ஆயிரம் ரூபா சம்பளத்தை நிச்சயம் பெற்றுக் கொடுப்பேன் - கோத்தாபய

Published By: Vishnu

23 Oct, 2019 | 06:44 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இழுப்பறி நிலையில் உள்ள ஆயிரம் ரூபா சம்பளத்தை நிச்சயம் பெற்றுக் கொடுப்பதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

பெருந்தோட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான விடயங்களை துறைசார் நிபுணர்களின்  அறிவுறுத்தல்களை கொண்டு உருவாக்கியுள்ளோம். மக்களின்  அடிப்படையாகக் கொண்டே அரச நிர்வாக கட்டமைப்பு முன்னெடுக்கப்படும். மக்கள் எம்மீது கொண்டுள்ள  நம்பிக்கை முழுமைப்படுத்தப்படும்.

பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கையினை ஒரு குறுகிய நிலைக்குள் மாத்திரம் வரையறுக்கமாட்டேன். நகர் புறத்தில் உள்ள அனைத்து வசதிகளையும்  மலையகத்திலும் செயற்படுத்துவேன்.  ஆசிரிய தொழிலை மாத்திரம் கருத்திற் கொண்டு மலையக  சமூகம் செல்லாமல் அனைத்து துறைகளிலும் முன்னேற்றமடைவதற்கான  கல்வி முறைமையினை  அறிமுகப்படுத்துவேன்.  

மலையக மக்களுக்கு  நியாயமான ஆயிரம் ரூபா  சம்பளம் பெற்றுக் கொடுக்கப்படும்.  2015 ஆம் ஆண்டு  அரசியல் ரீதியில் முன்னெடுத்த தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். எனவே எமது  கொள்கைத்திட்டத்தில் நம்பிக்கை கொள்ளுங்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாவலபிடிய நகரில இன்று இடம்பெற்ற  பொதுஜன  பெரமுனவின்  தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15