரங்கில் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பாய  ராஜ­ப­க் ஷ­வினால் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக வெளி­யி­டப்­படும் என எதி­ர­ணியின்  பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அனுர பிரி­ய­தர்­ஷன யாப்பா தெரி­வித்தார்.

பொது­ஜன பெர­மு­னவின் காரி­யா­ல­யத்தில் நேற்று இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்துக் கொண்டு கருத்­து­ரைக்­கை­யி­லேயே  அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.  அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

 ஒட்­டு­மொத்த மக்­களின் அர­சியல் அபிப்­ரா­யங்கள் மற்றும் கோரிக்­கை­களை   உள்­ள­டக்­கியே   ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­முன  தேர்தல்  விஞ்­ஞா­ப­னத்தை   தயா­ரித்­துள்­ளது.  இந்த விஞ்­ஞா­ப­னத்தில் எவ்­வித   பக்­கச்­சார்­பான கார­ணி­களும் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை.   அர­சி­யல்­வா­தி­களின் தலை­யீ­டுகள்  இல்­லாமல் துறைசார் நிபு­ணர்­களின் கருத்­துக்­க­ளுக்கே  முன்­னு­ரிமை   கொடுக்­கப்­பட்­டுள்­ளது.

 தேசிய பொரு­ளா­த­ரத்தை முன்­னேற்­று­வ­தற்கு 500க்கும்  மேற்­பட்ட  துறைசார் நிபு­ணர்­களின் கொள்­கைத்­திட்­டங்கள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன. மனித உரிமை,  விவ­சாயம்,  மற்றும்  தொழில்­னுட்ப விருத்தி உள்­ளிட்ட பிர­தான மூன்று விட­யங்­க­ளுக்கு முன்­னு­ரிமை   கொடுக்­கப்­பட்­டுள்­ளது.    தேசிய பொரு­ளா­தா­ரத்தை வலுப்­ப­டுத்தும் விதத்தில்   கல்வி முறை­மையில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்தும் திட்­டங்கள் செயற்­ப­டுத்­தப்­படும்.

பொரு­ளா­தார ரீதியில் பின்­தங்­கிய  மற்றும் செல்­வந்த  தரப்­பி­ன­ரது கருத்­துக்­களும் இணைத்துக் கொள்­ளப்­பட்­டுள்­ளன. பாரம்பரிய அரசியல முறைமையில் இருந்து வெளியேற வேண்டும் என்ற காரணத்தினால்  கல்வி துறையில் முன்னேற்றமடைந்தவர்களின் கருத்துக்கும் , கொள்கைகளுக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06