வீடுகளை சுத்தப்படுத்துவதற்கு இராணுவத்தினரை பயன்படுத்த முடிவு

Published By: Raam

23 May, 2016 | 08:19 AM
image

வெல்­லம்­பிட்டி, கொலன்­னாவ பிர­தே­சத்தில் வெள்­ளத்தால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு தொடர்ந்தும் நிவா­ர­ணங்கள் வழங்­கு­வ­தற்கும் வீடுகள் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு தற்­கா­லிக வீடுகள் அமைத்­துக்­கொ­டுப்­ப­தற்கும் அவர்கள் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னை­க­ளுக்கு உட­னடி தீர்­வுகள் வழங்­கு­வ­தற்கும் தீர்­மானிக்­கப்­பட்­டுள்­ளது.

வெல்­லம்­பிட்டி, கொலன்­னாவ பிர­தே­சத்தில் வெள்­ளத்தால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு தொடர்ந்து நிவா­ர­ணங்கள் மற்றும் அவர்கள் மீண்டும் வீடு­க­ளுக்கு செல்­வ­தற்கு

தேவை­யான வச­திகள் தொடர்­பாக ஆராயும் உயர்­மட்ட கூட்டம் நேற்று வெல்­லம்­பிட்டி கொலன்­னாவ பிர­தேச செய­ல­கத்தில் இடம்­பெற்­றது. இதன்­போதே மேற்­படி தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட்­ட­தாக கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.

மேற்­படி கூட்­டத்தில் அமைச்­சர்­க­ளான ஏ.எச்.எம்.பௌசி, றிஷாத் பதி­யுதீன், சுசில் பிரே­ம­ஜெ­யந்த, முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம்.மரிக்கார், சுனில் ஹதுன்­னெத்தி மாகாண சபை உறுப்­பி­னரான பாயிஸ், முல்­லே­ரியா கொடி­கா­வத்த பிர­தேச சபை தலைவர் சோலங்­கா­ரச்சி மற்றும் பிர­தேச செய­லா­ளர்கள் பொலிஸ் அதி­கா­ரி­காகள் மத­கு­ரு­மார்கள் என பலர் கலந்­து­கொண்­டுள்­ளனர்.

இது குறித்து முஜிபுர் ரஹ்மான் எம்.பி. தொடர்ந்து கூறு­கையில்,

வெள்­ளத்தால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்­பாக இங்கு விரி­வாக ஆரா­யப்­பட்­ட­துடன் அதற்கு தேவை­யான தீர்­மா­னங்­களும் எடுக்­கப்­பட்­டன. குறிப்­பாக பாதிக்­கப்­பட்ட மக்­களில் மீண்டும் அவர்­களின் வீடு­க­ளுக்கு செல்­ல­மு­டி­யாத நிலைமையில் இருப்­ப­வர்­க­ளுக்கு தற்­கா­லிக கூடா­ரங்­களை அமைத்து அவர்­களை தங்­க­வைப்­ப­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

அத்­துடன் மீண்டும் வீடு­க­ளுக்கு செல்­வ­தற்கு முடி­யு­மாக இருப்­ப­வர்­களின் வீடு­களை சுத்­தப்­ப­டுத்தும் பொறுப்பை இரா­ணு­வத்தில் இருக்கும் தொண்டர் அமைப்­புக்கு வழங்குவதென்றும். அதே­போன்று அந்த பகு­தியில் பாரி­ய­ளவில் திருட்டு சம்­ப­வங்கள் இடம்­பெ­று­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அதற்­காக பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்கு பொலி­ஸாரை ஈடு­ப­டுத்­து­வ­தற்கும் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது.

மேலும் பாதிக்­கப்­பட்டு முகாம்­களில் இருக்கும் மக்­க­ளுக்கு தொடர்ந்து சமைத்த உணவு வழங்­கு­வ­தற்கும் உற­வி­னர்­களின் வீடு­களில் இருப்­ப­வர்­க­ளுக்கு உலர் உண­வு­களை வழங்­கு­வ­தற்கும் இங்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

அத்­துடன் வெள்­ளத்தால் பாதிக்­கப்­பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தேவையான பாடசாலை உபகரணங்கள் அச்சுப்புத்தகங்கள், சீருடைகள் மற்றும் காலணிகள் தொடர்பில் பட்டியல் ஒன்றை தயாரிப்பதற்கு மாகாண கல்வி அமைச்சு ஊடாக பாடசாலை அதிபர்களுக்கு அறிவித்தல் கொடுப்பதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51