சமூ­கத்­தி­னது நலனை முன்­னி­றுத்தி தமிழ் கட்­சிகள் பொது இணக்­கப்­பாட்­டுக்கு வந்­தி­ருப்­பது முன்­மா­திரி - ஹசன் அலி

Published By: Jayanthy

17 Oct, 2019 | 01:49 PM
image

தமிழ் தேசத்தை அங்­கீ­க­ரித்து அதற்கு தனி­யான இறைமை உண்டு என்­பதை ஏற்றுக் கொள்ள வேண் டும் என்­பது உட்­பட 13 அம்சக் கோரிக்­கை­களை 5 தமிழ் கட்­சிகள் ஒரு­மித்து நின்று முன் நிபந்­த­னை­க­ளாக பிர­தான வேட்­பா­ளர்­களின் முன்­னி­லைக்கு சமர்ப்­பிக்க நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­மையை ஐக்­கிய சமா­தான கூட்­ட­மைப்பு பெரிதும் வர­வேற்று மனம் உவந்து பாராட்­டு­கின்­றது.என்று இக்­கட்­சியின் செய­லாளர் நாயகம்  ஹசன் அலி தெரி­வித்தார்.

இது தொடர்­பாக இவர் விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் குறிப்­பிட்­டுள்­ளதாவது,

தமிழ் கட்­சி­களின் ஒரு­மித்த இம்­ம­கத்­தான முயற்சி வெற்றி பெற வேண்டும் என்­பது எமது பெரு­வி­ருப்­பமும், பிரார்த்­த­னையும் ஆகும். அதே நேரத்தில் தமிழ் சமூ­கத்தின் நலன்­களை முன்­னி­றுத்­தி­ய­வர்­க­ளாக இவ்­வி­ட­யத்தில் தமிழ் கட்­சி­களை பொது இணக்­கப்­பாட்­டுக்கு கொண்டு வரு­கின்ற பகீ­ரத முயற்­சியில் ஈடு­பட்டு அதில் வெற்றி அடைந்­துள்ள பல்­க­லைக்­க­ழ­கங்­களின்  தமிழர் மாணவர் ஒன்­றி­யங்­க­ளையும் நாம் வாழ்த்தி மகிழ்­கின்றோம். 

மேலும் ஐக்­கிய சமா­தான கூட்­ட­மைப்­பி­ன­ரா­கிய நாம் எம்மை அழைத்து பேசிய தரப்­பி­ன­ருக்கு ஜனா­தி­பதி  தேர்­தலில் ஆத­ரவு வழங்­கு­வ­தற்கு சிறு­பான்மை மக்­களின் குறிப்­பாக முஸ்லிம் சமூ­கத்தின் நலன்­களை முன்­னி­றுத்­தி­ய­வர்­க­ளாக 13 அம்சக் கோரிக்­கை­களை முன்­நி­பந்­த­னை­க­ளாக முன் வைத்து அவர்­களின் பரி­சீ­ல­னைக்கு உட்­ப­டுத்தி, அவை தொடர்­பாக அவர்­க­ளுடன் இரு சுற்று பேச்சு வார்த்­தை­களை நடத்தி, இப்­பொ­ழுது நிறைவு பேச்­சு­வார்த்­தைக்கு தயா­ரான தரு­ணத்தில் வந்து நிற்­கின்றோம் என்­ப­தையும் இத்­த­ரு­ணத்தில் பொருத்­தப்­பாடு கருதி அறிய தரு­கி­ன்றோம்.

