பொது வீதியை அபகரித்து வேலி அமைப்பு ; தடுத்து நிறுத்துமாறு பிரதேச செயலருக்கு அறிவிப்பு

Published By: Digital Desk 4

24 Oct, 2019 | 04:29 PM
image

வவுனியா மேட்டுத்தெரு தோணிக்கல் பகுதியிலுள்ள பொது வீதி ஒன்றினை அப்பகுதியிலுள்ள நபர் ஒருவர் அடாத்தாக அபகரித்து வீதியை மறித்து மழை நீர் செல்ல முடியாமல் மண் நிரவி தடுத்து வேலி அமைக்கப்பட்டுள்ளதால் அவ்வீதியைப் பயன்படுத்தும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

அத்துடன் தற்போது பெய்துவரும் பருவ மழையினால் அப்பகுதியில் மழை நீர் தேங்கி போக்குவரத்து மேற்கொள்ள முடியாமலிருப்பதாகவும் பாடசாலை செல்லும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அப்பாதையை அபகரித்த நபரிடமிருந்து தடுத்து நிறுத்தி அவ்வீதியைப் பெற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்குமாறு வவுனியா பிரதேச செயலாளரினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு ஆறு மாதங்கள் கடந்த நிலையிலும் இன்று வரையிலும் அவ்வீதிக்கு எவ்வித நடவடிக்கையும் தெற்கு தமிழ் பிரதேச சபையினால் மேற்கொள்ளவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பொதுமக்களின் பயன்பாட்டிலிருந்த பொதுப்பாதை நீண்டகாலமாக நபர் ஒருவரினால் அடாத்தாக அபகரிக்கப்பட்டு மண் நிரவப்பட்டு பொதுப்பாதைக்கு வேலி அமைக்கப்பட்டு தடை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. 

இதனைத்தடுத்து நிறுத்தி அப்பகுதியிலுள்ள பொதுமக்களின் பயன்பாட்டிலுள்ள குறித்த பொதுப்பாதையை மீட்டுத்தருமாறு சகல ஆவணங்களுடனும் வவுனியா பிரதேச செயலாளரிடம் முறையிடப்பட்டுள்ளது. 

இதையடுத்து பிரதேச செயளாலரினால் தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு அப்பாதையை அபகரித்துள்ள நபரிடமிருந்து அவ்வீதியை மீட்டு அப்பகுதி மக்களிடம் வழங்குமாறும் தேவை ஏற்படின் பாதையை நில அளவைத்திணைக்களத்தின் மூலம் மீள எல்லைப்படுத்தி அமைக்கப்பட்டு காணப்படும் வேலியை அகற்றி அப்பாதையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற நடவடிக்கை எடுப்பதுடன் தங்களால் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறியத்தருமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இக்கடிதம் அனுப்பிவைக்கப்பட்டு ஆறு மாதங்கள் கடந்த நிலையிலும் இன்று வரையிலும் எவ்வித நடவடிக்கையினையும் தெற்கு தமிழ் பிரதேச சபையினால் மேற்கொள்ளப்படவில்லை தற்போது அவ்வீதியில் மழை நீர் தேங்கியுள்ளதால் டெங்கு நுளம்பு பெருகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே எமது பொதுப்பாதையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மீட்டுத்தர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாக அப்பகுதி மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08