பிரெக்சிட்  நீண்ட காலத்திற்கு தாமதமானால் தேர்தலை நடத்த பிரித்தானிய பிரதமர் திட்டம்

Published By: Vishnu

24 Oct, 2019 | 11:23 AM
image

பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து வில­கு­வதை எதிர்­வரும் ஜன­வரி மாதம் வரை நீண்டகால­மொன்றிற்கு  தாம­திப்­ப­தற்கான யோச­னையை  ஐரோப்­பிய ஒன்­றியம் முன்­வைக்­கு­மானால் பிரித்தா­னிய பிர­தமர் போரிஸ் ஜோன்ஸன்  பொதுத் தேர்­தல் ­ஒன்றை நடத்து­ வ­தற்கு நட­வடிக்கையை முன்­னெ­டுப்பார் என அவ­ரது அலு­வ­லகம் தெரி­விக்­கி­றது.

பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்­திலி­ருந்து பிரி­வது தொடர்­பான பிரெக்சிட் செயற்­கி­ரமம் தொடர்பில் போரிஸ் ஜோன்­ஸனால் முன்­வைக்­கப்­பட்ட புதிய உடன்­ப­டிக்கை வரை­புக்கு பிரித்­தா­னிய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை இணக்கம் தெரி­வித்­தி­ருந்தபோதும்  அதனை 3  நாட்­களில் கைச்­சாத்­திடும் திட்­டத்தை நிரா­க­ரித்­தி­ருந்­தனர். இதன் கார­ண­மாக  பிர­தமர் தனது பிரெக்சிட் சட்­ட­மூ­லத்தை இடை­நி­றுத்த நேர்ந்­தது.

நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை பிரித்­தா­னிய பாரா­ளு­மன்ற பிரதிநிதிகள் சபை யில் இடம்­பெற்ற வாக்­கெ­டுப்பில் பாரா­ளுமன்ற உறுப்­பி­னர்கள் 299 வாக்­கு­க­ளுக்கு 329 வாக்­குகள் வித்­தி­யா­சத்தில் பிர­தமர் போரிஸ் ஜோன்­ஸனின் உடன்­ப­டிக்கை  சட்­ட­ மூ­லத்­திற்கு அங்­கீ­காரம் அளித்­தி­ருந்­தனர்.

ஆனால் அந்த உடன்­ப­டிக்­கையில் துரிதமாக கைச்­சாத்­தி­டு­வது தொடர்பில் இடம்­பெற்ற இரண்­டா­வது வாக்­கெ­டுப்பில் போரிஸ் ஜோன் ஸன் 14 வாக்­குகள் வித்­தி­யா­சத்தில் தோல்­வியைத் தழுவ நேர்ந்­தது.

இந்­நி­லையில் ஐரோப்­பிய ஒன்­றியத் தலை­வர்கள் பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து பிரி­வது தொடர்­பாக எதிர்­வரும் 31ஆம் திகதி காலக்­கெ­டுவை நீடிப்­பதா இல்­லையா என்­பது குறித்தும் அவ்­வாறு நீடிப்­ப­தானால் எவ்­வ­ளவு காலத்­திற்கு நீடிப்­பது என்­பது தொடர்­பிலும் ஆராய்ந்து வரு­கின்­றனர்.

கடந்த சனிக்­கி­ழமை தனது பிறிக்ஸிட் உடன்­ப­டிக்கை குறித்து பாரா­ளு­மன்ற உறுப்­ பி­னர்­களின் ஆத­ரவைப் பெறத்தவ­றி­ய­தை­ய­டுத்து சட்­டத்தின் பிர­காரம்  பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து பிரி­வ­தற்­கான காலக்­கெ­டுவை 3 மாதங்­களால் நீடிக்கக்கோரி  ஐரோப்­பிய ஒன்­றி­யத்­திற்கு  கடி­த­மொன்றை அனுப்பி வைக்க வேண்­டிய நிர்ப்­பந்தம் போரிஸ் ஜோன்­ஸ­னுக்கு ஏற்­பட்­டது. ஆனால் பிர­தமர் அத்­த­கைய நீண்ட காலத்தாம­தத்தை விரும்­ப­வில்லை என  அவ­ரது அலு­வ­ல­கத்தைச் சேர்ந்த வட்­டாரம் ஒன்று தெரி­விக்­கி­றது. 

பிரெக்சிடை தாம­தப்­ப­டுத்த பாரா­ளு­மன்­றத்தால் முன்­வைக்­கப்­பட்ட கோரிக்­கைக்கு ஐரோப்­பிய ஒன்­றியம் இணங்­கு­மாயின் புதி­தாக தேர்­தலை நடத்­து­வதைத்தவிர வேறு வழி கிடை­யாது என அந்த வட்­டாரம் கூறு­கி­றது.

இது தொடர்பில் பிரித்­தா­னிய பாராளுமன்ற  பிரதிநிதிகள் சபையின் தலைவரான ஜாகொப் றீஸ் மொக் கூறுகையில், மேற்படி பிறிக்ஸிட் சட்டத்தை பாராளுமன்ற பிரதி நிதிகள் சபை மற்றும்  பிரபுக்கள் சபையினூடாக எதிர்வரும் 31ஆம் திகதிக்குள் நிறை வேற்றுவது என்பது மிகவும் கடினமான ஒன்றாக உள்ளதாக தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52