ஆடுகளின் ஊர்வலம்..!

Published By: Jayanthy

21 Oct, 2019 | 03:31 PM
image

பாரம்பரியத்தை நினைவுகூரும் விதமாக, ஆண்டுதோறும் நடைபெறும் ஆடுகளின் ஊர்வலம், ஸ்பெயின் நாட்டில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த விவசாயிகள், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தங்கள் வாழ்வாதாரத்திற்காக, ஸ்பெயினின் வடக்கு பகுதியில் இருந்து தெற்கு பகுதிக்கு மந்தை மந்தையாக ஆடுகளை ஓட்டியபடி இடம் பெயர்ந்தனர்.

அந்த நிகழ்வை நினைவுகூரும் விதமாக, அதே வழித்தடத்தில் பாரம்பரிய முறைப்படி ஆடுகளை கொண்டு செல்லும் நிகழ்ச்சி கடந்த 1994ஆம் ஆண்டு முதல் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.

இதற்காக, ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், பெயரளவிற்காக ஆயிரம் ஆடுகளுக்கு 50 நாணயங்கள் மட்டுமே ஆடுகளை ஓட்டிச் செல்வோரிடம் கட்டணமாக  வசூலிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு நடைபெற்ற ஆடுகளின் ஊர்வல நிகழ்ச்சியில் 2 ஆயிரம் செம்மறி ஆடுகளும், 100 வெள்ளாடுகளும் இடம் பெற்றன.

அந்த ஆடுகளை, ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டின் பிரதான வீதிகள் வழியாக மேய்ப்பவர்கள் அழைத்துச் சென்ற காட்சியை, சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right