பிறிக்ஸிட் உடன்­ப­டிக்கை குறித்து மீண்டும் வாக்­கெ­டுப்பை நடத்த வலி­யு­றுத்தல்

Published By: Digital Desk 3

22 Oct, 2019 | 12:01 PM
image

பிரித்­தா­னியப் பிர­தமர் போரிஸ் ஜோன்­ஸனின் பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து பிரி­வது தொடர்­பான பிறிக்ஸிட் உடன்­ப­டிக்கை குறித்து மீண்டும் வாக்­கெ­டுப்பை நடத்த பிர­த­மரின் அலு­வ­லகம் அந்­நாட்டு பாரா­ளு­மன்­றத்தை வலி­யு­றுத்­தி­யுள் ­ளது.

பிறிக்ஸிட் உடன்­ப­டிக்கை குறித்து இதற்கு முன்னர் கடந்த சனிக்­கி­ழமை பிரித்தா­னிய பாரா­ளு­மன்­றத்தில் நடத்­தப்­பட்ட வாக்­கெ­டுப்­பொன்று படு­தோல்­வியைத் தழு­வி­யி­ருந்த நிலை­யி­லேயே பிர­த­மரின் அலு­வ­லகம் மேற்­படி நட­வ­டிக்­கையை முன்­னெ­டுத்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

அந்த வாக்­கெ­டுப்­பி­லான தோல்­வி­யை­ய­டுத்து  போரிஸ்  ஜோன்ஸன்  சட்ட நிர்ப்­பந்தம் கார­ண­மாக  பிறிக்ஸிட் செயற்­கி­ர மத்தில் புதி­தாக தாம­த­மொன்றை ஏற்­ப­டுத்தக் கோரி ஐரோப்­பிய ஒன்­றி­யத்­துக்கு கடி­த­மொன்றை எழுதி  அனுப்ப நேர்ந்­தது. ஆனால் அந்தக் கடி­தத்தில் அவர் கைச்­சாத்­தி­ட­வில்லை.  

இந்­நி­லையில் பிறிக்ஸிட் உடன் ­ப­டிக்கை தொடர்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ‘இல்லை’ அல்­லது ‘ஆம்’ என தமது முடிவை தெளிவாகக் கூறு­வதைத் தான் விரும்புவ­தாகத் தெரிவித்த போரிஸ் ஜோன் ஸன்,  பாரா­ளு­மன்­றத்தின்  கடிதம் பாரா­ளு­மன்­றத்தின் தாம­தத்­திற்கு வழி­யேற்­ப­டுத்தித் தரு­வ­தற்கு நாம் அனு­ம­திக்க முடி­யாது என்று கூறினார்.

இந்­நி­லையில் பாரா­ளு­மன்­றத்தில் புதிய வாக்­கெ­டுப்­பொன்றை நடத்­து­வதா இல்­லையா எனத் தீர்­மா­னிப்­பது சபா­நா­யகர்  ஜோன் பெர்­கவ்­வி­டமே தங்­கி­யுள்­ளது.

போரிஸ் ஜோன்ஸன் கடந்த வாரம் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­துடன் புதிய பிறிக் ஸிட்  உடன்­ப­டிக்­கை­யொன்று தொடர்பில் இணக்கப்பாட்டை எட்டியிருந்தார். ஆனால் அதற்கு பாராளுமன்ற அங்கீகாரத்தைப் பெற வேண்டிய  தேவையுள்ளது.

இந்நிலையில் பிறிக்ஸிட் செயற்கிரமத்திலான தாமதம் தொடர்பான கோரிக்கைக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தற்போது ஆராய்ந்து வருகிறது.  ஆனால் கடந்த சனிக்கி ழமை அந்த உடன்படிக்கை தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஏற்பட்ட தோல்வி அந்த உடன்படிக்கை  நிராகரிக்கப் பட்டதாக பொருள்படாது என  ஐரோப்பிய ஒன்றியம்  கூறுகிறது.

அதேசமயம் மேற்படி பிறிக்ஸிட் உடன் படிக்கை குறித்து பிரித்தானிய பாராளு மன்ற பிரதிநிதிகள் சபையில் தமக்கு தற் போதும்  போதிய ஆதரவு இருப்பதாக அரசாங்கம் நம்புவதாக அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17