தமிழ்க்­கட்­சி­களை சந்­திக்க தயங்கும் வேட்­பா­ளர்கள்: நிபந்­த­னை­களால் ஏற்­பட்­டுள்ள நெருக்­கடி

Published By: J.G.Stephan

20 Oct, 2019 | 12:07 PM
image

ஆர்.ராம்

ஜனா­தி­பதி வேட்­பாளர்  யாருக்கு  ஆத­ரவு வழங்­கு­வது என்­பதை தீர்­மா­னிக்கும் வகையில்  ஐந்து தமிழ்க்  கட்­சிகள்  ஒன்­றி­ணைந்து  எடுத்த  இணக்­கப்­பாடு தொடர்­பான ஆவ­ணத்தை ஏற்­றுக்­கொள்­வதில் இரு பிர­தானக் கட்­சி­களின் வேட்­பா­ளர்­களும் பின்­ன­டிப்­ப­தாகத்  தெரி­ய­வ­ரு­கி­றது.

13 அம்­சக்­கோ­ரிக்­கை­களை  உள்­ள­டக்­கிய   குறித்த  ஆவ­ணத்தை  மேற்­படி  பிர­தான வேட்­பாளர்  இரு­வ­ரி­ட மும் சமர்ப்­பித்து பேச்சு நடத்த தமிழ்த்­த­ரப்பு  விரும்­பிய போதிலும்  குறித்த ஆவ­ணத்தின்  அடிப்­ப­டையில் பேச்­சுக்­களை  ஆரம்­பித்தால்  பெரும்­பான்மை  சிங்­கள  மக்­களின் ஆத­ரவை  அவை இழக்க நேரும் என  அஞ்­சு­வ­தா­கவும்  அதுவே தமிழ் தலை­வர்­களை  சந்­திக்க  தயக்கம்  காட்­டு­வ­தற்­கான பிர­தான காரணம்  என்றும்  தெரி­ய­வ­ரு­கி­றது.

நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்­தலில் பிர­தான மூன்று ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­க­ளி­டத்­திலும் தமிழ் மக்­களின் அடிப்­படை மற்றும் உட­னடிப் பிரச்­சி­னை­களை உள்­ள­டக்­கிய 13அம்ச கோரிக்­கை­களை முன்­வைத்து பேச்­சு­வார்த்­தை­களை நடத்­து­வ­தென்றும், அத­ன­டிப்­ப­டை­யி­லேயே தமிழ் மக்கள் யாரை ஆத­ரிப்­பது என்று பகி­ரங்­க­மாக அறி­விப்பு விடுக்கும் தீர்­மா­னத்­தினை எடுப்­ப­தென்றும் தமிழ்த் தேசிய பரப்பில் உள்ள ஐந்து தமிழ் அர­சியல் கட்­சிகள் பொது இணக்­கப்­பாட்­டிற்கு வந்­த­தோடு அக்­கட்­சி­களின் தலை­வர்­களும் கையொப்பம் இட்­டி­ருந்­தனர். 

இந்­நி­லையில் பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பா­ளரும் முன்னாள் பாது­காப்புச் செய­லா­ள­ரு­மான கோத்­தா­பய ராஜ­பக்ஷ ஐந்து கட்­சிகள் கூட்­டி­ணைந்து முன்­வைத்­துள்ள 13அம்ச கோரிக்­கை­களை ஏற்­கப்­போ­வ­தில்லை என்றும் நிபந்­த­னை­க­ளுடன் அக்­கட்­சி­களின் தலை­வர்கள் குழு­வுடன் அமர்ந்து பேசு­வ­தற்கு கூட தயா­ரில்லை என்றும் திட்­ட­வட்­ட­மாக  அறி­விப்­பினை விடுத்­துள்ளார். 

பிர­த­மரின் கூற்றும் சஜித்தின் தாம­தமும்

அடுத்த கட்­ட­மாக மற்­றொரு பிர­தான அர­சியல் தரப்­பான ஐக்­கிய தேசியக் கட்சி தலை­மை­யி­லான புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் வேட்­பாளர் அமைச்சர் சஜித் பிரே­ம­தா­ஸவை ஐந்து கட்­சி­களின் தலை­வர்­களும் கூட்­டாக சந்­திப்­ப­தற்கு முயற்­சிகள் எடுக்­கப்­பட்­டன. 

