தமிழ் கட்சிகளின் கோரிக்கையை கோத்தா நிரா­க­ரித்தமை சாதா­ரண விடயமாகும்: செஹான் சேம­சிங்க  

Published By: J.G.Stephan

21 Oct, 2019 | 10:59 AM
image

(இரா­ஜ­துரை ஹஷான்)

தேர்தல் வெற்­றிக்­காக தமிழ் மக்­க­ளிடம் போலி­யான வாக்­கு­று­தி­களை  வழங்கி ஏமாற்­ற­மாட்டோம்.  வடக்கு மற் றும்  கிழக்கில் தீர்க்­கப்­பட வேண்­டிய அடிப்­படை பிரச்­சி­னைகள் பல காணப்­ப­டு­கின்­றன. அவற்­றிற்கு  முழு­மை­யான  தீர்வு  குறு­கிய  காலத்­திற்குள்  வழங்­கப்­படும் என  பொது­ஜ­ன­பெ­ர­மு­னவின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் செஹான் சேம­சிங்க  தெரி­வித்தார்

 வடக்கில்  தமிழ்  கட்­சிகள் இணைந்து தயா­ரித்­துள்ள 13 அம்ச திட்­டத்­தினை  பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ நிரா­க­ரித்­துள்­ளமை சாதா­ரண விட­ய­மே­யாகும்.இந்த நிரா­க­ரிப்­பினைக் கொண்டு அவர்  தமிழ் மக்­க­ளுக்க எதி­ரா­னவர் என்று கரு­து­வது முற்­றிலும் தவ­றா­ன­தாகும்.

13 அம்­சத்­திட்­டத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள  விட­யங்கள்  நிறை­வேற்­றப்­படும் என்று போலி­யான வாக்­கு­று­தி­களை வழங்கி தமிழ் மக்­களை ஏமாற்ற வேண்­டிய தேவை கிடை­யாது.  தேர்தல் வெற்­றி­யினை கருத்திற்  கொண்டு செயற்­ப­டு­வ­தாக இருந்தால்  நல்­லாட்சி அர­சாங்கம் போல் பல   வாக்­கு­று­தி­களை வழங்­கலாம்.   முடிந்த விட­யங்­களை மாத்­தி­ரமே  தேர்தல் வாக்­கு­று­தி­க­ளாக   வழங்­குவோம். இதில் தமிழ் - சிங்­கள மக்கள் என்ற வேறுப்­பாடு கிடை­யாது.

அர­சியல் தீர்வு   என்ற  விட­யத்தை குறிப்­பிட்டே ஐக்­கிய தேசிய கட்சி   தமிழ் மக்­களின் ஆத­ர­வுடன் அதி­கா­ரத்தை  கைப்­பற்­றி­யது. கடந்த  நான்­கரை வருட கால­மாக   அர­சியல் குறித்து  முன்­னெ­டுக்­கப்­பட்ட விட­யங்கள் அனைத்தும் பய­னற்­ற­தா­னது. ஒரு  தரப்­பி­ன­ருக்கு  சாத­க­மாக செயற்­படும் போது அதன் எதிர்­வி­ளைவு  பிறி­தொரு தரப்­பி­ன­ருக்கு  தாக்கம் செலுத்­து­வ­தாக காணப்­பட்­டது. 

நல்­லாட்சி அர­சாங்கம் அர­சியல் தீர்வு என்ற விட­யத்தை குறிப்­பிட்டே கடந்த  நான்­கரை வருட கால­மாக தமிழ் மக்­களை ஏமாற்­றி­யுள்­ளது.

அர­சாங்­கத்தில் முக்­கிய   பொறுப்­பிலும்,   அந்­தஸ்த்­திலும் இருந்த தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு  தமிழ் மக்­களின் அடிப்­படை பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண­வில்லை. மாறாக தேவை­யற்ற விட­யங்­க­ளுக்கே    முக்­கி­யத்­துவம் கொடுத்­தார்கள்.இறு­தியில் அர­சியல் தீரவு  கிடைக்கப் பெற­வில்லை. வடக்கு கிழக்­கிற்கு அபி­வி­ருத்­தியும் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. இதில்  ஏமாற்­ற­ம­டைந்­தது தமிழ் மக்கள் மாத்­தி­ர­மே­யாகும்.

தமிழ்­அ­ர­சியல் தலை­மைகள் சுய நல போக்­கு­டனே செயற்­ப­டு­கின்­றார்கள். அதன் கார­ண­மா­கவே  தமிழ் மக்­களின் ஆத­ர­வினை கோரு­கின்றோம். எத்­த­ரப்­பி­னரும் முரண்­ப­டாத வகையில் வடக்கு மற்றும் கிழக்கில் அபிவிருத்திகளை  முன்னெடுப்போம் என்பதில் எவ்வித மாற்று கருத்துக்களும் கிடையாது.   

தமிழ் மக்கள்   பொது யதார்த்த நிலைமையினையும்,  நல்லாட்சி அரசாங்கத்தில் ஏமாற்றப்பட்டதையும் புரிந்துக் கொண்டு அரசியல் ரீதியில் தீர்மானங்களை  முன்னெடுக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08