வேட்பாளர்களின் பின்னால் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாரில்லை - த.தே.கூ.

Published By: Vishnu

21 Oct, 2019 | 07:39 PM
image

(ஆர்.யசி)

பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது வெற்றியை உறுதிப்படுத்த தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அவர்கள் தான் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமே தவிர ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் பின்னால் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாரில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள 13 அம்சக் கோரிக்கைகள் எமக்கு மிகவும் முக்கியமானதாகும். இந்த கோரிக்கைகள் தொடர்பில் பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்கள் அனைவருடனும் பேச நாம் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம். 

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அவர்கள் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுகொள்ள வேண்டும். 

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தமிழர் பிரதிநிதிகளாகிய எமது நிலைப்பாடு என்ன என்பதை அறிந்துகொள்ள பிரதான கட்சிகள் ஆவலாக உள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு தினமான  31 ஆம் திகதிக்கு முன்னர் எமது  நிலைப்பாட்டை அறிவிப்போம். அதற்கிடையில் நாம் ஐந்து தமிழ் கட்சிகளும் மீண்டும் இந்த வாரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33