குறிப்­பாக யாழிற்குச் சென்­றி­ருந்த ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, ஈழ­மக்கள் புரட்­சி­க­ர­வி­டு­தலை முன்­ன­ணியின் தலைவர் சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ர­னு­ட­னான சந்­திப்­பின்­போது, தான் கொழும்பு திரும்­பி­யதும் வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ஸ­வுடன் பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி சந்­திப்பை நடத்­து­வ­தற்­கான நேர ஒதுக்­கீட்­டினை பெற்­றுத்­த­ரு­வ­தா­கவும் தேசிய விட­யங்­களில் நீண்ட அனு­ப­வங்­களைக் கொண்ட அமைச்­சர்­க­ளான மங்­கள சம­ர­வீர, ராஜித சேனா­ரத்ன போன்­ற­வர்­க­ளையும் அக்­க­லந்­து­ரை­யா­டலில் உள்­ளீர்ப்­ப­தற்­கான நிலை­மை­களை ஏற்­ப­டுத்­து­வ­தா­கவும் குறிப்­பிட்­டி­ருந்தார். 

எனினும் சஜித் பிரே­ம­தாஸ பிர­சாரப் பணி­களில் தொடர்ச்­சி­யாக ஈடு­பட்­டுள்­ள­மையால் உட­ன­டி­யாக கொழும்பில் இத்­த­கைய சந்­திப்­பொன்றை நடத்­து­வ­தற்கு நேர­ஒ­துக்­கீட்டை வழங்க முடி­யாத திரி­சங்கு நிலையில் அவர் இருப்­ப­தாக சஜித் தரப்பில் பிர­த­ம­ருக்கு தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக அக்­கட்­சியின் முக்­கி­யஸ்தர் ஒருவர் தெரி­வித்­துள்ளார். 

இதே­நேரம் பிர­தமர் ரணி­லிடம் நேர ஒதுக்­கீட்டை பெறு­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தி­ருந்த கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன், நேர ஒதுக்­கீடு குறித்த உறு­திப்­பாடு இன்­னமும் கிடைக்­க­வில்லை என்று குறிப்­பிட்டார்.

மறு­பக்­கத்தில் தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் தலைவர் சி.வி.விக்­னேஸ்­வ­ரனும் அண்­மைய நாட்­களில் கொழும்பில் தங்­கி­யி­ருப்­ப­தோடு 23ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள பாரா­ளு­மன்ற அமர்வில் பங்­கேற்­ப­தற்­காக புளொட், ரெலோ ஆகிய கட்­சி­களின் தலை­வர்­களும் கொழும்­புக்கு வருகை தர­வுள்­ளனர். 

சிங்­கள வாக்­குகள் இழக்­கப்­படும் அச்சம்

எவ்­வா­றா­யினும், ஐந்து தமிழ் கட்­சி­களும் இணைந்து முன்­வைத்­துள்ள 13அம்ச கோரிக்­கைகள் நாட்டை பிள­வு­ப­டுத்­து­வ­தா­கவும் இரா­ணு­வத்­தி­னரை காட்­டிக்­கொ­டுப்­ப­தா­கவும் அமை­கின்­றது. அந்த நிபந்­த­னை­களை ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டால் இந்த நாட்டின் சுயா­தீ­னத்­தன்மை கேள்­விக்­கு­றி­யா­கி­விடும் ஆகவே அவற்றை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

அத­னா­லேயே நிபந்­த­னை­களை முன்­வைத்­துள்ள தமிழ்த் தரப்­பினை கோத்­தா­பய சந்­திக்கும் தீர்­மா­னத்­தினை கூட எடுக்­க­வில்லை என்று  ராஜ­பக்ஷ தரப்பில் பிர­சா­ரங்கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில் சஜித் பிரே­ம­தாஸ தமிழ்த் தரப்­பினை சந்­திப்­ப­தற்­கான நிலை­மை­களை தவிர்ப்­ப­தற்கு தீர்­மா­னித்­துள்­ள­தாக அறி­ய­மு­டி­கின்­றது. 

சஜித் பிரே­ம­தாஸ தமிழ்த் தரப்பின் 13அம்ச கோரிக்­கை­களை ஏற்­காது வெறு­மனே சந்­திப்பில் ஈடு­பட்­டாலே தென்­னி­லங்­கையில் தமிழ்த் தரப்­புடன் இர­க­சிய ஒப்­பந்­த­மொன்றை மேற்­கொண்­டு­விட்டார் என்று கடு­மை­யான பிர­சாரம் செய்­யப்­படும். இதனால் தென்­னி­லங்கை சிங்­கள வாக்­கு­களை அவர் பெற­மு­டி­யாத நிலை­யொன்று தோற்­றம்­பெற்­று­விடும் என்றும் அவ­ருக்கு நெருக்­க­மான தரப்­புக்கள் ஆலோ­சனை வழங்­கி­யுள்­ள­தா­கவும் அறிய முடி­கின்­றது. 