எமது பெருந்­த­லைவர் அஷ்ரப் இந்­நாட்டின் இறைமை உள்ள எல்லா இன மக்­களும் அவ­ர­வர்­க­ளுக்கு உரிய தேசியம், தனித்­துவம், சுய நிர்­ணயம், உரிமை, சுதந்­திரம், இருப்பு, பாது­காப்பு ஆகி­ய­வற்­றுடன் இந்­நாட்டில் ஐக்­கியம், சமா­தானம், சகோ­த­ரத்­துவம் கொண்­ட­வர்­க­ளாக நிம்­ம­தி­யாக, சுபிட்­ச­மாக வாழ வேண்டும் என்று கனவு கண்­டதன் அடிப்­ப­டை­யிலே அவர்கள் எல்­லோ­ரையும் ஒன்­றி­ணைக்­கின்ற அர­சியல் இயக்­கத்தை உரு­வாக்கி,  ஒன்­று­பட்ட தேசத்தை கட்டி எழுப்­பு­கின்ற பெரு­மு­யற்­சியில் ஈடு­பட்டு அந்த இலக்கை நோக்கி வெற்­றி­க­ர­மாக பய­ணித்து கொண்­டி­ருந்­த­போதே  உயிர் துறக்க நேர்ந்தார்.

ஆயினும் அவரின் மறை­வுக்கு பின்னர் முஸ்லிம் தலை­மைகள் திசை மாறிய பற­வை­க­ளாக மாறி பேரி­ன­வா­தத்தின் அடி­வ­ரு­டி­க­ளாக முகவர் பாத்­தி­ரங்­களை ஏந்தி கொண்டு அழுக்­கு­களை ஆப­ர­ணங்கள் என்று நினைத்து உடல் முழு­வதும் அணிந்து வைத்­தி­ருக்­கின்­றார்கள். அவை விலங்­கு­க­ளாக மாறி அவர்­களை பிணித்து வைத்­தி­ருக்­கின்­றன. இவ்­வி­த­மாக சீர­ழிந்து போய் கிடக்­கின்ற முஸ்லிம் தலை­மைகள் முஸ்லிம் சமூ­கத்­தையும் ஒட்­டு­மொத்­த­மாக சீர­ழித்து கொண்­டி­ருக்­கின்­றன. 

முஸ்­லிம்­களின் வாக்­கு­களை பண்­ட­மாற்று பொருட்­க­ளா­கவும், வியா­பார பண்­டங்­க­ளா­கவும் மாற்றி இருப்­பது மட்டும் அல்­லாமல் பெருந்­தே­சிய கட்­சிக்கு நிபந்­தனை அற்ற ஆத­ரவை வழங்­கு­வதில் வர­லாற்று ஒற்­று­மையை அடைந்து விட்­டார்கள் என்­ப­தாக மார்பு தட்­டு­கின்ற இவர்­களின் ஈனச் செயல் எமக்கு ஆழ்ந்த கவ­லையை தந்­தி­ருக்­கின்ற நிலையில் தமிழ் தலை­மை­களின் முன்­மா­திரி எமக்கு ஆறு­தலை தரு­கின்­றது.

இறைமை உள்ள எமது முஸ்லிம் சமூ­கத்தின் அர­சியல் தலை­மைகள் ஒற்­றுமை இழந்து காணப்­ப­டு­கின்­றனர் என்­பதும் யாவரும் அறிந்த உண்­மையே. முஸ்லிம் சமூ­கத்தின் அர­சியல் தலை­மை­களை ஒன்­று­ப­டுத்தி நேர்­வ­ழிக்கு கொண்டு வரு­வ­தற்கு கடந்த காலங்­களில் நாம் எம்­மா­லான அனைத்து முயற்­சி­க­ளையும் முன்­னெ­டுத்து இருக்­கின்றோம். இப்­பொ­ழுதும் எம்மால் அவை போன்ற முன்­னெ­டுப்­பு­களை நிச்­சயம் மேற்­கொள்ள முடியும். ஆயினும் அதற்கு அரசியல் சாயம் பூசி விடுவார்கள். 

எனவே அந்த பாரிய பொறுப்பை முஸ்லிம் புத்திஜீவிகள் மற்றும் சிவில் சமூகம் ஆகியவற்றையும் இணைத்து கொண்டு பல்கலைக்கழகங்களின் முஸ்லிம் மாணவர் ஒன்றியங்கள் கைகளில் எடுத்தவர்களாக தமிழ் மாணவர் ஒன்றியங்களை முன்னுதாரணங்களாக கொண்டு முழுவீச்சுடன் அந்த இலக்கை நோக்கி  பயணிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை இத்தருணத்தில் முன்வைக்கின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59