இரா­ணுவம் நடு­நி­லை­யாக செயற்­பட வேண்டும்: தேர்­தல்கள் ஆணைக்­குழு

Published By: J.G.Stephan

22 Oct, 2019 | 11:03 AM
image

அடுத்­த­மாதம் நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித்தேர்­தலில் இரா­ணுவம் நடு­நி­லை­யாக செயற்­பட வேண்டும் என்று தேர்­தல்கள் ஆணைக்­குழு கோரி­யுள்­ளது.

ஜனா­தி­பதித்தேர்­தலில் போட்­டி­யிடும் கோத்­த­பாய ராஜ­பக் ஷ­வுக்கு ஆத­ர­வாக, இரா­ணுவத் தள­ப­தியின் படம் மற்றும் கருத்­துக்­க­ளுடன், தேர்தல் விளம்­ப­ரங்கள் வெளி­யி­டப்­பட்­டதை அடுத்தே, தேர்­தல்கள் ஆணைக்­குழு இவ்­வாறு கூறி­யுள்­ளது.

தனது பழைய படம் மற்றும் கருத்­துக்கள், தனக்குத் தெரி­யாமல் தேர்தல் விளம்­ப­ரங்­க­ளுக்கு பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக இரா­ணுவத் தள­பதி லெப்.ஜெனரல் சவேந்­திர சில்வா விளக்கம் அளித்­தி­ருந்தார்.

இது­கு­றித்து கருத்து வெளி­யிட்ட தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய, இந்த தேர்­தலில் எந்த வேட்­பா­ள­ரையும் தாங்கள் ஆத­ரிக்­க­வில்லை என்று இரா­ணுவத் தள­பதி உறு­தி­ய­ளித்­துள்ளார் என்று கூறினார்.

எனவே, கடந்த காலங்­களைப் போல, நடு­நி­லை­யாக இருப்­பதன் மூலம், இந்தத் தேர்­தலை நடத்­து­வ­தற்கு தேர்தல் ஆணைக்­கு­ழு­வுக்கு இரா­ணுவம் உதவும் என்று நாங்கள் நம்­பு­கிறோம் எனவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

இதற்­கி­டையே, இரா­ணுவத் தள­பதி லெப்.ஜெனரல் சவேந்­திர சில்­வாவின் ஒளிப்­படம் மற்றும் அவர் வெளி­யிட்­டி­ருந்த கருத்து என்­ப­ன­வற்றை ஜனா­தி­பதி தேர்தல் பரப்­புரை விளம்­ப­ரத்­துக்கு பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தற்கு எதி­ராக, சட்ட நட­வ­டிக்கை எடுக்கும் திட்டம் ஏதும் கிடை­யாது என்று இரா­ணுவம் தெரி­வித்­துள்­ளது.

இது­கு­றித்து கருத்து வெளி­யிட்ட இரா­ணுவப் பேச்­சாளர் மேஜர் ஜெனரல் சுமித் அத்­த­பத்து, இந்த நேரத்தில் விளம்­பரம் தொடர்­பாக சட்ட நடவடிக்கை எடுக்க இராணுவம் திட்டமிடவில்லை. இந்த விடயத்தை பாதுகாப்பு அமைச்சும் தேர்தல்கள் ஆணைக்குழுவுமே கையாள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17