மனைவியின் தம்பியை கோடரியால் அடித்துக் கொலை செய்த தந்தையும் மகனும் தலைமறைவு

Published By: Daya

17 Oct, 2019 | 11:17 AM
image

யாழ்ப்பாணம் அரியாலை மணியந்தோட்டத்தில் இளைஞர் ஒருவர் கோடரியால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய தந்தையும் மகனும் தலைமறைவாகியுள்ளனர் என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

“இளைஞனை அவரது மூத்த சகோதரியின் கணவரே கொலை செய்துள்ளார்.  சகோதரியின் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு உண்டு. அந்தப் பெண்ணை தேடிச் சென்ற இளைஞன் தனது சகோதரியின் வாழ்க்கையைப் பாழாக்கவேண்டாம் என்று கண்டித்து வந்துள்ளார்.

இந்நிலையில், இளைஞன் தன்னை மிரட்டியதாக அந்தப் பெண் கொலை செய்தவருக்குத் தகவல் வழங்கியுள்ளார். 

இந்நிலையில்,  சகோதரியின் கணவரின் தந்தை வீதியால் சென்ற இளைஞனைப் பிடித்து வைத்திருக்கச் சகோதரியின் கணவர் கோடரியால் தலையில் பலமாக அடித்ததுடன், கண்மூடித்தனமாக இளைஞனைத் தாக்கியுள்ளனர்.

கொலை செய்த இருவரும் தலைமறைவாகியுள்ளனர்” என்று நீதிவான் முன்னிலையில் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம், அரியாலை – மணியம் தோட்டம் பகுதியில் இந்தச் சம்பவம் நேற்று முன்தினம்  செவ்வாய்க்கிழமை மாலை இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றது.

சம்பவத்தில் மணியந்தோட்டம் 5ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த  33 வயதான கொன்ஸ்ரன் கலஸ்ரன் என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார். 

சம்பவ இடத்துக்கு நேற்று  புதன்கிழமை சென்ற யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் விசாரணைகளை முன்னெடுத்தார். அத்துடன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள இளைஞரின் சடலத்தையும் நீதிவான் நேரில் சென்று பார்வையிட்டார்.

உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் இளைஞனின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:26:34
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34