சஜித்தை ஜனா­தி­ப­தி­யாக்கி மக்கள் தீர்ப்­ப­ளிக்க வேண்டும் - ரவூப் ஹக்கீம்

Published By: Digital Desk 3

22 Oct, 2019 | 11:10 AM
image

ஐக்­கிய தேசிய முன்­னணி ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக பலமும் ஆற்­றலும் மிக்க ஒரு­வரை தெரிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்­கையை தானே முதலில் தெரி­வித்­த­தாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் நகர திட்­ட­மிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ஸவை ஆத­ரித்து கெலி­ஓ­யாவில் நடை­பெற்ற கூட்­டத்­தி­லேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரை நிகழ்த்­து­கையில்,

 ஜன­நா­ய­கத்தை காப்­பாற்­று­வ­தற்­காக பாரா­ளு­மன்­றத்­திலும் கூட போராட வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டது. எதிர்க்­கட்­சி­யினர் பின் கதவால் ஆட்­சி­யொன்றை அமைத்துக் கொண்டு சபா­நா­ய­கரின் கதி­ரைக்கு தண்ணீர் ஊற்­றினர். மேலும் அதனை உடைக்க முற்­ப­டும்­போது தடுக்கச் சென்ற பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு மிளகாய் தூளை வீசினர்.

நானும் 25 வருட கால­மாக பாரா­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி பல்­வேறு அமைச்சுப் பத­வி­க­ளையும் வகித்து வந்­துள்ளேன். ஆனால், இம்­மா­தி­ரி­யான மோச­மான குழப்ப நட­வ­டிக்­கை­களில் இதற்கு முன்னர் எவரும் ஈடு­பட்­ட­தில்லை. அன்று நாங்கள் கதி­யற்­ற­வர்­க­ளாக இருந்தோம்.

எனினும், நீதி­மன்­றத்தின் முன்­னி­லையில் போராடி மீண்டும் ஜன­நா­ய­கத்தை நிலை நிறுத்த முடிந்­தது. ஐக்­கிய தேசிய கட்­சிக்குள் பல்­வேறு கருத்து வேறு­பா­டுகள் காணப்­பட்­டன. நான் வேறொரு கட்­சியின் தலைவர் என்ற வகையில் செயற்­பட்­டதால் எதையும் சுதந்­தி­ர­மாக கதைக்க முடிந்­தது.

எனவே, ஜனா­தி­பதி தேர்­தலில் புதிய சக்­தியும் ஆற்­றலும் கொண்ட ஒரு­வரை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிறுத்த வேண்டும் என்­பதை முதன் முதலில் வெளிப்­ப­டை­யாக எடுத்­து­ரைத்தேன்.

எமது அர­சாங்கம் 19ஆவது அர­சி­ய­ல­மைப்பு சீர்­தி­ருத்­தத்தை கொண்­டு­வந்­ததன் மூலம் சுயா­தீன நீதிச்சேவை உரு­வாக்க முடிந்­தது. கோத்­த­பா­யவின் அமெ­ரிக்கா விசா தொடர்­பான விவ­கா­ரத்­தை­ய­டுத்து எதிர்க்­கட்­சி­யி­னரும் இதனை ஏற்றுக் கொண்­டுள்­ளனர்.

எதிர்­வரும் 16ஆம் திகதி மக்கள் நீதி­மன்­றத்தில் சஜித் பிரே­ம­தா­ஸவை ஜனா­தி­ப­தி­யாக நிய­மித்து தீர்ப்­ப­ளிக்க வேண்டும். எமது அர­சாங்கம் ஊட­கத்­து­றைக்­கான பூரண சுதந்­தி­ரத்தை வழங்­கி­ய­துடன் இலஞ்சம் மற்றும் ஊழல்­க­ளுக்கு எதி­ரா­கவும், செயற்­ப­டவும் முடிந்­தது.

மத்­திய வங்­கியின் பிணை­முறி விவ­கா­ரத்தில் 11மில்­லியன் ரூபாய்­களை வங்­கியில் தடுத்து நிறுத்­தவும் முடிந்­துள்­ளது. இந்த அர­சாங்­கத்தின் பிர­சார நட­வ­டிக்­கை­களில் பாரிய குறை­பா­டுகள் காணப்­பட்­டாலும், நாம் பாரி­ய­ள­வி­லான அபி­வி­ருத்தி திட்­டங்­களை மேற்­கொண்டு வந்­துள்ளோம்.

 கண்டி மாவட்­டத்தில் மட்டும் எமது அமைச்சின் மூலம் நீர் வழங்கல் கருத்­திட்­டங்­க­ளுக்­காக 100பில்­லியன் ரூபாய்­களை முத­லீடு செய்­துள்ளோம். சுமார் 4 இலட்­சத்­துக்கும் அதி­க­மா­ன­வர்கள் பய­ன­டையக் கூடிய இலங்­கையில் மிகப் பெரிய நீர் வழங்கல் திட்­டத்தை கண்டி வடக்கு பாத­தும்­பர பிர­தே­சத்தில் ஆரம்­பித்­துள்ளோம். மேலும் 2 இலட்சம் குடும்­பங்கள் பய­ன­டையக் கூடிய வகையில் 24000 மில்­லியன் ரூபாய் இந்­திய உத­வித்­திட்­டத்தின் மூலம் குண்­ட­சாலை - ஹார­கம குடிநீர் திட்­டத்தை ஆரம்­பித்தோம்.

அதேபோல் கலஹா தெல்­தொட்ட பிர­தே­சத்­திற்­காக வேறொரு நீர் வழங்கல் திட்­டத்­தையும் ஆரம்­பித்­துள்ளோம். உயர் கல்வி துறை முன்­னேற்­றத்­திற்­காக விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களின் சம்பளத்தையும், கல்விசாரா ஊழியர்களின் சம்பளத்தையும் அதிகரிக்கச் செய்வதற்காக நடவடிக்கை எடுத்தோம்.

இந்த அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை 100க்கு 107வீதத்தால் அதிகரிக்கச் செய்து அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08