பிக்சல் 4 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது கூகுள் நிறுவனம்

Published By: Digital Desk 3

16 Oct, 2019 | 03:29 PM
image

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 4 மற்றும் பிக்சல் 4 XL ஸ்மார்ட்போன்கள் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிக்சல் 4 ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் FHD+ OLED ஸ்கிரீன், பிக்சல் 4 XL ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் QHD+ OLED ஸ்கிரீன் கொண்டிருக்கிறது. இரு டிஸ்ப்ளேக்களிலும் 90 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது.

இரு ஸ்மார்ட்போன்களிலும் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கான அண்ட்ரோய்ட் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது. இத்துடன் கூகுள் உருவாக்கிய டைட்டன் எம் செக்யூரிட்டி சிப் வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 12.2 எம்.பி. கேமரா, 16 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர புகைப்படங்களை அழகாக்கும் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. புதிய பிக்சல் 4 ஸ்மார்ட்போன்களில் மோஷன் சென்ஸ் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இது கூகுள் நிறுவனத்தின் பிராஜக்ட் சோலி மூலம் இயங்குகிறது. இது ஸ்மார்ட்போன் அருகாமையில் நிகழும் அசைவுகளை கண்டறியும் திறன் கொண்டிருக்கிறது.

இது ஸ்மார்ட்போனினை கையில் எடுக்க முற்படும் போது பேஸ் அன்லாக் அம்சத்தை இயக்க தயார்படுத்தும். ஸ்மார்ட்போன் அருகாமையில் யாரும் இல்லையெனில் திரை ஓப் ஆகிவிடும். 

இரு ஸ்மார்ட்போன்களும் ஜஸ்ட் பிளாக், கிளியர்லி வைட் மற்றும் லமிட்டெட் எடிஷன் ஓ சோ ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கிறது. பிக்சல் 4 ஸ்மார்ட்போனின் 64 ஜி.பி. வெர்ஷன் விலை 799 டொலர்கள் (இலங்கை மதிப்பில் சுமார் ரூ. 145132) என்றும் 128 ஜி.பி. மாடல் விலை 899 டாலர்கள் (இலங்கை மதிப்பில் சுமார் ரூ. 163296) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பிக்சல் 4XL ஸ்மார்ட்போனின் 64 ஜி.பி. மாடல் விலை 899 டொலர்கள் (இலங்கை மதிப்பில் சுமார் ரூ. 163296) என்றும் 128 ஜி.பி. மாடல் விலை 999 டொலர்கள் (இலங்கை மதிப்பில் சுமார் ரூ. 181461) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இரு ஸ்மார்ட்போன்களும் அக்டோபர் 24 ஆம் திகதி முதல் விற்பனைக்கு வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26