மூவராயிரம் வருடங்கள் பழமையான 30 சவப்பெட்டிகள் கண்டுபிடிப்பு! 

Published By: Vishnu

21 Oct, 2019 | 08:05 PM
image

எகிப்தின் லக்சர் நகரில் 3,000 வருடங்களுக்குப் பழமையான மரத்திலான மம்மி வடிவிலான 30 சவப் பெட்டிகளை எகிப்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கண்டுபிடிக்கப்பட்ட சவப்பெட்டிகளில் 23 ஆண்களுக்காகவும், 5 பெண்களுக்காகவும், 2 சிறுவர்களுக்காகவும் உருவாக்கப்பட்டிருந்தது. 

இந்த மம்மி வடிவிலான சவப்பெட்டிகளில் கைகள் மூடப்பட்ட நிலையில் இருக்கும் மம்மிகள் ஆண்களுக்கானது. கைகள் திறந்த நிலையில் இருக்கும் மம்மிகள் பெண்களுக்கானது. 

மேலும் சவப்பெட்டிகள் மீது பல வண்ணங்களில் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்ததாகவும் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். 

இந்த சவப் பெட்டிகள் நைல் நதியின் மேற்கு கரையில் இருக்கும் தீபன் நெக்ரொபொலிஸில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த பெட்டிகள் ஒன்றின் மீது ஒன்றாக இரண்டு அடுக்குகள் கொண்டுள்ளன. 

இது தற்போதைய வருடங்களில் கண்டறிந்த மிகவும் முக்கியமான மற்றும் பெரிய கண்டுபிடிப்பு எனத் தெரிவித்துள்ள, தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் அக் காலத்தில் வாழ்ந்த மன்னர்கள் குறித்தும், அதன் மூலமாக மக்கள் குறித்தும் புரிந்து கொள்ள இவை உதவும் என்றும் கூறியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right