ஜந்து கட்சிகளின் ஒற்றுமை மக்களை ஏமாற்றும் செயற்பாடு - டக்ளஸ்

Published By: Digital Desk 4

16 Oct, 2019 | 06:24 PM
image

ஜந்து கட்சிகளின் ஒற்றுமை என்பது மக்களை ஏமாற்றும் செயற்பாடாக இருக்கிறது. தேர்தல் காலங்களில் ஜக்கியத்தை பற்றி பேசி, இனவாத சூழலை உருவாக்கி குளிர் காய்வதே அவர்களுடைய நோக்கம்.எனவே மீண்டும் மக்களை ஏமாற்றும் ஒரு முயற்சியாகவே இந்த ஐந்து கட்சிகளின் ஒன்றிணைவை பார்க்கமுடியும். என்று யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

வவுனியாவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இந்த கட்சிகளின் செயற்பாடு ஒரு பொய்யானதாகவே தெரிகிறது. இருப்பதை இல்லாமல் செய்யும் வேலையையே இந்த கட்சிகள் செய்ய போகின்றார்கள்.இருப்பதை பாதுகாத்து முன்னோக்கி செல்ல வேண்டும் அதுவே எமது கொள்கை.எனினும் இம்முறை மக்கள் ஏமாறமாட்டார்கள் என நான் நம்புகிறேன். 

தமிழ் கட்சிகள் அல்லது கூட்டமைப்பினர் இன்றைய ஆட்சியை உருவாக்குவதற்காக எவ்வளவோ. உசுப்பேத்தல்களை, மக்களிடத்தில் சொன்னார்கள். ஆனால் இன்று மக்கள் அதிலிருந்து விடுபட்டு அவர்களின் சின்ன,சின்ன தேவைகளிற்காக கூட வீதியில் இறங்கி போராடும் நிலைமைக்கு தள்ளபட்டு கொண்டிருக்கிறார்கள்.  நாம் அப்படியல்ல எதை சொல்கிறோமோ அதை செய்பவர்கள், செய்வதை தான் சொல்பவர்கள்.

இராணுவ நடவடிக்கை வடக்கை நோக்கி  மேற்கொள்ளபடும் போது தமிழ் மக்கள் பேரழிவினை சந்திக்கபோகின்றார்கள். எனவே நாம் அன்றைய ஜனாதிபதி மகிந்தராயபக்சவுடன் பேச்சு வார்த்தை ஒன்றை மேற்கொள்வோம், நானும் அதில் கலந்துகொள்கின்றேன் என்று தமிழ் கூட்டமைப்பினரிடம் அன்று தெரிவித்தேன். 

அவர்கள் ஓம் என்று கூறிவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. ஏன் எனில் அவர்கள் அதனை விரும்பியிருந்தார்கள் போல தெரிகிறது. 

எனவே கூட்டமைப்பு இன்றைய அரசிற்கு முட்டுகொடுத்து கொண்டு மக்களின் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்காமல் இருக்கிறது. அரசியல் உரிமை, அன்றாட பிரச்சனை. அபிவிருத்தி  இந்த மூன்றிற்குள்ளும் தான் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சகல விதமான பிரச்சனைகளும் அடங்கி இருக்கிறது. அதனையே நாம் முன்வைத்திருக்கிறோம்.  அவற்றை செய்வோம், செய்விப்போம். அரசு எங்களை ஏமாற்றி விட்டது என்று நான் ஒருபோதும் உங்களிடம் வந்து சொல்ல போவதில்லை, எனவே மக்கள் எங்களை நம்புங்கள், எம்மோடு அணி திரளுங்கள், நான் கடந்த காலங்களில் எந்த சூழ்நிலையிலும் மக்களை விட்டு ஓடியது கிடையாது. எமது கட்சியில் 98 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யாரும் எம்மை விட்டு விலகி போனதாக இல்லை. அவ்வாறு போனதாக தெரிவிக்கபடுவது வழமையான, பொய்யான பிரச்சாரமே. 

தென்னிலங்கையில் இருக்கும் கட்சியுடன் இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்தி அந்த வெற்றியில் பங்கெடுப்பதன் ஊடாக அதனை மக்களின் வெற்றியாக மாற்றிகொள்ள வேண்டும் அப்போது தான் மக்கள் வெற்றியாளர்களாக மாறுவார்கள். இதுவே தமிழ் கட்சிகளிடத்தில் எனது எதிர்பார்ப்பாக இருக்கிறது.ஆனால் கடந்த காலங்களில் மக்களை உசுப்பேற்றி வெற்றிகளை அடைந்து தங்களது சுயலாபங்களை தான் அவர்கள் அடைந்து கொண்டிருக்கிறார்கள். இங்கே அவர்கள் தான் வெற்றியாளர்களே தவிர மக்கள் அல்ல. 

தென்னிலங்கையிலே கோத்தபாய வெல்வதற்கான வாய்ப்புகள் தான் அதிகம் காணப்படுகின்றது. அந்த வெற்றியில் பங்களித்து அதனை மக்களுடைய வெற்றியாக மாற்றி கொள்ளுங்கள். அப்பொழுது தான் பிரச்சனைகளிற்கான தீர்வுகளை பெற்றுகொள்ளலாம்.

சிவாஜிலிங்கம் தேர்தலில் வெல்லபோவதல்ல. அது அனைவருக்கும் தெரிந்தவிடயம். ஆனால்  பொது வேட்பாளராக தமிழர் ஒருவர் நிறுத்தபடவேண்டும் என்று தமிழ் கட்சிகள் விரும்பினால் அதற்கு சிவாஜிலிங்கம் பொருத்தமானவர். அதற்கான தகுதிகள் அவரிற்க்கு இருக்கிறது. எனினும் அவர் நிற்பதால் மக்களிற்கு எந்த பிரியோசனமும் கிடையாது.

பலாலி விமான நிலையத்தில் வெளிமாவட்டத்தவர்கள் பதவிக்கு அமர்த்தப்படுவதற்கு முழு காரணமும் கூட்டமைப்பினரே. நாம் ஆட்சியில் இருக்கும் பொழுது  அவ்வாறான செயற்பாடுகளிற்கு இடம் கொடுக்கவில்லை.

பலாலி விமான நிலையம் எமக்கு தேவையானது. எனினும் அபிவிருத்தி என்பது மக்களின் வளங்களை, நலன்களை சுறண்டாத வகையில் இருக்கவேண்டும்.பலாலி விமான நிலையத்தின் முகப்பு பகுதி முன்னம் இருந்தமை போன்றே இருக்க வேண்டும் என்று வசாவிளான் பகுதி மக்கள் என்னிடம் தெரிவித்திருந்தனர்.ஆனால் சுயலாப அரசியல் கட்சியின் தலைவர் தன்னுடைய மகனிற்கு உணவகம் ஒன்றை அமைப்பதற்காக அந்த வீதியை மாற்றி இருக்கிறார். அவரிடம் அது தொடர்பாக கேட்டபோது தனக்கு தெரியாது என்று சென்னாராம். ஆனால் அவர் தான் அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைத்ததாகவும் எமக்கு சொல்ல படுகின்றது. அந்த மக்களின் கருத்தை நாம் ஆதரிக்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தேவப்பெருமாளுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 02:50:20
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44