ஏற்படப்போகும் தோல்வியின் விரக்தியில் கோத்தா - விஜே­பால ஹெட்­டி­யா­ரச்சி

Published By: Jayanthy

22 Oct, 2019 | 12:20 PM
image

(எம்.மனோ­சித்ரா)

கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவும் அவ­ரது சகாக்­களும் தேர்­தலில் தோல்­வி­யடையப் போவதை அறிந்து கொண்­டதால் விரக்­தி­ய­டைந்­துள்­ளனர். அதன் வெளிப்­பா­டா­கவே ஐ.தே.க. ஆத­ர­வா­ளர்­களைத் தாக்­கு­கின்­றனர் என்று ஐக்­கிய தேசிய கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜே­பால ஹெட்­டி­யா­ரச்சி தெரி­வித்தார்.

ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர்  அங்கு மேலும் தெரி­விக்­கையில்,

பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவும் அவ­ரது சகாக்­களும் தோல்­வி­யடையப் போகிறோம் என்­பதை அறிந்து கொண்டு விரக்­தி­ய­டைந்­துள்­ளனர். இதனால் சஜித்தின்  ஆத­ர­வா­ளர்­களைத் தாக்­கி­யுள்­ளனர். தேர்தல் பிர­சார மேடை­களில் ஜன­நா­யகம் பற்றி உரத்து பேசு­ப­வர்கள் இவ்­வாறு தான் அதை நடை­மு­றைப்­ப­டுத்­து­வார்­களா?

இதுவே மஹிந்த ராஜ­ப­க் ஷ­வி­னு­டைய கொள்­கை­யாகும். யுத்­தத்தை நிறை­வ­டையச் செய்­ததைக் கூறியே கடந்த காலங்­களில் தேர்­தலில் வெற்றி பெற்­றனர். ஆனால் இம்­மு­றையும் அவ்­வாறு செயற்­பட முடி­யாது. காரணம் கடந்த 2015ஆம் ஆண்டின் பின்னர் சுதந்­தி­ர­மா­னதும் அமை­தி­யா­ன­து­மான தேர்­தலே நடை­பெ­று­கி­றது. தேர்­தல்கள் ஆணைக்­குழு சுயா­தீ­ன­மாக செயற்­ப­டு­கி­றது. அதே போன்று பொலி­ஸாரும் சுயா­தீ­ன­மாகச் செயற்­ப­டு­கின்­றனர். ஊட­கங்கள் சுதந்­தி­ர­மாகச் செயற்­ப­டு­கின்­றன. இவை அனைத்­தையும் குழப்பி மீண்டும் பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்த முயற்­சிக்­கின்­றனர்.

  மேடை­களில் சஜித்­திடம் கேள்வி கேட்­பதை நிறுத்­தி­விட்டு நேர­டி­யாக அவ­ருடன் பகி­ரங்க விவா­தத்தில் கோத்த­பாய ராஜ­பக் ஷ ஈடு­பட வேண்டும். ஊட­கங்­களை பார்த்து அவர் பயப்­ப­டு­கின்றார்.

மத்­திய வங்கி பிணை முறி ஊழல் குறித்து பேசப்­ப­டு­கி­றது. கடந்த 2008ஆம் ஆண்டு முதல் பிணை முறி மோசடி இடம்­பெ­று­வ­தாக ஜனா­தி­பதி ஆணைக்­குழு அறிக்கை சமர்ப்­பித்­தி­ருந்­த­தாக அறி­யக்­கி­டைத்­தது. எனினும் அந்த அறிக்கை வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. அத்­தோடு எயார் லங்கா விமான சேவை மூலம் 35 பில்லியன் நிதி மோசடி இடம்பெற்றுள்ளது. இந்த 35 பில்லியன் இருந்திருந்தால் உரமானியத்தை வழங்கியிருக்க முடியும். இவ்வாறான மோசடிகள் குறித்து நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27