தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை தொடர்பில் துரித விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் - ரணில்

Published By: Daya

18 Oct, 2019 | 01:38 PM
image

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பணியாற்றிய தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் துரித விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஊடகவியலாளர்களின் கொலை சம்பவங்களுடன் ஆரம்பிக்கும் விசாரணை படிப்படியாக ஊடகவியலாளர்கள், கட்டத்தப்பட்ட, காணாமல் போகச் செய்யப்பட்ட மற்றும் தாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பிலும் நடத்தப்படும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் யூ.எஸ் கோட்டலில் நேற்று வியாழக்கிழமை மாலை பிரதமரின் செய்திளார் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஊடகவியலாளர் ஒருவரால் கொல்லப்பட்ட சிங்கள ஊடகவியலாளர்கள் விடயத்தில் அரசாங்கம் காட்டும் அக்கறை கொல்லப்பட்ட, கடத்தப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் காட்டப்படவில்லை. ஏன் இந்த பாகுபாடு காட்டப்படுகின்றது என கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த பிரதமர், முதலில் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ்சின் கொலை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த கொலை தொடர்பில் நடந்த விசாரணைகளில் ஏற்பட்டதிருப்பதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கொல்லப்பட்ட, காணாமல் போகச் செய்யப்பட்ட, தாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பிலும் விசாரணைகள் நடத்துவோம்.

இந்த ஆட்சியின் போது தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இளைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு ஆட்பலம் குறைவாக இருந்தது. ஒவ்வொரு சம்பவமாகத்தான் விசாரணைகளை நடத்த வேண்டும். முழு  பொலிஸ்  அதிகாரிகளையும் இந்த விசாரணைகளுக்காக ஈடுபடுத்த முடியாதுள்ளது என்றார்.

தொடர்ந்து கேள்வி எழுப்பிய அந்த ஊடகவியலாளர் குறிப்பாகக் கடத்தப்பட்டு உயிருடன் மீண்ட உயிருள்ள சாட்சியாகத் தமிழ் ஊடகவியலாளர்கள் இருக்கும் போதிலும், அரசியல் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் விசாரணை நடத்த முடியாமல் உள்ளதற்கு என்ன காரணம் வினவினார்.

இதற்குப் பதிலளித்த பிரதமர், தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்துவோம். முதலில் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் விசாரணைகளை ஆரம்பிப்போம் என தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38