பொதுக்கொள்­கை­யுடன் கூட்­ட­மைப்பு அழைப்பு விடுத்தால் சாத­க­மான தீர்­மானம் - பொது­ஜன பெர­மு­ன

17 Oct, 2019 | 01:08 PM
image

(இரா­ஜ­துரை ஹஷான்)

ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு முன்னர் ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­முன 35 அர­சியல்  கட்­சி­க­ளுடன் கூட்­ட­ணி­ய­மைத்துக் கொள்ளும். பொதுக் கொள்­கை­யுடன்  ஒத்­துப்­போகும் வகையில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு பேச்­சு­வார்த்­தைக்கு அழைப்பு விடுத்தால் சாத­க­மான தீர்­மா­னங்­களை இரு தரப்பும் முன்­னெ­டுக்கும்  என பொது­ஜன பெர­மு­னவின் பொதுச்­செ­ய­லாளர் சாகர காரி­ய­வசம் தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­மு­ன­வுடன் பாரா­ளு­மன்ற அங்­கீ­கா­ரத்­துவம் பெற்­றுள்ள அர­சியல் கட்­சிகள், சிவில் அமைப்­புகள் உள்­ள­டங்­க­லாக இது­வ­ரையில் 23 கட்­சிகள்  கூட்­ட­ணி­ய­மைத்துக் கொண்­டுள்­ளன.  தற்­போதும் 12  அர­சியல் கட்­சி­க­ளுடன் தொடர் பேச்­சு­வார்த்­தைகள் இடம்பெற்று வரு­கின்­றன.  எவ்­வா­றா­யினும் ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு முன்னர் 35 கட்­சி­க­ளுடன் பல­மான கூட்­ட­ணியை அமைத்துக்  கொள்வோம். 

ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியும்  இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸும் பொது­ஜன பெர­மு­ன­வுடன்  இணைந்­துள்­ளமை பாரிய பல­மாகக் காணப்­ப­டு­கின்­றது.  கூட்­டணி அமைத்துக் கொள்ளும் போது முன்­வைக்­கப்­பட்ட நிபந்­த­னைகள் ஸ்ரீ லங்கா பொது­ஜன  பெர­மு­னவின் கொள்­கைக்கும், அடிப்­படை பொதுக் கொள்­கை­க­ளுக்கும் இணக்­க­மாகக் காணப்­பட்­ட­மை­யி­னாலே வெற்­றி­க­ர­மான கூட்­டணி தற்­போது தோற்றம் பெற்­றுள்­ளது. 

தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு   ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­மு­னவின் கொள்­கைக்கும், அடிப்­படைக் கொள்­கைக்கும்  ஒத்­துப்­போகும் வகையில் பேச்­சு­வார்த்­தைக்கு அழைப்பு விடுத்தால் நிச்­சயம் எவ்­வித  மறுப்பும் தெரி­விக்­காமல் கலந்து கொள்வோம்.  எம்­முடன் கூட்­டணி அமைத்துக் கொள்ளும் அனைத்துக் கட்­சி­க­ளி­னதும்  பிரத்­தி­யே­கமாக உள்ள அவர்­க­ளது  கொள்­கைகள் பாது­காக்­கப்­படும்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­ப­க்ஷவின் தலை­மை­யி­லான குழு­வினர் நேற்று வடக்கு மாகா­ணத்­துக்கு விஜயம் செய்து நான்கு மக்கள் சந்­திப்­பு­களை வெற்­றி­க­ர­மாக முன்­னெ­டுத்­துள்­ளனர். 

 தமிழ் மக்­க­ளுக்கு நன்மை பயக்கும்  பல  விடயங்கள்   பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில்  உள்ளடக்கப்பட்டுள்ளன. அரசியல் தேவைகளை விடுத்து மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே எமது  பிரதான இலக்காகும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58