கூட்­ட­மைப்பு கோத்தாவுக்கு ஆத­ரவு வழங்­க­மாட்­டார்கள் - காஞ்­சன

Published By: Jayanthy

21 Oct, 2019 | 01:04 PM
image

(இரா­ஜ­துரை ஹஷான்)

தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின்  கொள்­கைக்கு   ஐக்­கிய தேசிய கட்சி நிச்­சயம் அடி­ப­ணியும். பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­தாபய ராஜபக்ஷவிற்கு கூட்­ட­மைப்­பினர் ஆத­ரவு வழங்க மாட்­டார்கள். நாட்டை பிள­வு­ப­டுத்தும் நிபந்­த­னை­களை  எவ்­வித மறுப்பும் இன்றி நிரா­க­ரித்­துள்ளோம் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் காஞ்­சன விஜ­ய­சே­கர தெரி­வித்தார்.

தேசிய  நல்­லி­ணக்­கத்தை முன்­னி­லைப்­ப­டுத்தி இலங்­கையர் என்ற அடை­யா­ளத்­துடன் வாழும் முஸ்லிம்–தமிழ் மக்கள்  பொது­ஜன பெர­மு­ன­விற்கு ஆத­ரவு வழங்­கு­கின்­றார்கள். அடிப்­ப­டை­வா­தி­க­ளி­னதும்,  பயங்­க­ர­வாதி சஹ்­ரானின் சகாக்­களின் ஆத­ரவு பார­தூ­ர­மா­னது எனவும் அவர் தெரி­வித்தார்.

மாத்­தறை  - திக்­வெல்ல  நகர பொது மைதா­னத்தில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின்  தேர்தல் பிரச்­சார கூட்­டத்தில் கலந்துகொண்டு கருத்­து­ரைக்­கையில்  அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

கூட்­ட­மைப்­பினர் உட்­பட தமிழ் தேசிய கட்­சிகள் முன்­வைத்த 13   கோரிக்­கை­களை  பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பாய  ராஜபக் ஷ எவ்­வித   இழுத்­த­டிப்­புக்­களும் இன்றி  நிரா­க­ரித்­துள்ளார். நாட்டை மீண்டும்  இருண்ட யுகத்­திற்கு கொண்டு  செல்ல வேண்­டிய தேவை எமக்கு கிடை­யாது.  தமிழ் மக்­களின்  அடிப்­படை பிரச்­சி­னை­க­ளுக்கு  நிச்­சயம்  தீர்வு வழங்­குவோம்.

நாட்டை பிள­வு­ப­டுத்தும் கோரிக்­கை­க­ளுக்கு நிச்­சயம்  ஐக்­கிய தேசிய கட்சி ஆத­ரவு வழங்கும். அதி­கா­ரத்தை கைப்­பற்­று­வதைத்தவிர பிறி­தொரு நோக்கம் அவர்­க­ளுக்கு கிடை­யாது.  அனைத்து மக்­க­ளுடன்  இணைந்து  இலங்­கை­ய­ராக வாழும் தமிழ்–முஸ்லிம் மக்கள் நிச்­சயம் ஆத­ரவு வழங்­கு­வார்கள். ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியும்,  பொது­ஜன பெர­மு­னவும் கொள்­கை­யினை முன்­னி­லைப்­ப­டுத்­தியே ஒன்­றி­ணைந்­துள்ளோம். கடந்த நான்­கரை வருட கால­மாக நாட்டில் இடம்பெற்ற அர­சியல் நிர்­வாக  கட்­ட­மைப்­புக்கள் அனைத்தும் நவம்பர் 16ஆம் திக­தி­யுடன்  முழு­மை­யாக மாற்­றி­ய­மைக்­கப்­படும்.

 எல்­பி­டிய பிர­தேச சபை தேர்தல் பெறு­பே­றுடன் ஜனா­தி­பதி தேர்­தலை ஒப்­பிட முடி­யாது என்று குறிப்­பிடும் ஐக்­கிய தேசிய கட்­சி­யினர்  அந்த பிர­தேச சபை தேர்­தலை வெற்றிகொள்­வ­தற்­கான அனைத்து வழி­மு­றை­க­ளையும் மறை­மு­க­மாக அரச அதி­கா­ரங்கள் மூலம் தேர்தல் சட்­டத்­திற்கு முர­ணான முறையில் முன்­னெ­டுத்­தது.

இலங்கை அர­சியல் வர­லாற்றில் இது­வரை காலமும் ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைவர் ரணில் விக்கி­ர­ம­சிங்­கவே அதி­க­ள­வி­லான தோல்­வி­களை எதிர்கொண்­டுள்ளார். அதா­வது இடம்பெற்ற 24 தேர்­தல்­களில் 21 தேர்­தல்­களில் 29 சத­வீத அடிப்­ப­டையில் தோல்­வி­ய­டைந்­துள்ளார்.  இம்­மாதம் இடம்பெற்று முடிந்த எல்­பி­டிய பிர­தேச சபை தேர்­தலை வெற்­றி­கொள்ளும் பொறுப்­புக்கள் அனைத்தும் ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர்  சஜித் பிரே­ம­தா­ச­விடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது. தேர்­தலை வெற்றிகொள்ள அவர்­ அ­னைத்து  அரச அதி­கா­ரங்­களை பிர­யோ­கித்தும் மக்­க­ளா­ணை­யினைப் பெற முடி­ய­வில்லை. பிர­தமர் ரணில் பெற்ற வாக்­கு­களை விட  குறை­வா­க­வே அமைச்சர் சஜித் பிரே­ம­தா­சவின் வழி­ந­டத்­தலின் ஊடாக பெற்­றுள்ளார்.

ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­சவின் கருத்­துக்கள் போதைப்­பொ­ரு­ளுக்கு அடி­மை­யா­ன­வ­ரது கருத்­துக்­களை போன்­ற­தா­கவே காணப்­ப­டு­கின்­றது. அமைச்­ச­ரவை உறுப்­பி­னர்கள் கொக்கைன் போதைப்­பொ­ரு­ளுக்கு அடி­மை­யா­கி­யுள்­ளார்கள் என்று  இரா­ஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராம­நா­யக்க குற்­றஞ்­சாட்­டினார். இக்­குற்­றச்­சாட்டு உண்மை என்றே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மக்­க­ளா­ணை­யுடன் ஆட்­சிக்கு  வந்த நல்­லாட்சி அர­சாங்கம்  மக்­களின் அடிப்­படை பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண முயற்­சிக்­க­வில்லை. தேசிய பாது­காப்­பிற்கு முக்கியத்­துவம் அளிக்கப் பட­வில்லை. மாறாக  சர்­வ­தேச மட்­டத்தில் யுத்­தத்தை வெற் றிகொண்ட இரா­ணு­வத்­தினர் குற்­ற­வா­ளி­களாக காணப்­பட்­டார்கள். இதற்கு 2015ம் ஆண்டு வெளி­விவ கார அமைச்சர் பதவி வகித்த மங்­கள சம­ர­வீர என்றும் பொறுப்புக் கூறவேண்டும்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30