தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவுக்கு இந்த ஆண்டு 650 முறைப்பாடுகள்

Published By: Digital Desk 4

23 Oct, 2019 | 11:11 AM
image

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவுக்கு, இந்த ஆண்டில் 650  முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில், ஆணைக்குழு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

2017 ஆம் ஆண்டு 230 முறையீடுகள் கிடைக்கப் பெற்றதுடன் 2018 ஆம் ஆண்டுக்கான முறைப்பாடுகளின் எண்ணிக்கை 800 ஆக அதிகரித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 650 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

 பெருமளவிலான முறைப்பாடுகள்,  மேல் மற்றும் தென் மாகாணங்களில் இருந்து கிடைக்கப் பெற்றுள்ளது. ஆணைக்குழுவானது 1500 இற்கு மேற்பட்ட விளக்கத்துடன் கூடிய உத்தரவுகளை வழங்கி உள்ளதோடு, பெரும்பாலான உத்தரவுகள் தகவல்களை வெளிப்படுத்தும் முகமாக வழங்கப்பட்டன. 

இந்த  முறையீடுகள், அரச துறையில் இடம்பெறும் ஊழல்கள் முதல்  அரசாங்கத்தின் இடைக்கால நீதிக் கொள்கைகள் தொடர்பான தகவல்களுடன் வெளிப்படுத்தல் தொடர்பான கோரிக்கைகளுக்கு பதிலளித்தல் மற்றும் தனியுரிமைக்கான உரிமையையும், அதற்கு அப்பாற்பட்ட பொது நலனையும் வேறுபடுத்திப் பார்க்கும் பரந்துபட்ட அம்சங்களை உள்ளடக்கியமைக்காகக் காணப்படுகின்றன. 

ஆணைக்குழுவின் முடிவுகளுக்கு எதிராக மூன்று  மேன் முறையீடுகள் தற்போது கோரப்பட்டுள்ளன.

தகவல் அறியும் உரிமைக்கான சட்டம் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டு இரண்டே ஆண்டுகள் ஆகுகின்ற நிலையில், இலங்கையின் அனுபவங்களில் பல முன்னேற்றங்கள் காணப்பட்டாலும், இந்நிலையில் பகிரங்க அதிகார சபைகளிடம் இன்னும் சிறந்த  மாற்றங்கள் வேண்டப்படுகிறது. 

அவர்கள் அவர்களின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட தகவல்களை வெளிப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுதல் அவசியமாகும். ஆணைக்குழு அதன் பங்காக சட்ட மன்றத்தின் மனநிலை மற்றும் அதன் நோக்கம் நிறைவேறும் வகையில், தன்னால் இயன்றளவு முயற்சித்து இந்நாட்டின் பிரஜைகள் தகவல் அறியும் சட்டத்தின் பெறுபேறுகளை முற்றாகப் பெறுவதற்கு பாடுபடும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08