எனினும், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தரப்பில் தமிழ்த் தரப்­புடன் சந்­திப்­புக்­களை நடத்­த­வேண்டும் என்றும் தென்­னி­லங்கை மக்­க­ளுக்கு யதார்த்­தத்­தினை தெளிவு படுத்­த­வேண்டும் என்றும், கடந்த காலத்தில் கூட்­ட­மைப்­புடன் ஒப்­பந்தம் செய்­வ­தாக பிர­சாரம் செய்­யப்­பட்­ட­போதும் நாடு இன்று வரையில் பிள­வ­டை­ய­வில்லை என்­ப­தையும் எடுத்­துக்­கூ­ற­வேண்டும் என்றும் பிரஸ்­தா­பிக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் தமிழ்த் தரப்­பினை சந்­திப்­பது குறித்து எவ்­வி­த­மான இறுதி முடி­வு­களும் இச்­செய்தி அச்­சுக்கு செல்லும் வரையில் எடுக்­கப்­ப­ட­வில்லை.


ஜே.வி.பியின் சமிக்ஞை
தமிழ்க் கட்­சி­களின் 13அம்ச நிபந்­த­னைகள் தொடர்பில் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பிர­சார செய­லா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விஜித ஹேரத் கருத்­து­வெ­ளி­யி­டு­கையில், வடக்கு கிழக்கு இணைப்பு, சமஷ்டி கோரிக்கை போன்ற நடை­மு­றைச்­சாத்­தி­ய­மல்­லாத விட­யங்­களை எம்மால் ஏற்க முடி­யாது என்றும் தமிழ் மக்­களின் வாழ்­வா­தாரப் பிரச்­சி­னை­க­ளையும்  உட­னடிப் பிரச்­சி­னை­க­ளையும் தாம் ஏற்­றுக்­கொள்­வ­தா­கவும் குறிப்­பிட்டார்.

அத்­துடன் தமது கட்­சியின் நிலைப்­பா­டு­க­ளுடன் ஒத்­துப்­போ­கின்­றதும் நடை­முறை சாத்­தி­ய­மான விட­யங்­களும் 13  அம்ச கோரிக்­கை­களில் காணப்­ப­டு­வதால் அவை தொடர்பில் கலந்­து­ரை­யாட தயா­ராக இருப்­ப­தா­கவும் கூறினார். 

கால அவ­கா­சமும் மாற்­று­வ­ழியும்
இவ்­வா­றி­ருக்க, 13அம்ச கோரிக்­கை­களில் ஐந்து கட்­சி­களின் தலை­வர்கள் கையொப்­ப­மிட்டு பொது இணக்­கப்­பாட்­டிற்கு வந்­த­பின்னர் இந்த நிபந்­த­னை­களை பிர­தான கட்­சி­களின் வேட்­பா­ளர்கள் ஏற்க மறுத்தால் அடுத்­த­கட்­ட­மாக என்ன செய்­வது என்­பது தொடர்பில் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­டலில் மூன்று தெரி­வுகள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளன.

தேர்தலை புறக்கணிப்பது இல்லையேல் தேர்தல் களத்தில் களமிறங்கியுள்ள சிவாஜிலிங்கத்தினை ஆதரிப்பது, மக்களின் சுயாதீன முடிவுக்கு விடுவது ஆகிய மூன்று விடயங்கள் தொடர்பிலேயே ஆராயப்பட்டுள்ளன.

எனினும்  தேர்தலை  புறக்கணிப்பது  அல்லது  பொருத்தமற்ற  வேட்பாளருக்கு   வாக்களிப்பது  என்பன  மேலும்  தமிழ் மக்களை  மோசமான  நிலைக்கு  கொண்டு செல்லும் என்பதால்  மக்களை  சுயாதீனமுடிவுக்கு விட்டுவிடுவதே  சிறந்தது  என்றும்  தமிழ் தரப்புக்கள் விரும்பவதாகத் தெரியவருகிறது. 

இந் நிலையில் 23ஆம் திகதி வரையில் ஜனாதிபதி வேட்பாளர்களின் போக்கினை அவதானித்து அதன் பின்னர் அடுத்த  கட்டம் தொடர்பில் தீர்மானிப்பதற்கான கலந்துரையாடலை ஐந்துகட்சிகளுக்கும் இடையில் முன்னெடுப்பதற்கு  முயற்சிகள்  எடுக்கப்படுவதாக   சிவில் சமுக பிரதிநிதி கலாநிதி.கே.ரி.கணேசலிங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44