தேர்தலை புறக்கணிக்கும் தீர்மானம் எடுக்கவில்லை என்கிறார் விக்கி

Published By: Digital Desk 3

23 Oct, 2019 | 10:02 AM
image

(ஆர்.யசி)

தமிழ் மக்­க­ளுக்­கான  13 அம்சக் கோரிக்­கைகள் குறித்து சக­ல­ருக்கும்  தெட்­டத்­தெ­ளி­வாக கூறி­யுள்ளோம். அதே­போன்று  ஜனா­தி­பதி தேர்­தலை தமிழ் மக்கள் புறக்­க­ணிக்க வேண்டும் என்ற எந்­த­வொரு தீர்­மா­னத்­தையும் ஐந்து தமிழ்க் கட்­சி­களும் முன்­னெ­டுக்­க­வில்லை என்று  தமிழ் மக்கள் பேரவை கட்­சியின் இணைத்­த­லை­வரும் முன்னாள் வட­மா­காண முத­ல­மைச்­ச­ரு­மான சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்தார்.

தன்­னுடன் பேச்­சு­வார்த்­தைக்கு வரு­மாறு பிர­தமர் அழைப்பு விடுத்­துள்ளார். அதற்­க­மைய ஐந்து தமிழ் கட்­சி­களும் விரைவில் பிர­த­மரை சந்­தித்து பேசும் எனவும் அவர்  குறிப்­பிட்டார்.

வடக்கு கிழக்கு தமிழ் மக்­களை பிரதிநி­தித்­து­வப்­ப­டுத்தும் பிர­தான ஐந்து கட்­சிகள் இணைந்து 13 அம்­சக்­கோ­ரிக்­கை­களை முன்­வைத்­துள்ள நிலையில் பிர­த­ம­ருடன் பேச்­சு­வார்த்தை நடத்த தீர்­மானம் எடுத்­துள்­ள­தாக தக­வல்கள் வெளி­வரும் நிலையில் இது குறித்து கருத்து தெரி­விக்கும் போதே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் மேலும் கூறு­கையில்,

பிர­த­ம­ருடன் விரைவில் பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுக்­க­வுள்ளோம். ஆனால் பிர­த­மரை சந்­திக்­க­வுள்ள திக­திகள் இன்­னமும் தீர்­மா­னிக்­கப்­ப­ட­வில்லை. பிர­தமர் தரப்பில் இருந்து திகதி அறி­விப்பு வர­வில்லை. கடந்த வாரம் பிர­த­மரை சந்­தித்­தி­ருந்த நிலையில் என்னை மீண்டும் சந்­திக்க வரு­மாறு பிர­தமர்  அழைப்பு விடுத்தார். எனினும் நான் தனி­யாக சென்று பிர­த­மரை  சந்­திக்க தயா­ராக இல்லை. 13 அம்சக் கோரிக்­கை­களை முன்­வைத்த ஐந்து கட்­சி­க­ளு­மாக ஒன்­றி­ணைந்து பிர­த­மரை சந்­திப்­பதே சரி­யா­ன­தாக இருக்கும். ஆகவே அனை­வ­ருக்கும் அழைப்பு விடுக்க வேண்டும் என பிர­த­ம­ரி­டத்தில் நான் தெரி­வித்தேன். அதற்கு அவர் இணக்கம் தெரி­வித்தார். எனினும் சந்­திப்­புகள் இன்­னமும் உறு­தி­யா­க­வில்லை.

ஏனெனில் நாம் ஐந்து தமிழ்க் கட்­சிகள் ஒன்­றாக இணைந்து கலந்­து­ரை­யாடி ஒரு­மித்த தீர்­மானம் ஒன்­றினை முன்­னெ­டுத்­துள்ளோம். அவ்­வாறு இருக்­கையில் தனித்­த­னி­யாக நாம் செயற்­பட முடி­யாது. அது­மட்டும் அல்ல, எமது 13 அம்சக்கோரிக்­கைகள் என்ன என்­பதை மிகத்தெளி­வாக நான் எடுத்­துக்­கூ­றி­யுள்ளேன். ஏன் இந்த கோரிக்­கை­களை நாம் முன்­வைக்­கின் றோம் என்­பது தெளி­வாக எடுத்­துக்­கூ­றி­யுள்ளோம். இந்த கோரிக்­கை­களை முன்­வைக்க கார ணம் என்ன என்­ப­தையும் எடுத்துக் கூறி­யுள்ளோம்.

நாம் எம்­மைப்­பற்றி பேசினால் எமக்­கான கோரிக்­கை­களை முன்­வைத்தால் அது பிரி­வி­னை­வாதம் என்ற கருத்தே நில­வு­கின்­றது. எனினும்  நாம் அனை­வரும் ஒன்­றி­ணைய வேண்டும் என்றே நினைக்­கின்றோம். இது பிரி­வி­னை­வாதம் அல்ல. அதேபோல் இம்­முறை ஜனா­தி­பதி தேர்­தலை புறக்­க­ணிக்க வேண்டும் என்ற கருத்­தினை முன்­வைப்­பது ஏற்­று­கொள்­ளக்­கூ­டிய கருத்து அல்ல.

எம்­மத்­தியில் அவ்­வா­றான எந்­த­வொரு நிலைப்­பாடும் இல்லை. கஜேந்­தி­ர­குமார் பொன்னம்பலம் மட்டுமே தேர்தலை புறக் கணிக்க வேண்டும் என்ற கருத்தினை கூறிக் கொண்டுள்ளார். எனினும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலை புறக் கணிக்க வேண்டும் என்ற எந்தவொரு தீர்மா னத்தையும் நாம் முன்னெடுக்கவில்லை என வும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52