டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரிப்பு

Published By: Digital Desk 3

23 Oct, 2019 | 05:09 PM
image

இவ்வாண்டு ஜனவரி மாதத்திலிருந்து ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதிவரை நாடளாவிய ரீதியில் 58374 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 74 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு நோய் அதிகரித்து வருவதாகவும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு முழுவதும் மொத்தம் 58 டெங்கு  இறப்புகளும் 51,659 நோயாளர்களும் இனங்காணப்பட்டிருந்தனர். 

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் காலி ஆகிய 5 மாவட்டங்கள் டெங்கு ஆபத்துள்ளவையாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு அடையாளப்படுத்தியுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் மொத்தம் 12,252 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான 9,549 நோயாளிகள் கம்பாஹா மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளன.

மூன்றாவது அதிக எண்ணிக்கையிலான 5,698 டெங்கு நோயாளிகள் களுத்துறை மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளனர். அதன்படி, மேல் மாகாணத்தில் மொத்தம் 27,459 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர், இது அனைத்து மாகாணங்களிலும் மிக அதிகமாகும்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மாத்திரம் அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளிகளாக 9,459 பேர் பதிவாகியுள்ளனர்.

பொதுமக்கள் அனைத்து வகையான நுளம்பு இனப்பெருக்கம் செய்யும் இடங்களிலும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், அவற்றை தொடர்ந்து அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

"நுளம்பு இனப்பெருக்கம் செய்யும் இடங்களை சுத்தம் செய்ய வாரத்திற்கு குறைந்தது 30 நிமிடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47