பிரதான கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் பின்னரே அடுத்த முடிவு - தமிழ் அரசியல் கட்சிகள் 

Published By: Vishnu

25 Oct, 2019 | 10:23 AM
image

(ஆர்.யசி)

பிரதான இரண்டு அரசியல்  கட்சிகளும் தமிழ் மக்களின் அரசியல், சமூக பிரச்சினைகளில் உறுதியாக முன்வைக்கும் தீர்வு என்ன என்பதை அவதானித்து அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக தீர்வு என்ன என்பதை கவனித்து பொறுமையாக தமது நிலைப்பாட்டை அறிவிப்பதாக தமிழ் அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளது.

எவ்வாறு இருப்பினும் எதிர்வரும் 30 ஆம் திகதி மீண்டும் பிரதான ஐந்து தமிழ் கட்சிகளும் யாழ்ப்பாணத்தில் கூடி நிலைமைகள் குறித்து ஆராயவுள்ளதாகவும் தமிழ் அரசியல் கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளது.

வடக்கு கிழக்கை பிரதிநித்துவப்படுத்தும் பிரதான ஐந்து தமிழ் கட்சிகள் கூடி அவர்கள் இம்முறை ஜனாதிபதி தேர்தல் குறித்து ஆராய்வதாக இன்று தீர்மானம் எடுத்த போதிலும் முன்னாள் வடக்கு முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன், தமிழீழ புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகிய இருவரும் தவிர்க்க முடியாத காரணங்களினால் கலந்துகொள்ளவில்லை. 

இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பாக பாராளுமன்றத்தில்  இணைந்து செயற்படும் கட்சிகள் இன்று பிற்பகல் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமையில் கூடி ஆராய்ந்தனர். 

இதில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, செயலாளர் கே.துரைராசசிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் மற்றும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், உறுப்பினர்  கேவிந்தன கருணாகரம், தமிழீழ மக்கள் விடுதலை இயக்க தலைவர் சித்தார்த்தன உள்ளிட்டவர்கள் கூடி கலந்துரையாடியுள்ளனர். 

சந்திப்பு குறித்து இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44