கோத்தா ஆட்சிக்கு வந்தால் இராணுவத்தினர் கால்வாய்களை சுத்தமாக்கும் நிலை ஏற்படும்

Published By: Vishnu

23 Oct, 2019 | 05:55 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

கோத்தாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால்  இராணுவத்தினர் மீண்டும் நாய்களைக் குளிப்பாட்டும், கால்வாய்களை சுத்தம் செய்யும் நிலையே ஏற்படும் எனத் தெரிவித்த நிதியமைச்சர் மங்கள சரமவீர, கோத்தாபய மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதில் இராணுவத்தினரே அதிக ஆர்வம் காட்டுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

கோத்தாபய ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தபோதே அவரின்  வீட்டு நாய்களை குளிப்பாட்டினார்கள். மரக்கறி விற்கும் நிலை ஏற்பட்டது. வீதி, கால்வாய்களை சுத்தப்படுத்த பயன்படுத்தப்பட்டு வந்தனர். 

மேலும் மஹிந்த ராஜபக்ஷ்  ஜனாதிபதியாக இருந்தபோது விசேட தேவையுடைய இராணுவத்தினர் அவரை சந்திப்பதற்காக 6 தடைவைகள் கடிதம் மூலம் அனுமதி கோரிய போதும் அவர் வேலைப்பளுவில் இருப்பதாக தெரிவித்து அனுமதி கொடுக்கப்படவில்லை. ஆனால் நாம் அவர்களின் கோரிக்கைகளை ஏற்று தீர்வு வழங்கத்தயாரான போது சில இராணுவத்தினரை தூண்டிவிட்டு போராட்டம் நடத்த வைக்கின்றனர். தாங்களே இராணுவத்தினருக்கு தீர்வு பெற்றுக்கொடுத்ததாக காட்டவே ராஜபக்ஷ்வினர் இந்த வேலைகளை செய்வதாகவும் குற்றம் சாட்டியதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று 2020ஆம் ஆண்டு ஜனவரி முதலாம்  திகதி முதல் நடைமுறைக்கு வரும்வகையில் நான்குமாத காலங்களுக்கான அரசாங்க செலவீனங்களுக்காக கணக்கறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22