சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்ட வலைகளுடன்  ஐவர் கைது

Published By: Daya

23 Oct, 2019 | 12:29 PM
image

வவுனியாவில் தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து இன்று காலை 7மணியளவில்  நடத்திய திடீர் சுற்றிவளைப்பு ஒன்றில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சூடுவந்தபுலவு மற்றும் பாவற்குளம் பகுதிகளில் நடைபெற்ற இந்த சுற்றிவளைப்பில் நன்னீர் மீன்பிடித்தலில் சட்டவிரோதமாகத் தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளை உபயோகித்து மீன்பிடித்தலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யும் நோக்கில் இடம்பெற்ற இச்சுற்றிவளைப்பில் சூடுவந்தபுலவை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளதுடன் ரூபா 150,0000 பெறுமதியான தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளும் , அதற்குப் பயன்படுத்தப்பட்ட தோணிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட வலை, படகு மற்றும்  நபரையும் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப் பட்டுள்ளனர்.

சுற்றிவளைப்பினை வவுனியா, மன்னார் மாவட்ட நீர் உயிரின செய்கை விரிவாக்கல் அதிகாரி யோகநாதன் நிசாந்தன் தலைமையிலான உத்தியோகஸ்தர்கள் குழாம் மற்றும் பூவரசங்குளம் விஷேட அதிரடிப்படையினரும் பங்கு கொண்டிருந்தனர்

இவ்விடயம் தொடர்பாகக் கருத்து தெரிவித்த வவுனியா, மன்னார் மாவட்ட நீர் உயிரின செய்கை விரிவாக்கல் அதிகாரி யோகநாதன் நிசாந்தன் தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளை உபயோ கித்து மீன்பிடிப்பதன் மூலம் நன்னீர் மாசடைவதாகவும் குளங்களில் மீன்களின் உயிரிழப்புக்கள் அதிகம் ஏற்படுவதாகவும்  தொடர்ந்தும் இவ்வாறான சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர் களைக் கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22