டிஸ்டோனியா எனப்படும் தசை பிடிப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

Published By: Daya

23 Oct, 2019 | 09:28 AM
image

கணனி முன் அமர்ந்து பணியாற்றுகின்றுகின்றவர்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கின்றனர் இதற்கு தீர்வாக நவீன சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம் என வைத்திய நிபுணர்கள் தெரிவித் துள்ளனர்.

இதில் பெரும்பான்மையோரின் கண் பார்வை கணனி முன் அமர்ந்து பணியாற்றுவதற்கு ஏதுவாக இருப்பதில்லை. இதன் காரணமாக பலருக்கும் கழுத்தில் தசைப்பிடிப்பு என்ற பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு இதுவரை நிவாரணம் மட்டுமே கிடைத்து வந்த நிலையில், தற்போது நவீன சிகிச்சை மூலம் குணப்படுத்த இயலும் என்கிறார்கள் வைத்திய நிபுணர்கள்.

Dystonia என்பது தசைகளின் இயக்கத்தில் ஏற்படும் இடையூறு என்று குறிப்பிடலாம். உங்களது தசைகள் சரியான அளவில், சரியான திசையில் இயங்கவேண்டும், சிலருக்கு தசைகள் இயல்பான நிலையில் இயங்கவில்லை என்றால்..., அவர்களுக்கு டிஸ்டோனியா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று குறிப் பிடலாம். இவை பெரும்பாலும் கை, கால்கள், தோள்பட்டை, கழுத்து ஆகிய பகுதிகளில் அதிமாக ஏற்படுகிறது.

சிலருக்கு இத்தகைய பாதிப்பு, தொடக்கநிலை, இடைநிலை, முற்றிய நிலை என மூன்று நிலைகளில் ஏற்படக் கூடும். முதலில் கழுத்து அல்லது தோள்பட்டையில் இதன் பாதிப்பு தெரியவரும். சிலருக்கு அவர்கள் செய்யும் பணியின் காரணமாகவும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். குறிப்பாக கையால் எழுதுபவர்களுக்கு கையிலும், இரண்டு கைகளாலும் தட்டச்சு செய்கிறவர்களுக்கு கை விரல்களிலும், தோள்பட்டையிலும், பேச்சாளர்களுக்கு பேச்சிலும், கண்ணின் இமை பகுதியிலும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். அதேபோல் தாடை மற்றும் நாக்கு பகுதியிலும், குரல் நாண் பகுதியிலும் இத்தகைய தசை பிடிப்பு பாதிப்பு ஏற்படும்.

இத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் மன உளைச்சல், வலி அல்லது சோர்வு, எந்தப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டதோ அதனை அசைக்க முடியாத நிலை போன்றவை உண்டாகும். இதனை அறிகுறிகளாக எடுத்துக் கொள்ளலாம்.

இதனை  ஆரம்ப நிலையில் கண்டறிந்து அதற்குரிய பயிற்சி மற்றும் வைத்தியர்களின் மூலம் நிவாரணத்தையும், குணத்தையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும், அதனை அலட்சியப்படுத்தினால் பார்க்கின்ஸன், பக்கவாதம் ,மூளை கட்டி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.

முற்றிய நிலையில் உள்ளவர்களுக்கு தற்பொழுது டீப் பிரைய்ன் ஸ்டிமுலேஷன் அதாவது மூளையின் உட்பகுதியில் மின் அதிர்வு மூலம் தூண்டலை ஏற்படுத்தும் சிகிச்சை அளித்து இதனை குணமாக்கும் நவீன சிகிச்சை அறிமுகமாகியிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29