முறைப்பாடுகள் கிடைத்திருந்தும் சஜித்திற்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ? - அனுர பிரியதர்ஷன யாப்பா

Published By: R. Kalaichelvan

22 Oct, 2019 | 02:43 PM
image

(இராஜதுரை ஹஷான்)

புதிய  ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின்  தேர்தல் பிரச்சாரத்திற்காக  அரச ஊடகங்கள், அரச  சொத்துக்கள்  பயன்படுத்தப்படுகின்றது.

மறுபுறம் தேர்தல்  சட்டத்தினை மீறும் செயற்பாடுகளும்  நாளாந்தம் இடம் பெறுகின்றன. இவ்வாறாக குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்திருந்தும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஏன் இதுவரையில் சட்டரீதியான  நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.என  பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா கேள்வியெழுப்பினார்.

 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நல்லாட்சி  அரசாங்கத்தில் ஸ்தாபிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்கல்  எதிரணியின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கும், அவை தொடரபில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் மாத்திரமா காணப்படுகின்றது என்ற சந்தேகம் தற்போது தோற்றம் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு  ஆதரவினை அதிகரிக்கும் நோக்கில் ஆளும்  தரப்பின் உறுப்பினர்கள். அரச ஊடகங்கள் , அரச சொத்துக்களை தமது சுய தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்கின்றார்கள்

 ஆளும்  தரப்பினர்  தேர்தல் சட்டத்தினை  மீறும் செயற்பாடுகளை தொடர்ந்து  முன்னெடுக்கின்றார்கள் என்பது தொடர்பில் எதிர் தரப்பினராலும்,   அமைப்புக்களினால்  தேர்தல் ஆணைக்குழுவிற்கு  சுமார் 900ற்அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ள. இம்முறைப்பாடுகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் இதுவரையில் எவ்விதமான சட்ட நடடிக்கைகளையும் ஏன் மேற்கொள்ளவில்லையென அவர் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31