முழங்கையில் ஏற்பட்ட கட்டியை அகற்றி வைத்தியர்கள் சாதனை

Published By: Daya

17 Oct, 2019 | 01:01 PM
image

சென்னையில் 30 வயதுடைய இளைஞர் ஒருவரின் முழங்கை மூட்டு நடுவே ஏற்பட்ட கட்டியை அதிநவீன சிகிச்சைகளின் மூலம் சென்னையை சேர்ந்த வைத்தியர்கள் அகற்றி சாதனை செய்திருக்கிறார்கள்.

இதுகுறித்து சத்திரசிகிச்சை மேற்கொண்ட வைத்திய நிபுணர்  ஏ. பி. கோவிந்தராஜ் தெரிவிக்கையில்,“

சென்னையில் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றி வரும் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் முழங்கை மூட்டில் வலி இருப்பதாக சொல்லி சிகிச்சை பெற வந்தார். அவரை விசாரிக்கும் போது, கடந்த ஓராண்டுக்கும் மேலாக கடுமையான வலி இருந்ததாகவும், அதனை வைத்தியர்கள் டென்னிஸ் எல்போ எனப்படும் முழங்கை வலிதான் என கருதி, அதற்கு சிகிச்சை பெற்றதாகவும், ஆனால் சிகிச்சைக்கு பின்னரும் அந்த லி தொடர்வதால் தற்பொழுது இந்த தனியார் வைத்தியசாலைக்கு வருகை தந்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

அவரைத் துல்லியமாக பரிசோதனை செய்ததில், முழங்கை மூட்டிற்கு நடுவே, சிக்கலான இடத்தில் 1.5 சென்டி மீற்றர் அளவிற்கு கட்டி உருவாகி இருந்தது தெரியவந்தது. அந்த கட்டியை சத்திர சிகிச்சை மூலம் அகற்றினால் அதனுடன் முழங்கை எலும்பு சேதமடையும் கூடும் என்பதால், கதிரியக்க தொழில்நுட்ப உதவியுடன் இதனை அகற்ற தீர்மானித்தோம்.

பிறகு அப்பகுதியில் லேசர் கதிரியக்க தொழில்நுட்பம், முப்பரிமாண ஸ்கேன் தொழில்நுட்பம் ஆகியவற்றின் உதவியுடன் கட்டி இருக்குமிடம் துல்லியமாக கண்டறியப்பட்டு, 5 மில்லி மீற்றர் அளவிற்கு துளையிட்டு, அதனூடாக நவீன கதிரியக்க சிகிச்சை மூலம், அந்த கட்டி அகற்றப்பட்டது. இத்தகைய நவீன தொழில் நுட்பத்திலான சத்திர சிகிச்சை மேற்கொள்வது இதுதான் முதல் முறை.” என்றார். சிகிச்சைக்குப் பின்னர் அந்த நோயாளி வலியேதுமின்றி உற்சாகத்துடன் பணியாற்றுவதாகவும், தொடர்ந்து மூன்று மாதம் வைத்திய நிபுணர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29