எலும்பு அடர்த்தி குறைவு பாதிப்பை கண்டறியும் நவீன கருவி

Published By: Daya

18 Oct, 2019 | 03:35 PM
image

ஒஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு அடர்த்தி குறைவு நோய் கடந்த தசாப்தங்களில் மாதவிடாய் நின்ற பெண்களுக்குத் தான் அதிக அளவில் ஏற்படும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போதைய ஆய்வின்படி வயது வித்தியாசமின்றி ஆண் பெண் இருபாலருக்கும் எலும்பு அடர்த்தி குறைவு நோய் ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

கல்சிய சத்து பற்றாக்குறையின் காரணமாகவும், கல்சியம் சத்துக்களை உட்கிரகிப்பதில் ஏற்படும் இடையூறு காரணமாகவும் எலும்பு அடர்த்தி குறைவு நோய் ஏற்படுகிறது. முன்பு இத்தகைய பாதிப்பு ஐம்பது வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு அதிகளவில் ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டது.

 ஆனால், தற்போதைய ஆய்வின்படி ஒஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு அடர்த்தி குறைவு நோய், 30 வயது முதல் 60 வயது வரை உள்ள ஆண் மற்றும் பெண்களுக்கு ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டிருக்கிறது. பொதுவாக இத்தகைய எலும்பு அடர்த்தி குறைவைக் கண்டுபிடிப்பதற்கு தற்போது Dexa எனப்படும் ஸ்கேன் கருவி மூலமாகத் துல்லியமாகக் கண்டறியப்படுகிறது.

 ஆனால், Quantitative Ultrasonography என்ற கருவி மூலம் ஆய்வு செய்யப்படும்போது, இவற்றின் முடிவுகள் 90 சதவீதம் வரை துல்லியமாக இருப்பதாலும், அத்துடன் இத்தகைய கருவியினை நோயாளிகள் இருக்கும் இடத்திற்கு எடுத்துச் சென்று கண்டறியப்படப்படுவதால் இத்தகைய பாதிப்பைக் கண்டறிய முடிகிறது என்கிறார்கள் வைத்திய நிபுணர்கள்.

எலும்பு அடர்த்தி குறைவு பாதிப்பை ஆரம்பத்திலே கண்டறிந்தால் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி மூலமே அதனை மீட்டெடுக்க முடியும். ஆனால் அதனை முற்றிய நிலையில் கண்டறியப்பட்டால் இடுப்பு வலி, மூட்டு வலி ஆகிய பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன், சத்திர சிகிச்சை வரை கொண்டு செல்லும். 

அத்துடன் நாளாந்தம் வலியுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். எலும்பு அடர்த்தி குறைவு பாதிப்பை வராமல் தடுக்க வேண்டுமென்றால், உடற்பயிற்சிகளுடன் பால் சார்ந்த உணவுப் பொருள்கள் மற்றும் கல்சியம் சத்து நிறைந்த உணவுகளைத் தொடர்ந்து எடுத்துக் கொள்வதன் மூலம் இதனைக் கட்டுப்படுத்தலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29