கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழு

Published By: Vishnu

23 Oct, 2019 | 06:20 PM
image

30 பேர் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழு நேற்று முதல் இலங்கையின் ஒன்பது சகல மாகாணங்களிலும் தேர்தல் கண்காணிப்பு பணியை ஆரம்பித்தது.

நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை கண்காணித்து வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்கும் நடைமுறை என்பவற்றை அவதானிப்பதே ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவின் முக்கிய பணியாக அமையும் என இக் குழுவின் பிரதி தலைமை தேர்தல் கண்காணிப்பாளர் திமித்திரா லோன்னு தெரிவித்தார்.

தங்களின் அவதானங்களை அவ்வப்போது தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிப்பதே தமது பிரதான நோக்காக அமையும். தேர்தலுக்கு முந்திய வன்முறை பற்றிய விடயங்கள் மற்றும் ஏனைய அவதானிப்புக்கள் என்பவற்றை தெரிவிப்பது மட்டுமே தமது கடமையாகும் என இது தொடர்பாக ஏதேனும் நடவடிக்கை எடுப்பது தமது பொறுப்பல்ல என அவர் மேலும் தெரிவித்தார். 

நாங்கள்  நடுநிலையாகவும் பக்க சார்பின்றியும் தேர்தல் நடைமுறையில் தலையிடாது ஒரு சுயாதீன அமைப்பு என்ற ரீதியில் செயற்படுவோம். 

தேர்தல் தொடர்பாக சுருக்கமான குறிப்பை தேர்தல் ஆணைக்குழுவின் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்படும். தேர்தல் நிர்வாகம் வேற்பாளர் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரச்சார நடவடிக்கை அரச நிறுவனங்களின் பங்களிப்பு சிவில் சமூகம் வாக்காளர் பதிவு வாக்களிப்பு வாக்கு எண்ணிக்கை முடிவிகளி அறிவித்தல் சமூக ஊடகங்கள் உட்பட ஊடகங்களின் பணி என்பன தொடர்பில் நாங்கள் அவதானிப்போம்  

நேற்று முதல் சமூக ஊடகங்களை கண்காணிப்பதற்கு 4 பேர் கொண்ட குழு பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளது. எமது பிரதான தேர்தல் கண்காணிப்பாளரான மரிசா மெத்தியஸ் தமது தேர்தல் அவதானிப்பு குறித்து கொழும்பில் ஊடகவியலாளர் மாநாட்டை தேர்தல் இடம்பெற்ற இரண்டு நாட்களுக்கு பின்னர் அதாவது நவம்பர் 18 திகதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படாது உள்ள போதும் ஊடகவியலாளர் மாநாட்டை நடாத்துவார்.   

அத்துடன் எமது 30 தேர்தல் கண்காணிப்பாளர்கள் பலதரப்பட்ட இலங்கை தேர்தல் அதிகாரிகளை அவர்களுக்கு உரிய இடங்களில் சந்திப்பார்கள். கடந்த ஆகஸ்ட் மாதம் 2015 ல் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் தாம் வழங்கிய 26 பரிந்துரைகளில் மூன்று பரிந்துரைகள் மட்டுமே நடைமுறை படுத்தபட்டுள்ளன எனவும் சில பரிந்துரைகள் பகுதியளவில் நடைமுறை படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06