தமிழ் மக்கள் தேர்­தலைப் புறக்­க­ணிக்க வேண்­டு­மென எவரும் வலி­யு­றுத்­தக்­ கூ­டாது - தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு

17 Oct, 2019 | 01:49 PM
image

(ஆர்.யசி)

கோத்­த­பாய ராஜபக்ஷவை ஆத­ரிப்­பதா அல்­லது சஜித் பிரே­ம­தா­சவை ஆத­ரிப்­பதா என்­பது தெரி­வாக இருக்­கலாம். ஆனால் தமிழ் மக்கள் தேர்­தலைப் புறக்­க­ணிக்க வேண்­டு­மென எவரும் வலி­யு­றுத்­தக்­ கூ­டாது. இன்று எமக்­குள்ள ஒரே­யொரு ஜன­நா­யக ஆயுதம் எமக்­குள்ள வாக்­கு­ரிமை என்­பதை மறந்­து­வி­டக்­ கூ­டாது என்­கி­றது தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு.

ஜனா­தி­பதித் தேர்தல் குறித்தும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் நிலை­ப்பா­டுகள் குறித்தும் வின­விய போதே கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.ஸ்ரீதரன் இதனைக் கூறினார். 

அவர் மேலும் கூறு­கையில்,

கோத்­த­பாய ராஜபக்ஷவை ஆத­ரிப்­ப­தா அல்­லது சஜித் பிரே­ம­தா­சவை ஆத­ரிப்­ப­தா என்­பது குறித்தும் நாம் தீர்­மா­ன­மெ­டுக்க காலம் உள்­ளது. இப்­போது பிர­தான வேட்­பா­ளர்கள் தத்­த­மது தேர்தல் வாக்­கு­று­தி­களை படிப்­ப­டி­யாக முன்­வைத்து வரு­கின்­றனர்.

ஆகவே இன்­னமும் சிறிது நாட்­களில் தமிழ் மக்­களின் தலை­மைகள் என்ற வகையில் நாம் மக்­க­ளுக்கு ஏற்ற தீர்­மானம் ஒன்­றை எடுப்போம். 

தமிழ் மக்கள் எம்மை பிர­தி­நி­தி­க­ளாகத் தெரிவு செய்து அர­சியல் களத்தில் இறக்­கி­யுள்ள நிலையில் எமது மக்­களைக் கைவிட்டு சுய­நல அர­சியல் செய்ய எம்மால் முடி­யாது. நாம் எப்­போதும் எமது மக்கள் நலன்கள் சார் விட­யங்­க­ளையே முன்­னெ­டுப்போம்.

தமிழ் மக்­களின் நீண்­ட­கால அர­சியல் பிரச்­சி­னை­களில் மக்­களின் உண்­மை­யான பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­களைப் பெற்­றுக்­கொ­டுக்கும் வகையில் எந்த வேட்­பாளர் வாக்­கு­று­தி­களை வழங்­கு­கின்றார் என்­பதை நாம் அவ­தா­னித்­துக்­கொண்­டுள்ளோம். 

எமக்குத் தீர்வு வேண்டும். இதில் நாம் முன்­வைக்கும் கோரிக்­கை­களை ஏற்­று­க்கொள்ள வேண்­டிய கட்­டாயம் ஜன­நா­ய­கத்தை ஆத­ரிக்கும் வேட்­பா­ளர்கள் அனை­வ­ருக்கும் உள்­ளது. அது மட்டுமல்ல தமிழ் மக்­களின் உரி­மைக்­கான போராட்­டத்தின் ஒரு வழி­முறை முடி­வுக்கு வந்­தாலும் ஜன­நா­யக ரீதி­யாக இன்றும் நாம் போராட்­டத்தை முன்­னெ­டுத்­துக் ­கொண்டே வரு­கின்றோம்.

இதில் எமக்­குள்ள ஒரே­யொரு ஜன­நா­யக ஆயுதம் வாக்­கு­ரி­மை­யாகும். அதனை கைவி­டக்­ கூ­டாது.

யாருக்கு வாக்­க­ளிப்­பது என்­பது குறித்து ஆராய முடியும். ஆனால் எமது எதிர்ப்பை வெளிப்­ப­டுத்த தேர்­தலைப் புறக்­க­ணிக்க வலி­யு­றுத்­தக்­ கூ­டாது. அவ்­வாறு கூறும் நபர்­களின் கருத்­து­களை மக்கள் ஏற்­றுக்­கொள்­ளவும் கூடாது. 

கடந்த 2005ஆம் ஆண்டு தமிழர் தரப்பு தேர்தலைப் புறக்கணிக்க ஒரு நியாயமான காரணி இருந்தது. ஆனால் இப்போது தேர்தலைப் புறக்கணிக்க எந்த அவசியமும் இல்லை. ஆகவே தமிழ் மக்கள் தேர்தலில் தமது முழுமையான பங்களிப்பை செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08