முக்கியத்துவம் மிக்க உடன்படிக்கையில் ரஷ்ய – துருக்கி ஜனாதிபதிகள் கைச்சாத்து

Published By: R. Kalaichelvan

24 Oct, 2019 | 11:20 AM
image

குர்திஷ் படை­யி­னரை துருக்­கி­யி­னு­ட­னான சிரிய எல்­லை­யி­லி­ருந்து வெளி­யேற்­று­வதை நோக்­காகக் கொண்ட உடன்­ப­டிக்­கையில் ரஷ்ய ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்­டினும் துருக்கி ஜனா­தி­பதி தாயிப் எர்­டோ­கனும் கைச்­சாத்­திட்­டுள்­ளனர்.

மேற்­படி உடன்­ப­டிக்­கையை வர­லாற்று முக்­கி­யத்­துவம் மிக்க உடன்­ப­டிக்­கை­யாக அந்­நா­டுகள் குறிப்­பிட்­டுள்­ளன.

இரு நாடு­களின் ஜனா­தி­ப­திகளுக் கு­மி­டையே இடம்­பெற்ற பேச்­சு­ வார்த்­தை­க­ளை­ய­டுத்தே மேற்படி உடன்­ப­டிக்கை எட்­டப்­பட்­டுள் ளது.

 துருக்கி இந்த மாத ஆரம்­பத்தில் தனது நாட்டின் தெற்­கே­யுள்ள சிரிய பிராந்­தி­யத்தில் நிலை­கொண்­டுள்ள குர்திஷ் படை­யி­னரை வெளி­யேற்றும் முக­மாக தாக்­குதல் நட­வ­டிக்­கை­யொன்றை ஆரம்­பித்­தி­ருந்­தது.

சிரிய ஜனா­தி­பதி பஷார் அல் அஸாத்­து டன் நட்­பு­றவைப் பேணி வரும் நாடு­களில் ஒன்­றா­க­வுள்ள ரஷ்­யா­வா­னது சிரி­யாவில்  வெளி­நாட்டு தலை­யீ­டுகள் குறித்து கவ­லையை வெளியிட்­டி­ருந்­தது.

இந்­நி­லையில் தற்­போது செய்­து­கொள்­ளப்­பட்ட உடன்­ப­டிக்­கையின் பிர­காரம் குறிப்­பிட்ட எல்லைப் பிராந்­தி­யத்தில் ரஷ்ய படை­யி­னரும்  துருக்­கி  படை­யி­ன ரும் ரோந்து நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­ட­வுள்­ளனர்.

அமெ­ரிக்­கா­வா­னது எவரும் எதிர்­பா­ராத வகையில்  மேற்­படி பிராந்­தி­யத்­தி­லி­ருந்து தனது படை­யி­னரை வாபஸ் பெற்­றுக்­கொண்ட நிலை­யி­லேயே துருக்­கிக்கும் ரஷ்­யா­வுக்­கு­மி­டை­யி­லான உடன்­ப­டிக்கையில் கைச்­சாத்­தி­ட்­டுள்­ளது. 

அமெ­ரிக்கா சிரி­யா­வி­லி­ருந்து தனது படை­யி­னரை வாபஸ் பெறு­வது  அந்தப் பிராந்­தி­யத்தில் துருக்­கி­யி­னதும் ரஷ்­யா­வி­னதும் செல்­வாக்கு வலுப்­பட வழி­வகை செய்யும் என அர­சியல் அவ­தா­னிகள் ஏற்­க­னவே எச்­ச­ரித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

மேற்­படி உடன்­ப­டிக்­கையின் கீழ்  துருக்கி குர்திஷ் படை­யி­னரின் கட்­டுப்­பாட்­டி­லுள்ள  பிர­தே­சங்­களை  கைப்­பற்றும் அதே­ச­மயம் ரஷ்ய படை­யினர் எல்லைப் பிராந்­தி­யத்­தி­லுள்ள எஞ்­சிய பிர­தே­சங்­களை மேற்­பார்வை செய்­ய­வுள்­ளனர். அவர்­க­ளது செயற்­பா­டுகள் நேற்று புதன்­கி­ழமை முதல் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. 

தற்­போது துருக்­கி­யா­னது  தனது நாட்­டி­லுள்ள  2 மில்­லி­ய­னுக்கும் அதி­க­மான சிரிய அக­தி­களை மீளக்குடி­ய­மர்த் தும் முக­மாக பாது­காப்பு வல­யத்தை உரு­வாக்கும் முக­மாக சிரியாவின் ராஸ் அல் அயின் மற்றும் தால் அபியத் நகர்­க­ளுக்­கி­டையில் 120 கிலோ­மீற்றர்  நீள  நிலப் பகு­தியை  கைப்­பற்­றி­யுள்­ளது.

சிரிய பிராந்­தி­யத்­தி­லான குர்திஷ் படை­யி­னரின்  தாக்­குதல் நட­வ­டிக்­கைக்கு ரஷ்யா அனு­ம­தி­ய­ளித்­துள்­ளது. இதன் கார­ண­மாக இரு தரப்பு நாடு­க­ளுக்­கு­மி­டையில் மோதல் இடம்­பெறும் அபாயம் அகன்­றுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. இந்த உடன்­ப­டிக்­கையின் கீழ் அந்தப் பிராந்­தி­யத்தில் மீளத் தாக்­கு­தல்­களை நடத்­து­வ­தற்­கான தேவை இல்லை என  துருக்கி கூறு­கி­றது.

இந்­நி­லையில் ரஷ்­யா­வாலும் துருக்­கி­யாலும் இணைந்து வெளி­யி­டப்­பட்ட அறிக் ­கையில் பாது­காப்பு வல­யத்தை உருவாக்­கு­ வ­தற்­காக தாக்­கு­த­லுக்கு இலக்கு வைக்கப் பட்ட  பிராந்தியத்துக்கு அப்பாலுள்ள மன் பிஜ் மற்றும் தால் றிபாத் நகர்களிலிருந்தும் குர்திஷ் படையினர் அகற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி உடன்படிக்கை குறித்து ரஷ்ய ஜனாதிபதிக்கு நன்றியைத் தெரிவித்துள்ள சிரிய ஜனாதிபதி பஷார் அல் அஸாத், இது தொடர்பில் முழுமையான ஆதரவை வழங் கத் தான் தயாராக இருப்பதாக கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10