குருக்­கந்த விகாரை விட­யத்தில்  சிறை செல்­லவும் நான் தயார் - ஞானசார

Published By: Vishnu

24 Oct, 2019 | 10:06 AM
image

(எம்.மனோ­சித்ரா)

நாட்டில் தமிழ் மக்­க­ளுக்கு எந்த பிரச்­சி­னையும் இல்லை. மாறாக சுமந்­தி­ர­னுக்கும் விக்­கி­னேஸ்­வ­ர­னுக்கும் மாத்­தி­ரமே பிரச்­சினை இருக்­கி­றது. கிறிஸ்­தவ மதத்­த­வ­ரான சுமந்­திரன் இந்து ஆலயம் குறித்து  அக்­கறை காட்ட வேண்­டிய அவ­சியம் என்ன? என்று பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் கேள்­வி­யெ­ழுப்­பினார்.

 

இரா­ஜ­கி­ரி­யவில் உள்ள பொது­பல சேனா அமைப்பின் காரி­யா­ல­யத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். 

அவர் மேலும் தெரி­விக்­கையில், 

வடக்கில் தற்­போது தனி அர­சாங்­கமே காணப்­ப­டு­கி­றது. பிரி­வினை வாதத்தை வளர்க்கும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் செயற்­பா­டு­க­ளுக்கு அடி­ப­ணிய வேண்­டிய தேவை எமக்­கில்லை . தனி நாடு பற்றி பேசி சட்­டத்தை தங்கள் இஷ்­டத்­துக்கு அவர்கள் நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு ஒரு­போதும் இட­ம­ளிக்க முடி­யாது .

குரு­கந்த விகா­ரா­தி­ப­தியின் இறுதி கிரி­யை­களை தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் சில அர­சி­யல்­வா­தி­களே குழப்­பி­ய­டித்­தனர். அங்­கி­ருந்த தமிழ் சகோ­தர்கள் இதற்கு எவ்­வித எதிர்ப்பும் தெரி­விக்­க­வில்லை. குரு­கந்த தேரர் பொது­மக்­க­ளுக்கு சேவை செய்­தவர். புற்­று­நோயால் பீடிக்­கப்­பட்டு மர­ண­ம­டைந்தார். சுமார் 11 வருட காலம் குறு­கந்த பகுதி மக்­க­ளுக்­கா­கவே அவர் சேவை செய்து வந்­தாரே தவிர தனிப்­பட்ட தேவை­களை நிறை­வேற்றிக் கொள்­ள­வில்லை. 

வடக்கில் வேறொரு அர­சாங்­கமே இருக்­கி­றது. இந்த அர­சாங்­கத்தின் குதர்க்­க­மான ஆட்­சியின் கார­ண­மா­கவே சிங்­கள பௌத்­தர்­க­ளுக்கு இந்த நாட்டில் இட­மில்­லாமல் போகி­றது. தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் உறுப்­பினர் பாரா­ளு­மன்­றத்தில் தாம் இந்த நாட்­டுக்கு விசு­வா­ச­மாக இருப்­ப­தாக சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்து விட்டு அநு­ரா­த­பு­ரத்­துக்கு அப்பால் சென்­ற­வுடன் தனி நாடு பற்றி பேசு­வது எந்த வகையில் நியா­ய­மாகும்? எங்­க­ளுக்கு அமுல்­ப­டுத்­தப்­படும் சட்டம் பிரி­வி­னை­வா­தி­க­ளுக்கு அமுல்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்லை. சட்­டத்தை அவர்கள் தங்கள் இஷ்­டத்­துக்கு நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு நாம் ஒரு­போதும் இட­ம­ளிக்கப் போவ­தில்லை. 

காலஞ்­சென்ற பௌத்த பிக்­குவின் இறுதி சடங்­கிற்கு செய்ய வேண்­டி­யதை நாங்கள் பௌத்­தர்கள் என்ற ரீதியில் செய்து விட்டோம். கூட்­ட­மைப்­பினர் அதற்கு எதி­ராக நீதி­மன்றம் சென்­றுள்­ளனர். அதனை நாங்கள் நீதி மன்­றத்தில் சந்­திக்க தயார். குரு­கந்த தேரரின் உடல் மூன்று நாட்­க­ளுக்கு வைத்­தி­ருக்கும் வகை­யில்­லேயே பதப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. நீதி மன்ற தீர்ப்பு வரு­வ­தற்கு தம­த­மாகும் என்ற நிலை­யி­லேயே மனி­தா­பி­மான ரீதியில் அவரின் இறுதி கிரி­யை­களை மேற்­கொண்டோம். இந்த சந்­தர்ப்­பத்தில் நாட்டின் பல பாகங்­களில் இருந்து 200 க்கும் அதிக பௌத்த பிக்­குகள் முல்­லை­தீ­வுக்கு வருகை தந்­தி­ருந்­தனர். 

இந்த விடயம் தொடர்­பாக நான் சிறை செல்­லவும் தயா­ராக இருக்­கின்றேன். பல தட­வைகள் சிறை சென்­றுள்ளேன். இதற்­காக ஒரு­போதும் பயப்­படப் போவ­தில்லை. இந்த அர­சாங்கம் இனங்­க­ளுக்­கி­டையே முறு­கலை ஏற்­ப­டுத்திக் கொண்டு வெட்கித் தலை­கு­னியக் கூடிய வகையில் கை கட்டிப் பார்த்துக் கொண்­டி­ருக்­கி­றது. அர­சாங்­கத்­திற்குள் இன்­னொரு அர­சாங்கம் இருக்­கி­றது. பிரி­வி­னை­வா­திகள் அவர்­களின் நட­வ­டிக்­கையைத் தொடர்­கின்­றனர். அவர்­க­ளுக்கு எதி­ராக பொலி­ஸாரும் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை. 

வடக்கு கிழக்கில் பிரி­வி­னை­வா­திகள் கடந்த சில வரு­டங்­களில் வேறூன்றி விட்­டார்கள். இங்கு குண்­டாந்­த­டியால் மக்­களை தாக்­கலாம். அங்கு வேறொரு அர­சாங்கம் செயற்­ப­டு­வதால் இந்த குண்­டாந்­தடி பிர­யோகம் சரி­வ­ராது. இந்த பிரி­வி­னை­வாத்தை தடுக்­கா­விட்டால் மீண்டும் ஒரு இருண்ட யுகத்­திற்கு செல்ல வேண்­டிய நிலை­மையே ஏற்­படும்.  இதனால் தமிழ் , சிங்கள மக்களே பாதிக்கப்படுவார்கள். 

தமிழ் மக்களுக்கு இங்கு எந்த பிரச்சினையும் இல்லை. மாறாக சுமந்திரனுக்கும் விக்கினேஸ்வரனுக்கும் மாத்திரமே பிரச்சினை இருக்கிறது. சுமந்திரன் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவராவார். எனவே இந்து ஆலயம் குறித்து அவர் அக்கறை காட்ட வேண்டிய அவசியம் என்ன? எமக்கெதிராக கூட்டமைப்பு நீதிமன்றத்தை நாடியமை தவறானதொரு தீர்மானமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதன்முறையாக தேர்தலில் வாக்களித்ததால் இலங்கை தமிழ்...

2024-04-20 11:53:28
news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09