தப்போவ நீர்த்தேகத்தின் 4 வான் கதவுகள் திறப்பு!

Published By: Vishnu

21 Oct, 2019 | 12:39 PM
image

புத்தளம் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக தப்போவ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் சுமார் 17.5 அடி வரை உயர்ந்துள்ளது.

இதனால் தப்போவ நீர்த்தேகத்தின் 4 வான் கதவுகள் 2 அடி உயரத்திற்கும் 3 வான் கதவுகள் 1 அடி உயரத்திற்கும் திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை பலத்த மழை காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

அதன்படி தப்போவா, ராஜாங்கணை மற்றும் தெதுரு ஓயா நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளும் களுத்துறை மாவட்டத்தில் உள்ள குக்குலே கங்கையின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நதிகள் மற்றும் நீர் நிலைகளின் நீர் மட்டம் உயர்ந்து வருவதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14